‘இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை’ தொடக்கம் லோகோ வெளியீட்டுக்கு ஏற்பாடு

நெல்லை, நவ. 24-
திருநெல்வேலி மாவட்டத்தில் நடிகை திரிஷாவின் பெயரில் ‘இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை’ என்ற பெயரில் புதிய நற்பணி மன்றம் தொடங்கப்பட உள்ளது.
இதற்கான சின்னம் (லோகோ) வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளதாக பேரவை நிர்வாகி ராஜகோபால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் நடிகை திரிஷாவின் தீவிர ரசிகராக இருந்து வருவதாகவும், தற்போது அவரது பெயரில் ஓர் இயக்கத்தைத் தொடங்குவதற்கான சரியான காலகட்டம் அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
சமூக சேவைகளை முன்னெடுத்துச் செல்லும் உன்னத நோக்கத்துடன் இந்தப் பேரவை தொடங்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், பொதுமக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நற்பணிகளில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் விஜயுடன் இணைந்து நடிகை திரிஷாவும் மக்கள் பணிகளில் ஈடுபட்டால் அது பொதுமக்களுக்குப் பெரும் நன்மை பயக்கும் என்றும் தனது கருத்தைத் தெரிவித்தார்.
இந்தப் பேரவை தொடங்குவதற்கு இதுவரை எந்தவிதமான முன் அனுமதியும் பெறப்பட
வில்லை என்றும், இயக்கம் தொடங்குவது குறித்து நடிகை திரிஷாவிடமும் இதுவரை எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் ராஜகோபால் விளக்கமளித்தார்.
நடிகை திரிஷாவின் பெயரில் தொடங்கப்பட உள்ள இந்தப் புதிய நற்பணி மன்றத்தின் லோகோ வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *