Breaking News

தினமும் கலெக்டர் அலுவலகத்திற்கு அலையும் முதியோர்கள்: ஓய்வூதியம் வராததால் புலம்பல்

மதுரை, அக். 24-மதுரை மாவட்டத்தில் வங்கிக் கணக்குடன் ஆதார் அட்டையை இணைக்காத 6500 முதியோர்களுக்கான ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளதால் தினமும் கலெக்டர் அலுவலகத்திற்கு அலைகின்றனர்.அரசு சார்பில் முதியோர்களுக்கு மாதந்தோறும் ரூ.1200 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. பலருக்கு 2 மாதங்களாக வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் தாலுகா, கலெக்டர் அலுவலகங்களுக்கு அலைகின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் புகார் மனுக்களை பதிவு செய்யும் அறைக்கும் தினமும் 20 முதல் 25 பேராவது பணம் வராதது குறித்து கேட்கின்றனர்.பலர் தங்கள் வங்கிக் கணக்குடன் போன் இணைப்புடன்…

Read More

ரூ.10 லட்சம் வாங்கிட்டு போஸ்டிங் போடுறது கேவலமா இல்லை?தவெக எம்எல்ஏ கட்டுக்கட்டாக பணம்100 வீடியோ, ஆடியோ இருக்குகட்சி நிர்வாகிகளின் ஆடியோக்கள் அடுத்தடுத்து ரிலீசாவதால் பரபரப்பு

மதுரை, அக். 24-ரூ.10 லட்சம் வாங்கி போஸ்டிங் போடுவதாக மதுரை தவெக எம்எல்ஏ மதார் பதூருதீன் மீது நேரடியாக குற்றம் சாட்டி, அக்கட்சி பிரமுகர் ஆடியோ வெளியிட்டுள்ளார்.அடுத்தடுத்து ஆடியோக்கள் வெளியாகி வருவது அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ முஸ்தபா (எ) மதார் பதூருதீன். இவரது உதவியாளர் கனி என்பவர், கட்சி, கவுன்சிலர் பதவிக்கு ரூ.15 லட்சம் வரை பணம் கேட்டு பேரம் பேசும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது….

Read More

மதுரை மாநகராட்சியில் திரும்பிய பக்கமெல்லாம் குப்பை

மதுரை, அக். 23-மதுரை மாநகராட்சி தூய்மைப் பணி டெண்டர் காலம் நவ. 13-ம் தேதியுடன் நிறைவுபெற உள்ள நிலையில், ஆயுத பூஜை அன்று குவிந்த குப்பை அகற்றப்படாததால் திரும்பிய பக்கமெல்லாம் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் தூய்மைப் பணியை ‘அவர் லேண்ட்’ நிறுவனம் மேற்கொள்கிறது. தினமும் 900 மெட்ரிக் டன் குப்பையை இந்நிறுவனம் சேகரித்து உரக்கிடங்குக்கு கொண்டுசெல்ல வேண்டும். இதற்காக இந்நிறுவனத்துக்கு ரூ.15 கோடி வரை மாநகராட்சி நிர்வாகம் மாதந்தோறும் வழங்குகிறது. ஆனால், அவர்கள்…

Read More

மதுரை-குருவாயூர் ‘விஸ்டாடோம்’ கண்ணாடி கூரை ரெயில் சேவை தொடங்கியது

மதுரை, அக். 23-மேற்கு தொடர்ச்சி மலையின் எழில்மிகு இயற்கைக் காட்சிகளை ரசித்தபடி பயணம் செய்யும் வகையில், மதுரை – குருவாயூர் – மதுரை ரயில்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ள ‘விஸ்டாடோம்’ ரயில் பெட்டிக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.முன்பதிவு தொடங்கியதும் அனைத்து இருக்கைகளும் நிரம்பியுள்ளன. இதனால், பயணச்சீட்டுகளுக்கான காத்திருப்போர் பட்டியலும் நீடித்து வருகிறது.மதுரை – புனலூர் – கொல்லம் ரயில் பாதை மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகள் வழியாகச் செல்கிறது. இந்தப் பாதையில்…

