திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தரிசனம்

திருப்பரங்குன்றம், நவ. 24-
கடந்தாண்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில் திருக்கார்த்திகையை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்றலாம் என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். அதை எதிர்த்து அப்போதைய தி.மு.க., அரசு மேல்முறையீடு செய்த வழக்கில், நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவை இருநீதிபதிகள் அமர்வு உறுதிசெய்தது.
இதுதொடர்பான வழக்கில் இன்று (நவ., 24) தீபத்துாணில் தீபம் ஏற்றலாம் என பல்வேறு நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மனைவியுடன் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *