ரெளடி கொலை வழக்கில் மேலும் 4 போ் கைது

சிவகங்கை, அக். 23-சிவகங்கை அருகே ரௌடி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய மேலும் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.சிவகங்கையில் ரௌடி மதன் (26) கடந்த 18-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் போலீஸாா் தனிப்படை அமைத்து குற்ற வாளிகளைத் தேடி வந்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய சிவகங்கையைச் சோ்ந்த குமாா் மகன் சந்தோஷ் (19), கருப்பசாமி மகன் ஜெயமாணிக்கராஜ் (20), மாணிக்கம் மகன் முத்துசூா்யா (20), மதுரை பெரியசாமி மகன் விக்னேஷ் (23)…

Read More

தேவர் குருபூஜைக்கு முதலமைச்சர் வருவாரா?அமைச்சர் ராஜீவ் சொன்ன தகவல்

கமுதி, அக். 23-கமுதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு முதல்வர் விஜய் வருகை உறுதிப்படுத்தப்படவில்லை என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் தகவல் தெரிவித்துள்ளார்.ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை விழா வரும் அக்டோபர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இவ்விழாவில் பல்வேறு அரசியல் கட்சியினர் பொதுமக்கள் அவரது நினைவிடத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துகின்றனர்.குருபூஜை முன்னேற்பாடு பணிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர்…

Read More

பா.ஜ.,வினர் விழிப்புணர்வு ஊர்வலம்

திண்டுக்கல், அக்.23-திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் இன்று நடந்தது.மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். பா.ஜ., சிறுபான்மைப் பிரிவின் தேசியச் செயலாளர் வேலுார் இப்ராஹிம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாநிலச் செயலாளர் கதிர்நரசிங்கபெருமாள், தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிவேல்சாமி, மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் முன்னிலை வகித்தனர்.திண்டுக்கல் கலெக்டர் முகாம் அலுவலகம் முன் துவங்கிய ஊர்வலம் எம்.ஜி.ஆர்., சிலை, காமராஜர் சிலை, பெரியார் சிலை ரவுண்டானா, மாநகராட்சி ரோடு…

Read More

ஈரோடு அருகே ஆட்சியர் கார் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

ஈரோடு, அக். 23-வெள்ளாளபாளையம் பகுதியில் ஈரோடு ஆட்சியர் கந்தசாமி சென்ற கார் மோதியதில் சண்முகம் (50) என்பவர் உயிரிழந்தார்.ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, இன்று சத்தியமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது காரில் ஈரோடு நோக்கிச் சென்று கொண்டிருந்தார். கோபி அருகே உள்ள வெள்ளாளபாளையம் பகுதியில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே நான்கு வழிச் சாலையில் அவர் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியில் கார் வருவதைக் கவனிக்காமல் வெள்ளாங்கோயிலைச் சேர்ந்த விவசாயி சண்முகம் என்பவர் தனது இருசக்கர…

Read More

நீலகிரி மாவட்டத்தில் பருவமழை தீவிரமானதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

நீலகிரி, அக். 23-நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த, 15ல் துவங்கியுள்ளது. குன்னுார் பகுதியில் நள்ளிரவில் அதிக மழை பெய்து வருகிறது. ஆண்டுதோறும் அக்., 21 முதல் நவ., 15 வரையிலான நாட்கள் உச்சக்கட்ட பேரிடர் அபாய காலமாக வரலாற்று தரவுகளில் பதிவாகி உள்ளது.அதன்படி, கடந்த, 1978, 1990, 1998, 2005, 2021, 2023 ஆண்டுகளில் குன்னுாரில் நிகழ்ந்த அனைத்து பெரும் பேரிடர்கள், அக்., மாதம் பருவமழை துவங்கிய, 8 முதல் 13 வது நாட்களுக்குள் ஏற்பட்டுள்ளது….

Read More

மக்களின் நலனுக்காகத்தான்மோடியுடன், விஜய் இணைந்து பணியாற்றுகிறார்அமைச்சர் செங்கோட்டையன் கருத்து

திருச்சி, அக். 23-முதல்வர் விஜய்யிடம் இரட்டை நிலைப்பாடு எதுவும் இல்லை எனவும், மக்களின் நலனுக்காகத் தான் பிரதமர் மோடியுடன் அவர் இணைந்து பணியாற்றுகிறார் எனவும் வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிக்காக 1,500…

Read More

வெற்றிப்பயணம் பேருந்தில் பெண்களை மதிப்பதே இல்லை

ராமேஸ்வரம், அக். 23-ராமேஸ்வரத்தில் பெண் ஒருவர், வெற்றிப்பயணம் பேருந்து குறித்து ஆதங்கத்துடன் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில், வாரத்தில் ஒரு நாள் செவ்வாய்க்கிழமையன்று வாரச்சந்தை நடைபெறும். அன்றைய தினம், பொருட்கள் வாங்குவதற்காக சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள், பேருந்துகளில் பயணம் செய்து சந்தைக்கு வருவது வழக்கம்.வாரச்சந்தையில் பொருட்களை வாங்குவதற்காக பெண்கள் சிலர், கோயில் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நேற்றுமுன்தினம் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தமிழக…

Read More

பணம் கேட்ட வரி வசூல் அலுவலர்?கோவை வடக்கு மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

கோவை, அக். 23-கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் வரி வசூல் செய்யும் அலுவலர் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புப் போலீசார் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாநகராட்சியின் வடக்கு மண்டல அலுவலகத்தில் வரி வசூல் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அங்கு வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர் ஒருவர், வரி செலுத்த வந்த நபரிடம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனை ஏற்க மறுத்த அந்த…

Read More

அமித்ஷா போட்ட உத்தரவு: உறைந்துபோன எஸ்பி வேலுமணி

சென்னை, அக். 23-அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்பினருக்கும் இடையே நிலவி வந்த அதிகாரப் போட்டி தற்போது ஒரு புதிய திருப்பத்தை எட்டியுள்ளது.டெல்லி பாஜகவின் நேரடி பார்வையும், எடப்பாடி பழனிசாமிக்குக் கிடைத்த மறைமுக ஆதரவும் இவர்களின் ஒற்றைத் தலைமைக்கு எதிரான முயற்சிகளைத் தடுத்து நிறுத்தியுள்ளன. கொங்கு மண்டலத்தில் எஸ்பி வேலுமணியின் செல்வாக்கு மற்றும் வன்னியர் சமுதாயத்தில் சிவி சண்முகத்தின் தாக்கம் குறித்து டெல்லி மேலிடம் நடத்திய ரகசிய விசாரணையில், இரு தலைவர்களின்…

Read More

“இதுதான் ஜனநாயகமா?” – கனிமொழி எம்.பி. பேட்டி

சென்னை, அக். 23-சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி.இன்று (21.10.2026) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ‘இவர்கள் (த.வெ.க.) ஆட்சிக்கு வந்த பிறகுதான் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எதிரான வன்முறைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. ஒரு விதத்தில், இவர்களுடைய கட்சியில் இருக்கக்கூடியவர்கள் பெண்களுக்கு எதிராக சோசியல் மீடியாவில் போடக்கூடிய பதிவுகளும், பெண்களுக்கு எதிரான வன்முறையை அதிகமாகத் தூண்டக்கூடிய ஒன்றாக…

Read More