Breaking News

“கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரத்தில் முதல்வர், அமைச்சர்கள் கூட்டுச் சதி” – பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை, நவ. 25-“ஒரு பெண்ணுக்கு, அதுவும் ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பணிச்சூழலில் பாதுகாப்பு இல்லை என்பது மாநிலத்திற்கே எவ்வளவு பெரிய அசிங்கம்? கலெக்டருக்கே ஆபாச செய்தி அனுப்பலாம் என்ற எண்ணம் எம்எல்ஏ-வுக்கு எங்கிருந்து வந்தது?” என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியர் புகார் அளித்துள்ளார்.இந்த விவகாரம் வெளியே வந்தததையடுத்து, கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை கைது…

Read More

கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரை கைது செய்து விசாரிக்க வேண்டும்- முக.ஸ்டாலின்

சென்னை, நவ. 25-ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏவின் ஒழுங்கீனமான செயல் குறித்து மாவட்ட ஆட்சியர் முறையாகப் புகார் அளித்திருக்கும் செய்தி நாளேட்டில் வந்துள்ளது.இனியும் தாமதிக்காமல், கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில் கூறுகையில், “ஆளுங்கட்சியைச் சேர்ந்த MLA-வின் ஒழுங்கீனமான செயல் குறித்து மாவட்ட ஆட்சியர் முறையாகப் புகார் அளித்திருக்கும் செய்தி ‘தி இந்து’ நாளேட்டில்…

Read More

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படுமா?முழு கண்ட்ரோலையும் எடுத்த போலீஸ்- பரபரப்பான மாமதுரை

மதுரை, நவ. 25-திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மலை முழுவதும் ட்ரோன்கள் பறக்க மதுரை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.நவம்பர் 23, 24 ஆகிய இரண்டு நாட்களும் திருப்பரங்குன்றம் மலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்புப் பணிக்காக 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் மதுரையில் குவிக்கப்பட்டனர்.மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ளது. இந்த ஆண்டு மலை உச்சியில்…

Read More

காட்சிப்பொருளாக மாறும் பொதுசுகாதார வளாகம்

வாடிப்பட்டி, நவ. 24-வாடிப்பட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டு காட்சிப்பொருளாகி வரும் பொதுசுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.இங்கு துாய்மை பாரத இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக மாறி வருகிறது. இதனால் மருத்துவமனைக்கு வருவோர் சிரமமடைகின்றனர். அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சுகாதார வளாகத்தை திறக்க வேண்டுமென அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.

Read More

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தரிசனம்

திருப்பரங்குன்றம், நவ. 24-கடந்தாண்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில் திருக்கார்த்திகையை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்றலாம் என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். அதை எதிர்த்து அப்போதைய தி.மு.க., அரசு மேல்முறையீடு செய்த வழக்கில், நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவை இருநீதிபதிகள் அமர்வு உறுதிசெய்தது.இதுதொடர்பான வழக்கில் இன்று (நவ., 24) தீபத்துாணில் தீபம் ஏற்றலாம் என பல்வேறு நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மனைவியுடன்…

Read More

கார்த்திகை தீபத் திருவிழா : திருப்பரங்குன்றத்தில் உச்சகட்ட பாதுகாப்பு

மதுரை, நவ. 24-முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் இன்று கார்த்திகை தீபத் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது.இதனையொட்டி அப்பகுதியில் தீவிர பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.திருப்பரங்குன்றத்தில் வழக்கம் போல உச்சிப் பிள்ளையார் கோவில் அருகே தீபம் ஏற்றப்படுமா அல்லது உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுப்படி மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்படுமா என்ற பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மலையுச்சியில் தீபம் ஏற்ற ஒருமுறை அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை…

Read More

திருப்பரங்குன்றம் விவகாரம் : தமிழக அரசு சார்பில் முறையீடு இல்லை

திருப்பரங்குன்றம்,நவ. 24-திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.அதில், ‘சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால நிவாரணமாக கார்த்திகை திருநாள் அன்று மட்டும் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உத்தரவிடப்படுகிறது. அதாவது திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்தூணில் ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்படுகிறது. இந்த உத்தரவு என்பது இடைக்கால உத்தரவு ஆகும். எனவே பல்வேறு நிபந்தனைகளுடன் இந்த அனுமதி வழங்கப்படுகிறது’ எனத்…

Read More

உச்ச நீதிமன்றத்திற்கு எதிரான போராட்டம் அல்ல; மதுரையில் மத நல்லிணக்க ஆர்ப்பாட்டம்வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

மதுரை, நவ. 24-திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் திருக்கார்த்திகை தினமான, செவ்வாய்கிழமை தீபம் ஏற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் மற்றும் ஆன்மிக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மதுரையில் மத நல்லிணக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதுகுறித்து வழக்கறிஞர் வாஞ்சிநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-மத நல்லிணக்கத்தை பாதுகாக்க தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்திருப்பதை மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டம் சார்பாக வரவேற்கிறோம். நேற்று மாலை 4 மணிக்கு மதுரையில் எங்கள்…

Read More

மதுரை இளைஞர் படுகொலையால் கொந்தளித்த கனிமொழி எம்.பி.

சென்னை, நவ. 24-மதுரையில் சந்தோஷ் என்ற இளைஞர் தனது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தவர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.இந்த சம்பவம் தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொலைச் சம்பவங்களுக்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. தினமும் பொழுது விடிந்தால் கொலைச் செய்திகளே தமிழ்நாட்டின் தலைப்புச் செய்திகளாக மாறி வருகின்றன என்ற கவலையை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வெளிப்படுத்தியுள்ளார்.தவெக அரசின் பொறுப்பற்ற அணுகுமுறையால் குற்றவாளிகள் எதையும் செய்யலாம் என்ற துணிச்சலைப் பெற்றிருக்கிறார்கள் என அவர் சுட்டிக்காட்டினார்….

Read More

ஈபிஎஸ் – வேலுமணி விவகாரம் :“பொதுவெளியில் விவாதிக்க வேண்டாம்” – ஆர்.பி.உதயகுமார்

மதுரை, நவ. 24-அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், கட்சியின் ஒற்றுமையைப் பொதுவெளியில் விவாதிக்காமல், அறைக்குள் அமர்ந்து பேசி நல்ல தீர்வு காண வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது:-கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதால், எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைக்கும் வாய்ப்பு இல்லாமல்…

Read More