மதுரை, அக். 23-
மதுரை மாநகராட்சி தூய்மைப் பணி டெண்டர் காலம் நவ. 13-ம் தேதியுடன் நிறைவுபெற உள்ள நிலையில், ஆயுத பூஜை அன்று குவிந்த குப்பை அகற்றப்படாததால் திரும்பிய பக்கமெல்லாம் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் தூய்மைப் பணியை ‘அவர் லேண்ட்’ நிறுவனம் மேற்கொள்கிறது. தினமும் 900 மெட்ரிக் டன் குப்பையை இந்நிறுவனம் சேகரித்து உரக்கிடங்குக்கு கொண்டுசெல்ல வேண்டும். இதற்காக இந்நிறுவ
னத்துக்கு ரூ.15 கோடி வரை மாநகராட்சி நிர்வாகம் மாதந்தோறும் வழங்குகிறது. ஆனால், அவர்கள் முறையாக குப்பையை அகற்றாதது தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டு
க்களால் மாநகராட்சி நிர்வாகம் இந்நிறுவனம் மீது அபராதம் விதித்தும், ‘நோட்டீஸ்’ வழங்கியும் நடவடிக்கை எடுத்தது.
தூய்மைப் பணி டெண்டர் நவ.13-ல் நிறைவடையும் நிலையில், இந்நிறுவனத்தை வெளியேற்றியே தீர வேண்டும் என பல்வேறு அமைப்புகள் வேலை
நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. அந்நிறுவ
னத்தை வெளியேற்றுவது என முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் அளித்த உறுதியை ஏற்று, தூய்மைப் பணியா
ளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில், தூய்மை
பணி மிகவும் மந்தமாக உள்ளது.
ஆயுத பூஜையையொட்டி வழக்கத்தைவிட அதிகமாக நகரெங்கும் குப்பை தேங்கியுள்ளது. ஆனால், இந்த குப்பையை முறையாக சேகரிக்காததால், அவை அனைத்தும் திறந்த வெளியில் கிடக்கிறது. வைகை ஆற்றங்கரை ‘ஸ்மார்ட் சிட்டி’ சாலை
களில் கடந்த சில நாட்களா
கவே குப்பை தொட்டிகள் நிரம்பி அதனை சுற்றிலும் குப்பை சிதறிக் கிடக்கிறது. கடந்த காலத்தில் பண்டிகை கால குப்பையை அகற்ற சிறப்பு தூய்மைப்பணி மேற்கொள்ளப்படும். தற்போது தாமதமாக ஆயுத பூஜை குப்பை அப்புறப்படுத்தப்
படுவதால் மாநகர மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
இதுகுறித்து நகர்நலப் பிரிவு அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ஆயுத பூஜை குப்பை (நேற்று) முதல் 30 டிராக்டர்கள், ஜேசிபி கொண்டு அப்புறப்படுத்த
ப்படுகிறது. ஓரிரு நாட்களில் அந்த குப்பையை அகற்றி விடுவோம்.
அவர்லேண்ட் நிறுவன டெண்டர் முடிவு பெறும் நாளுக்கு பின் அரசின் முடிவுக்கு ஏற்ப செயல்படுவோம். எந்த நிறுவனத்துக்கும் டெண்டர் விடப்படாத நிலையில், மாநகராட்சியே நேரடியாக தனது 200 இலகுரக வணிக வாகனங்கள், 6 காம்பாக்டர் வாகனங்களையும், அதுபோக வாடகைக்கு டிராக்டர்களையும் எடுத்து தூய்மைப்பணி மேற்கொள்ள திட்டமிட
ப்பட்டுள்ளது.
தூய்மைப் பணியாளர்க
ளுக்கு மாநகராட்சி நேரடி
யாக ஊதியம் வழங்குவதில் சிக்கல் உள்ளதால், சுய உதவிக் குழுக்கள் மூலம் ஊதியம் வழங்கவும் திட்ட
மிடப்பட்டுள்ளது” என்றனர்.
மதுரை மாநகராட்சியில் திரும்பிய பக்கமெல்லாம் குப்பை
