கூட்டுறவு அங்காடிகள் மூலம் ​ரூ.100-க்கு 10 வகை காய்கறிகள்:மதுரையில் 4,715 ‘வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புகள்’

மதுரை, நவ. 25-
பொதுமக்களின் நலன் கருதி கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய “வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு” விற்பனை பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. மதுரை மாவட்டத்தில் “வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு” மொத்தம் 4,715 எண்ணம் விற்பனையானது.
வெளிச்சந்தையில் காய்கறிகளின் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த
வும், பொதுமக்களின் அன்றாடச் சமையலுக்குத் தேவையான அத்தியாவசியக் காய்கறிகள் நியாயமான மற்றும் மலிவான விலையில் தடையின்றிக் கிடைக்கச் செய்யவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் சார்பில் ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய “வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு” விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், அரை கிலோ தக்காளி, அரை கிலோ வெங்காயம், கத்தரிக்காய், பீன்ஸ், கேரட், இஞ்சி, தேங்காய், எலுமிச்சம்பழம் உள்ளிட்ட அன்றாடச் சமையலுக்குத் தேவையான 10 வகையான தரமான, புத்தம் புதிய காய்கறிகள் அடங்கிய தொகுப்பு ரூ.100 என்ற சலுகை விலையில் வழங்கப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகள், தொடக்கக் கூட்டுறவுப் பண்டகசாலைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் நுகர்வோருக்கு இத்தொகுப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளிகள் தெரிவித்த கருத்துக்கள்:
திருமதி. சூரியபிரியா தெரிவித்ததாவது:
“மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ள ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டம் பொது
மக்களுக்கு மிகவும் வரவேற்கத்தக்கதாக உள்ளது. இத்திட்டத்தின் மூலம் மலிவான விலையில் தரமான காய்கறிகள் கிடைக்கின்றன. குறிப்பாக, அன்றாடச் சமையலுக்குத் தேவையான தக்காளி, வெங்காயம், இஞ்சி, தேங்காய், எலுமிச்சம்பழம் உள்ளிட்ட பொருட்கள் ஒரே தொகுப்பில் கிடைப்பது நடுத்தரக் குடும்பங்களுக்குப் பேருதவியாக உள்ளது.
கூட்டுறவுத் துறை அலுவலர்கள் சிறப்பாகச் செயல்பட்டு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இதன் பயன்கள் சென்றடைய ஏற்பாடு செய்துள்ளனர். இத்திட்டத்தை வழங்கிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
*திருமதி. யு. வல்லத்தரசி (நேருநகர், பைபாஸ் ரோடு) தெரிவித்ததாவது:
“வெளிச்சந்தையில் காய்கறிகளின் விலை அதிகமாக உள்ள சூழலில், பாண்டியன் கூட்டுறவுச் சிறப்பு அங்காடியில் குறைந்த விலையில் தரமான காய்கறிகள் கிடைப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தக்காளி, தேங்காய், கத்தரிக்காய், பீன்ஸ், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் ஒரே தொகுப்பில் கிடைப்பது சிறப்பாக உள்ளது. நான் எப்போதும் பாண்டியன் கூட்டுறவு அங்காடி
யில்தான் மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி வருகிறேன். இதுபோன்ற பயனுள்ள மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
திரு. பாண்டி (எச்.எம்.எஸ். காலனி) தெரிவித்ததாவது:
“பாண்டியன் கூட்டுறவுச் சிறப்பு அங்காடியில் ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுவது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. காய்கறிகள் தரமாகவும், சந்தை விலையை விடக் குறை
வாகவும் கிடைக்கின்றன. பொதுமக்கள் அனைவரும் இத்திட்டத்தைப் பயன்படுத்திப் பயனடைய வேண்டும். இச்சிறப்பான திட்டத்தை அறிவித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
திருமதி. பிரியா (பெத்தானியாபுரம்) தெரிவித்ததாவது:
நான் பாண்டியன் கூட்டுறவுச் சிறப்பு அங்காடிக்குச் சென்று ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள் கொண்ட தொகுப்பை வாங்கினேன். இதில் அரை கிலோ தக்காளி, அரை கிலோ வெங்காயம், பீன்ஸ், கேரட், இஞ்சி, தேங்காய், எலுமிச்சம்பழம் உள்ளிட்ட காய்கறிகள் மிகவும் தரமாகவும், பசுமையாகவும் உள்ளன. வெளிச்சந்தை விலையை விடக் குறைந்த விலையில் தரமான காய்கறிகள் கிடைப்பது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன