தினமும் கலெக்டர் அலுவலகத்திற்கு அலையும் முதியோர்கள்: ஓய்வூதியம் வராததால் புலம்பல்
மதுரை, அக். 24-மதுரை மாவட்டத்தில் வங்கிக் கணக்குடன் ஆதார் அட்டையை இணைக்காத 6500 முதியோர்களுக்கான ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளதால் தினமும் கலெக்டர் அலுவலகத்திற்கு அலைகின்றனர்.அரசு சார்பில் முதியோர்களுக்கு மாதந்தோறும் ரூ.1200 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. பலருக்கு 2 மாதங்களாக வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் தாலுகா, கலெக்டர் அலுவலகங்களுக்கு அலைகின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் புகார் மனுக்களை பதிவு செய்யும் அறைக்கும் தினமும் 20 முதல் 25 பேராவது பணம் வராதது குறித்து கேட்கின்றனர்.பலர் தங்கள் வங்கிக் கணக்குடன் போன் இணைப்புடன்…
