பணம் கேட்ட வரி வசூல் அலுவலர்?கோவை வடக்கு மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

கோவை, அக். 23-
கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவ
லகத்தில் வரி வசூல் செய்யும் அலுவலர் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புப் போலீசார் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி
யுள்ளது.
கோவை மாநகராட்சியின் வடக்கு மண்டல அலுவலகத்தில் வரி வசூல் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அங்கு வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர் ஒருவர், வரி செலுத்த வந்த நபரிடம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனை ஏற்க மறுத்த அந்த நபர், சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்புப் போலீசாருக்குத் தகவல் அளித்ததாக தெரிகிறது.
இதையடுத்து, தகவலின் அடிப்படையில் வடக்கு மண்டல அலுவலகத்திற்கு வந்த லஞ்ச ஒழிப்புப் போலீசார், வரி வசூல் செய்யும் அறை மற்றும் அலுவலகத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் மற்றும் பணம் தொடர்பான விவரங்கள் குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் நேரடியாக சோதனை மேற்கொண்டு வருவது அப்பகுதியில் பரப
ரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோதனையின் முடிவில் பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறித்த தகவல்கள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *