நீலகிரி, அக். 23-
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த, 15ல் துவங்கியுள்ளது. குன்னுார் பகுதியில் நள்ளிரவில் அதிக மழை பெய்து வருகிறது. ஆண்டு
தோறும் அக்., 21 முதல் நவ., 15 வரையிலான நாட்கள் உச்சக்கட்ட பேரிடர் அபாய காலமாக வரலாற்று தரவுகளில் பதிவாகி உள்ளது.
அதன்படி, கடந்த, 1978, 1990, 1998, 2005, 2021, 2023 ஆண்டுகளில் குன்னுாரில் நிகழ்ந்த அனைத்து பெரும் பேரிடர்கள், அக்., மாதம் பருவமழை துவங்கிய, 8 முதல் 13 வது நாட்களுக்குள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பருவமழை தொடங்கிய எட்டு நாட்களில் மழை அளவு, 250 முதல் 300 மி.மீ என்ற அபாய எல்லையை தாண்டி மண் பிடிமானம் முற்றிலும் இழந்து விடும் சம்பவங்கள் நடந்துள்ளது.
வரலாற்றின், வங்ககடலில் உருவாகும் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி அக்.,20 முதல் 24 காலகட்டத்தில் தீவிரமடைந்து உள்நோக்கி நகர்வதுமே இந்த குறிப்பிட்ட நாட்களில் பெரும் நிலச்சரிவுகள் தூண்டப்படுவதற்கு முதன்மை காரணமாக அமைகிறது. இத்தகைய பாதிப்பு ஆண்டுதோறும் அக்., மாதத்துடன் முடிவடைவதில்லை. மாறாக, நவ., 15 வரை உள்ள கால கட்டத்திலும் குன்னுாரில் பல வரலாற்று பேரழிவுகள் நிகழ்ந்துள்ளன.
கடந்த 1993 ல் நவ., 11-ல் நீலகிரியை புரட்டி போட்ட வரலாற்று பெருமழையும், மரப்பாலம் பகுதியில் நிகழ்ந்த நிலச்சரிவும் இன்றும் நினைவில் நீங்காதவையாக உள்ளன. 2009 ல் நவ., 8ல் குன்னூரில் ஒரே நாளில் வரலாற்று சாதனையாக, 363 மி.மீ மழை கொட்டி தீர்த்தது.
இந்த அதீத மழையால், குன்னுார் மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை மற்றும் குன்னுார் – கோத்தகிரி சாலையின் பல இடங்களில் பாறைகள் சரிந்து விழுந்து போக்குவரத்து முழுமை
யாக துண்டிக்கப்பட்டது.
இதேபோல், 2023 நவ., மாத இறுதியில் வங்கக்கட
லில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும், குன்னுார் பகுதிகளில் தொடர் நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன. தற்போதைய நிலவரப்படி, தொடர் மழையின் காரணமாக, மலை பாதைகளில் மண் பிடிமானம் முற்றிலுமாக இழக்கப்பட்டு திடீர் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக புவியியல் ஆய்வு மையம் எச்சரி
த்துள்ளது.
மாவட்ட நிர்வாகமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும், வரும் நாட்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அக்., 21 முதல் நவ., 15 வரையிலான இக்காலகட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு நிர்வாகங்கள் மேலும் துரிதப்படுத்த வேண்டிய கட்டயம் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பருவமழை தீவிரமானதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
