கார்த்திகை தீபத் திருவிழா : திருப்பரங்குன்றத்தில் உச்சகட்ட பாதுகாப்பு

மதுரை, நவ. 24-
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் இன்று கார்த்திகை தீபத் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது.
இதனையொட்டி அப்பகுதியில் தீவிர பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருப்பரங்குன்றத்தில் வழக்கம் போல உச்சிப் பிள்ளையார் கோவில் அருகே தீபம் ஏற்றப்படுமா அல்லது உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுப்படி மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்படுமா என்ற பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மலையுச்சியில் தீபம் ஏற்ற ஒருமுறை அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமா என அனைத்துத் தரப்பினரும் உற்றுநோக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மலைப்பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கிய இடங்களில் 70-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டத்தைக் கண்டறிய அதிநவீன ஃபேஸ் டிடெக்ஷன் கேம
ராக்களும் பயன்படுத்தப்படு
கின்றன.
உச்சிப் பிள்ளையார் கோவில், நெல்லிதோப்பு, மலைப் பாதைகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள முக்கியப் பகுதிகளில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கருவிகளுடன் தீவிர சோதனை நடத்தி வரு
கின்றனர். மேலும் மலையை சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளில் வழக்கத்தை விட கூடுதல் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு
ள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *