Breaking News

ஜெயலலிதா, ஸ்டாலின் ஆட்சியிலேயே நடக்காத சம்பவம்: அமைச்சர்களால் முதல்வர் விஜய்க்கு ஆபத்துஅமித் ஷா கையில் முக்கிய ஆதாரம்

புதுடெல்லி, நவ. 24-போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து அமைச்சர்கள் நடத்துகிற ஆய்வுகள் விவகாரம் டெல்லி வரை சென்றுள்ளது. போலீஸ் உயர் அதிகாரிகள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐகள் என போலீஸ் துறையோட கீழ்நிலை அதிகாரிகளும் தவெக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது கடும் கோபத்தில இருக்கிறார்கள் என போலீஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதுவரை எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா, ஓபிஎஸ், எடப்பாடி, ஸ்டாலின் என ஆட்சி செய்த எந்த முதல்வரும் போலீஸ் துறையை தங்களிடமே வைத்திருந்தார்கள்.அப்போது எந்த ஒரு அமைச்சரும் போலீஸ் ஸ்டேஷனுக்குள் போய்…

Read More

“காவிரி டெல்டா விவசாயிகளின் குறைகளை கேட்க தி.மு.க. சார்பில் குழு” – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, நவ. 24-‘மேகதாது அணையைக் கட்டினால் யாரும் கேட்க முடியாது’ என்று துணிச்சலாக கர்நாடக முதலமைச்சர் சவால் விடுகிறார். அவருக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேச மறுக்கிறார் தமிழ்நாட்டு முதலமைச்சர் என விமர்சித்துள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், “இது குறித்தும் டெல்டா மாவட்ட உழவர்கள், பொதுமக்கள் கருத்தை அறியவும், அவர்களது கோரிக்கைகளை கேட்கவும் திமுக சார்பில் ஒரு குழு அமைக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-“த.வெ.க. ஆட்சிக்கு வந்ததில்…

Read More

திருப்பரங்குன்றம் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை அவசரமாக விசாரிக்க தமிழக அரசு இதுவரை முறையீடு செய்யவில்லை

சென்னை, நவ. 24-திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி இதுவரை முறையீடு செய்யப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று அமர்வில் இல்லாத நிலையில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை…

Read More

கார்த்திகை அகல் விளக்குகள் விற்பனை மும்மரம்

விருதுநகர், நவ. 22-மாவட்டத்தில் கார்த்திகை துவங்கியது முதல் அகல் விளக்குகள் விற்பனை மும்மரமாக நடக்கிறது. புதிய டிசைன்களில் வந்துள்ள விளக்குகளை மக்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.கார்த்திகை தீபத்திருவிழா நவ.24ல் கொண்டாடப்படுவதால் கார்த்திகை அகல் விளக்குள் விற்பனை மும்மரமாக நடக்கிறது. விருதுநகர் மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மதுரை, மானாமதுரை பகுதிகளில் தயாரிக்கப்பட்ட அகல் விளக்குகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்தாண்டு விருதாச்சலம் பகுதியில் தயாரிக்கப்பட்ட புதிய டிசைன் அகல் விளக்குகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இவற்றில் தாமரை,…

Read More

வைகையில் மணல் திருட்டு: கண்டு கொள்ளாத கனிம வளத்துறை

திருப்புவனம், நவ. 22-திருப்புவனம் வைகை ஆற்று படுகையில் மணல் திருட்டால் மெகா பள்ளங்கள் உருவாகி பாலைவனமாக மாறியுள்ள காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வருஷநாடு மலைப்பகுதியில் உற்பத்தியாகும் வைகை ஆறு தேனி, திண்டுக்கல், மதுரை ,சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் குடிநீர் மற்றும் பாசன தேவையை பூர்த்தி செய்கிறது. வைகை ஆற்று பாசனத்தை நம்பி திருப்புவனம் தாலுகாவில் 4 ஆயிரம் எக்டேர் நிலங்களில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பரில் நெல் விவசாயம் நடைபெறுகிறது. தொடர்ந்து வைகை ஆற்றில் மணல் திருட்டு நடைபெறுவதால்…

Read More

திண்டுக்கல் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் முடங்கும் அபாயம்

திண்டுக்கல், நவ. 22-மருந்துகள் சப்ளையில் தாமதம், காலாவதியான மருந்துகளை திரும்பப் பெறாதது உள்ளிட்ட நிர்வாகக் குளறுபடிகளால் திண்டுக்கல் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் முடங்கும் அபாயத்தில் உள்ளன.ஏழை, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் ஜெனரிக் மருந்துகளுக்கு 75 சதவீதம் வரையும், இதர மருந்துகளுக்கு 25 சதவீதம் வரையும் தள்ளுபடி விலையில் மருந்துகளை வழங்கும் பொருட்டு ‘முதல்வர் மருந்தகம்’ திட்டம் 2025 பிப்., 24ல் துவக்கப்பட்டது.கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில், நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலம் மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு, கூட்டுறவுச்…

