Breaking News

மதுரை மாநகராட்சியில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவர்களை போட்டோஷூட் ஆணையாளர் அரசாணைப்படி மாற்றம் செய்வாரா?

மதுரை, நவ. 24-மதுரை மாநகராட்சியில் தவெக ஆட்சி வந்து 6 மாதங்களுக்கு மேல் நிறைவடைந்துள்ளது. திமுக, அதிமுகவின் 50 ஆண்டு திராவிட ஆட்சிக்கு முடிவு கட்டி தவெக அரியணையில் ஏறியது.லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சியை கொடுப்போம் என முதலமைச்சர் விஜய் கூறியிருந்தார். அவர் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளாட்சித்துறையிலேயே ஊழல் புகார் கொடிகட்டி பறக்கிறது. பிறப்பு இறப்பு சான்றிதழ், குடிநீர், சாலை, சாக்கடை, வரி உள்ளிட்ட பல சேவைகள் உள்ளாட்சித்துறைக்கு கீழ் வருகிறது.மதுரை மாநகராட்சியில் சொத்து வரியில்…

Read More

பிஸ்லெரி தண்ணீர் நிறுவனம் விளக்கம்

சென்னை, நவ. 24-பிஸ்லெரியின் பேக் செய்யப்பட்ட குடிநீரை ஆய்வுக்குட்படுத்தப்பட்டதில் சந்தேகத்திற்கிடமான சில பொருட்கள் கலந்திருப்பதாகவும், இதுதொடர்பாக அந்நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடரலாம் என்றும், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்து இருந்தது. இதுதொடர்பாக பிஸ்லெரி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பிஸ்லெரி நிறுவனத்திற்கு அறிவிப்பாணை அனுப்பியுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து நாங்கள் அறிவோம். இந்த விவகாரம் சுமார் 14 மாதங்களுக்கு முந்தையது….

Read More

திடீரென இபிஎஸ்-ஐ சந்தித்த லீமா ரோஸ் எம்.எல்.ஏ.

சென்னை, நவ. 24-அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை, லால்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்டின், சேலத்தில் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஆசீர்வாதம் பெற்றார்.கடந்த நவம்பர் 7ஆம் தேதி தனது பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்த லீமா ரோஸ் மார்டின், குடும்பத்தினருடன் ஆஸ்திரேலியாவில் இருந்ததால் அங்கேயே பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். மேலும், அங்கு நடைபெற்ற லாட்டரி மாநாட்டிலும் பங்கேற்றுள்ளார்.இதையடுத்து, நாடு திரும்பிய அவர், எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க நேரம்…

Read More

கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு

கேரளா, நவ. 24-கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் H5N1 வகையைச் சேர்ந்த பறவைக் காய்ச்சல் பரவியிருப்பதை, மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் பெறப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, தமிழக – கேரள எல்லைப் பகுதியான புளியரை சோதனைச்சாவடியில் கால்நடை பராமரிப்புதுறையினர் கடந்த 20.11.2026 முதல் தீவிரக் கண்காணிப்பில்…

Read More

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்ற முடியாது:மாநகராட்சி, நகராட்சி அலுவலர்களுக்கு செக்

சென்னை, நவ. 24-தவெக ஆட்சிக்கு வந்து 6 மாதங்களுக்கு மேல் நிறைவடைந்துள்ளது. திமுக, அதிமுகவின் 50 ஆண்டு திராவிட ஆட்சிக்கு முடிவு கட்டி தவெக அரியணையில் ஏறியது.லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சியை கொடுப்போம் என முதலமைச்சர் விஜய் சூளுரைத்தார். அவர் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளாட்சித்துறையிலேயே ஊழல் புகார் கொடிகட்டி பறக்கிறது. பிறப்பு இறப்பு சான்றிதழ், குடிநீர், சாலை, சாக்கடை, வரி உள்ளிட்ட பல சேவைகள் உள்ளாட்சித்துறைக்கு கீழ் வருகிறது. ஊழல் புகார் குறைவதில்லை என்பதால், நகராட்சி…

Read More

‘இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை’ தொடக்கம் லோகோ வெளியீட்டுக்கு ஏற்பாடு

நெல்லை, நவ. 24-திருநெல்வேலி மாவட்டத்தில் நடிகை திரிஷாவின் பெயரில் ‘இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை’ என்ற பெயரில் புதிய நற்பணி மன்றம் தொடங்கப்பட உள்ளது.இதற்கான சின்னம் (லோகோ) வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளதாக பேரவை நிர்வாகி ராஜகோபால் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் நடிகை திரிஷாவின் தீவிர ரசிகராக இருந்து வருவதாகவும், தற்போது அவரது பெயரில் ஓர் இயக்கத்தைத் தொடங்குவதற்கான சரியான காலகட்டம் அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.சமூக சேவைகளை முன்னெடுத்துச் செல்லும்…

Read More

உதகையில் சா்வதேசமெழுகு சிலை அருங்காட்சியகம்

நீலகிரி, நவ. 24-பிரதமா் நரேந்திர மோடி, தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் உள்ளிட்ட தலைவா்கள் மற்றும் பிரபலங்களின் உருவங்கள் மெழுகு கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.உதகையில் அமைந்துள்ள சா்வதேச மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ள பிரதமா் மோடி, முன்னாள் குடியரசுத் தலைவா் ஏபிஜே அப்துல் கலாம், முதல்வா் ச.ஜோசப் விஜய்யின் மெழுகு சிலைகள்.நீலகிரி மாவட்டம், உதகை படகு இல்லத்தில் சுற்றுலாத் துறை மற்றும் தனியாா் இணைந்து அமைத்துள்ள சா்வதேச மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் பிரதமா் நரேந்திர மோடி, தமிழக…

Read More

“என் மகளை கோவிலில் கொண்டு வந்துவிடுங்கள்”-செஞ்சி சிறுமியின் தாய் கண்ணீர்

விழுப்புரம், நவ. 24-“என் மகளை யாராவது கடத்திச் சென்றிருந்தால் கொண்டு வந்து எங்களிடம் விட்டுவிடுங்கள்” என செஞ்சி சிறுமி ஹேமலதாவின் தாய் பவானி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல்- பவானி! இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளன. மூத்த மகள் திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இளைய மகள் ஹேமலதா அங்குள்ள ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்தார்.7 வயதாகும் சிறுமி ஹேமலதாவுக்கு கடந்த…

Read More

தவெக ஆட்சி கவிழ வாய்ப்பே இல்லை- பெ. சண்முகம்

சென்னை, நவ. 24-தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்ததிலிருந்தே சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு மற்றும் தொழில் முதலீடுகள் அண்டை மாநிலமான ஆந்திராவுக்குச் செல்வது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை திமுக, அதிமுக, பாஜக ஆகிய எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. குறிப்பாக, இந்த ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது என்றும், விரைவில் கவிழ்ந்துவிடும் என்றும் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்த…

Read More

கொளத்தூர் இடைத்தேர்தலை புறக்கணிக்கும் அதிமுக?

சென்னை, நவ. 24-கொளத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுமா என்ற கேள்விக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான விஎஸ் பாபு உயிரிழந்து இரண்டு நாட்களே ஆகியுள்ளதாக கூறிய அவர், தேர்தலை அதிமுக சந்திக்குமா என்பது குறித்தும் விளக்கமளித்தார்.தமிழகத்தில் கொளத்தூர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி வந்த விஎஸ் பாபு மறைவு தவெகவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் இரு மாதங்களாக மருத்துவமனையில் இருந்த விஎஸ் பாபு கடந்த நவம்பர் 19ம் தேதி உயிரிழந்தார்….

Read More