திருப்பரங்குன்ற தீபம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க அரசு தயார் – திருமாவளவன்
மதுரை, நவ. 25-திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றக் கூடாது என வலியுறுத்தி மதுரையில் மதநல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் நேற்று பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து, பேரணிக்கு பதிலாக ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்றார்.முன்னதாக, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதன் மூலம் தமிழக அரசு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளது. அதில்…
கூட்டுறவு அங்காடிகள் மூலம் ரூ.100-க்கு 10 வகை காய்கறிகள்:மதுரையில் 4,715 ‘வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புகள்’
மதுரை, நவ. 25-பொதுமக்களின் நலன் கருதி கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய “வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு” விற்பனை பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. மதுரை மாவட்டத்தில் “வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு” மொத்தம் 4,715 எண்ணம் விற்பனையானது.வெளிச்சந்தையில் காய்கறிகளின் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் அன்றாடச் சமையலுக்குத் தேவையான அத்தியாவசியக் காய்கறிகள் நியாயமான மற்றும் மலிவான விலையில் தடையின்றிக் கிடைக்கச் செய்யவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு…
அனைத்து பிரிவுகளிலும் பலவிதமான குற்றச்சாட்டு குறிப்பாணைகள்:துணை ஆணையாளர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அதிருப்தி-இதற்கெல்லாம் யார் காரணம்?
மதுரை, நவ. 25-மதுரை மற்ற மாநகராட்சிகளில் இருந்து தாராளமாக பதவி உயர்வுடன் பணியிட மாறுதலில் மதுரை மாநகராட்சிக்கு பலர் வந்து பணிபுரியும் நிலையில், மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து தரப்பு பணியாளர்களுக்கும் பதவி உயர்வு வழங்காததுடன் கடும் பணிச்சுமையுடன் பலவிதமான குற்றச்சாட்டு குறிப்பாணைகளும், பொருத்தமற்ற தண்டனைகள் வழங்குவது கடும் மனச்சுமையை அளிப்பதாக ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.மதுரை மாநகராட்சியில் ஓட்டுநர்கள் மட்டுமின்றி, முக்கிய அலுவலகப் பிரிவுகளில் உள்ள நிரந்தர பணியிடங்கள் நீக்கப்பட்டு ஒப்பந்தப் பணியாளர்களே நியமிக்கப்படுகின்றனர். மைய அலுவலகங்கள்,…
144 தடை உத்தரவை யார் தயாரித்தது? அவரை பாராட்ட வேண்டும்: திருப்பரங்குன்றம் கேசில் நீதிபதி ஜிஆர்.சுவாமிநாதன்
மதுரை, நவ. 25-திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா பிறப்பித்த 144 தடை உத்தரவுக்கு எதிராகத் தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அந்த உத்தரவைத் தயாரித்த விதத்தைக் குறிப்பிட்டுக் கடுமையாக விமர்சித்துள்ளது.தடை உத்தரவு நகலை வாசித்துக் காட்டிய நீதிபதிகள், இந்த உத்தரவை யார் தயாரித்தாரோ அவரைப் பாராட்ட வேண்டும்.. மிகத் திறமையாகத் தயாரித்துள்ளார்கள் என நக்கலாகத் தெரிவித்துள்ளனர்.மதுரை திருப்பரங்குன்றம் மலை…
திருப்பரங்குன்றம் உச்சி பிள்ளையார் கோவிலில் வழக்கம் போல் தீபம் ஏற்றப்பட்டது
மதுரை, நவ. 25-மதுரை, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள உச்சிப் பிள்ளையார் கோயிலில் அண்மைக்கால நடைமுறைப்படி தீபம் ஏற்ற கொப்பரை எடுத்துச் செல்லப்பட்டது.திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து, உச்சிப் பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றுவதற்கு தாமிர கொப்பரை எடுத்துச் செல்லப்பட்டது. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோவில் அருகே வழக்கமான இடத்தில் நேற்று மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.தீபம் ஏற்றுவதற்கான தாமிரக் கொப்பரை, 40 டின் நெய், 150மீட்டர் காடா துணி , 5kg கற்பூரம் உள்ளிட்ட பொருட்களை…
த்ரிஷாவுக்கு தடைபோட்ட விஜய்:அனிருத் ரிஷப்சனில் நடந்த பகீர் பின்னணி