Read More

“திமுக ஒன்றிய செயலாளர் வீட்டில் தவறுதலாக 5 மணி நேரம் நடந்த போலீஸ் சோதனை

மதுரை, நவ.22-மதுரை மாவட்டத்தில் குவாரி விதிமீறல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மூர்த்தியுடன் தொடர்புடைய இடங்களில் மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வந்த நிலையில், அலங்காநல்லூர் பகுதியில் வீடு மாறிச் சோதனை நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குவாரி விதிமீறல் விவகாரம் தொடர்பாக அலங்காநல்லூரைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரது வீட்டில் சோதனை நடத்தச் சம்மனுடன் சென்ற போலீசார், தவறுதலாக அதே வீதியில் நான்கு வீடுகள் தள்ளி அமைந்துள்ள திமுக ஒன்றிய செயலாளர் தன்ராஜ் வீட்டிற்குக் காலை 6…

Read More

மதுரை மத்திய சிறையில் கஞ்சா புழக்கம்:சட்டம்-ஒழுங்கு போலீஸ் நடவடிக்கை எடுக்குமா?

மதுரை, நவ. 22-மதுரை மத்திய சிறையில் கஞ்சா உட்பட தடை செய்யப்பட்ட பொருட்கள் தாராளமாக ஊடுருவுவதாகவும், அதைத் தடுக்க முடியாமல் காவலர்கள் தவிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.இச்சிறையில் வார நாட்களில் 50க்கும் மேற்பட்ட கைதிகளை உறவினர்கள், வழக்கறிஞர்கள் சந்தித்து வருகின்றனர். அவர்கள் கைதிகளுக்கு கொடுக்கும் தின்பண்டங்களில் கஞ்சா போன்றவை மறைத்து கொடுப்பதாக புகார் எழுந்தது. இதைத் தவிர்க்க சிறை அங்காடியில் இருந்துதான் தின்பண்டங்கள் வாங்கி கொடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதன் மூலம் கஞ்சா உட்பட தடை செய்யப்பட்ட…

Read More

செருப்பு போடாம வி.எஸ் பாபு உடலை சுமந்த பாசம் 41 பேர் விஷயத்தில் மட்டும் எங்கே போச்சு ?முதல்வர் விஜய்யை விமர்சித்த ஆர்.பி.உதயகுமார்

மதுரை, நவ. 22-வி.எஸ்.பாபுவின் இறுதி ஊர்வலத்தில் முதல்வர் விஜய் காலணி அணியாமல் அவரது உடலைச் சுமந்து சென்றது வெறும் அரசியல் வேஷம் அல்ல, அது உண்மையான பாசம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.தலைவர்களின் இத்தகைய நெகிழ்ச்சியான அணுகுமுறை வரவேற்கத்தக்கது என அவர் குறிப்பிட்டுள்ளார்.அதே சமயம், இதேபோன்ற அக்கறையையும் மரியாதையையும் கரூரில் உயிரிழந்த 41 பேருக்கும் முதல்வர் விஜய் காட்டியிருந்தால், அவர் மக்களால் இன்னும் பெரிதும் போற்றப்பட்டிருப்பார் என்று ஆர்.பி.உதயகுமார் சுட்டிக்காட்டியுள்ளார். துயரச் சம்பவங்களின்போது காட்டப்படும்…

Read More

நான் சாதாரணமாக கூறிய கருத்துக்கும்மதுரை எம்பி சு.வெங்கடேசன் ஏதாவது பதிவு போடுவாரோ

மதுரை, நவ. 22-“காமாட்சி என்பது எனது மனைவி பெயர். நான் சாதாரணமாக கூறிய கருத்துக்கும் மதுரை எம்பி சு.வெங்கடேசன் ஏதாவது பதிவு போடுவாரோ, தற்போது எனக்கு பயமாக இருக்கிறது” என உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நகைச்சுவையாக தெரிவித்திருந்தார்.புத்தக கொள்முதல் குறித்து சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நூலகர் காமாட்சி தரப்பு வாதத்தை முன் வைத்த போது நீதிபதி இவ்வாறு கலகலப்பாக கூறியிருந்தார்.அண்மையில் ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கும் மதுரை எம்பி சு.வெங்கடேசனுக்கும் இடையே வார்த்தை மோதல்கள் நடைபெற்று…

Read More