சென்னை, நவ. 25-சென்னையில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்த இசையமைப்பாளர் அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிதான் இப்போது கோலிவுட் முதல் அரசியல் வட்டாரம் வரை ‘டாக் ஆஃப் தி டவுன்’.திரையுலகின் உச்ச நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், அரசியல் விஐபிக்கள் எனப் பலரும் படையெடுத்த இந்த பிரம்மாண்ட விழாவில், நடிகை த்ரிஷா மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோர் கலந்துகொள்ளாததுதான் இப்போது சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.அனிருத் – காவ்யா மாறன் ரிசப்ஷனுக்கு நடிகை த்ரிஷாவுக்கு முறையாக…
கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியர் விவகாரம்: தவெக அரசை கடுமையாக விமர்சித்த டி.டி.வி. தினகரன்
சென்னை, நவ. 25-“கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்குத்தான்” என்பதைப் போல, கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியர் விவகாரத்தில் தவெக அரசு அம்பலப்பட்டு நிற்கிறது.இனியாவது நடவடிக்கை எடுப்பாரா? அல்லது வழக்கம்போல் வேடிக்கை மட்டும் பார்ப்பாரா முதலமைச்சர் விஜய்? என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் தனக்கு தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பித் தொல்லை கொடுத்ததாக, மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளரிடம் முறையாகப் புகார் அளித்திருப்பதாக இன்று நாளிதழ்களில்…
அருள் விக்னேஷை காப்பாற்ற உடந்தை: கூண்டோடு சிக்கும் தவெக அமைச்சர்கள்- ஆட்டம் காணும் தவெக அரசு
சென்னை, நவ. 25-பெண் ஐஏஎஸ் அதிகாரி விவகாரத்தில் அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை செய்தியாளர்களிடம் பேசுகையில், நேற்றுவரை புகாரே வரவில்லை என்று சாதித்து வந்த அரசு, தற்போது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுவிட்டதாகப் பின்வாங்கியிருப்பது தங்களுக்குக் கிடைத்த வெற்றி எனத் தெரிவித்துள்ளார்.செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் இன்பதுரை, “ஒரு பெண்ணின் கௌரவம், சுயமரியாதையைக் காக்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் அறிவுறுத்தலால் இந்த வழக்கு குறித்து அதிகம் பேச முடியாத நிலையில் இருக்கிறது. ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு நீதியைப் பெற்றுத் தந்த…
வீட்டுக் காவலில் வைத்துள்ள போலீசாரின் நடவடிக்கைக்கு நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்
நெல்லை, நவ. 25-திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் தமிழகத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்ற வலியுறுத்தி திருப்பரங்குன்றம் செல்லத் திட்டமிட்ட பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை போலீசார் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர்.அவரது வீட்டை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில் பாஜக மற்றும் இந்து முன்னணியைச் சேர்ந்த 480 பேரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் திருக்கார்த்திகை நாளன்று தீபம் ஏற்றுவது…
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரத்தில் முட்டுக்கொடுத்த அமைச்சர்கள்
சென்னை, நவ. 25-கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரத்தில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு சட்டமன்ற உறுப்பினர் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாகவோ, குடிபோதையில் அவரது இல்லத்திற்குச் சென்றதாகவோ கூறப்படும் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. சமூக வலைதளங்களில் வந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கருத்து தெரிவித்தது கண்டிக்கத்தக்கது. சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டு உண்மையைத் தெளிவுபடுத்திக் கொள்ளும் உரிமை அவருக்கு உள்ளது. இந்த விவகாரம் ஊடகங்களால் பெரிதுபடுத்தப்பட்டுத் தவறாகக்…