Read More

மீனாட்சி பட்டிண விசில் பார்ட்டியின் புலம்பல்கள்

மதுரை, அக். 23-சூப்பர் வேகத்தில் வந்தேறிகள் கூடாரமாக மாறி வருவதாக விசில் பார்ட்டிக்கு எதிராக விமர்சனங்கள் தெறிக்கும் நிலையில், மீனாட்சிப் பட்டண விசில் பார்ட்டியில் விசும்பல்கள் கொஞ்சம் தூக்கலாகவே கேட்க ஆரம்பித்திருக்கின்றன.ஒரிஜினல் பார்ட்டியில் தொகுதி வாய்ப்புகளை எதிர்பார்த்திருந்த பலருக்கு தேர்தலில் சீட் கிடைக்கவில்லை என்ற வருத்தம் உண்டு. அடுத்ததாக, தங்களுக்குக் கிடைக்க வேண்டிய மந்திரி இருக்கைகளையும் மற்றும் பலர் பறித்துக் கொண்டதாக ஜெயித்தவர்களும் புலம்பினர்.வடக்கு மாவட்ட செயல்புள்ளியும் எம்எல்ஏ.வுமான ‘கல்லானவர்’ காலம் காலமாக விசில் தலைவரின் அசைக்கமுடியாத…

Read More

“இந்து மதம் அழிய போகிறது” மல்லிகார்ஜுன கார்கே பரபரப்பு பேச்சு

பெங்களூர், அக். 23-இந்து மதத்தில் நிலவும் அநீதிகளையும் தீண்டாமையையும் சுட்டிக்காட்டியே டாக்டர் அம்பேத்கர், “நான் இந்துவாக பிறந்தேன்; ஆனால் இந்துவாக இறக்க மாட்டேன்” என்று அறிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கர்நாடக மாநிலம் கலபுரகியில் உள்ள புத்த விஹாராவில், விஜயதசமியை முன்னிட்டு 70வது ‘தம்ம சக்கர பிரவர்த்தன தின’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டார்.சித்தார்த்த விஹாரா அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்துப்…

Read More

தலைமை தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்யக் கோரி டெல்லியில் விவசாய சங்கங்கள் போராட்டம்

டெல்லி, அக். 23-எஸ்ஐஆர் முறைகேடு விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வலியுறுத்தி இன்று நாடுதழுவிய போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.அகில இந்திய கிசான் மோர்ச்சா, அகில இந்திய கிசான் சபா உள்ளிட்ட விவசாய அமைப்புகள் இணைந்து டெல்லி மட்டுமல்லாது நாடு முழுவதும் போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளன. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், சட்ட விரோதமான எஸ்ஐஆர் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்…

Read More

“இரு திராவிட கட்சிகளை அழிக்க முடியாது; தவெக விரைவில் காணாமல் போய்விடும்” – கே.பி.முனுசாமி

சென்னை, அக். 23-அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி, “தமிழகத்தில் இரு திராவிட கட்சிகளையும் யாராலும் அழித்து விட முடியாது. தவெக விரைவில் காணாமல் போய்விடும்” எனத் தெரிவித்துள்ளார்.அமமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளில் இருந்து அதிமுக-வில் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி இன்று தருமபுரி அதிமுக அலுவலகத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில், அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி பங்கேற்று உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கே.பி.முனுசாமி கூறியதாவது; “எவ்வித முன் அனுபவமின்றி…

Read More

ரூ.30க்கு தரமில்லாத சன்ன ரக அரிசியை வாங்க மறுக்கும் பொதுமக்கள்

சென்னை, அக். 23-கடந்த சில வாரங்களாக மாநிலம் முழுவதும் அரிசி விலை ஏற்றத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.எனவே பொதுமக்கள் நலன் கருதியும், வெளிச்சந்தையில் அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் கூட்டுறவு மற்றும் அமுதம் அங்காடிகள், ரேஷன் கடைகள் சன்ன ரக அரிசி (பொன்னி அரிசி) விற்பனை செய்யும் திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது.இந்த திட்டம் மூலம் 1 கிலோ அரிசி ரூ.30-க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 184 விற்பனை நிலையங்களுக்கு 439…

Read More

ராஜராஜ சோழனின் 1041வதுசதய விழா தொடங்கியது

தஞ்சாவூர், அக். 23-தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,041வது சதய விழா மங்கள இசையுடன் தொடங்கியது. பட்டிமன்றம், கவியரங்கம், நாட்டியாஞ்சலி என பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் இராஜராஜ சோழன் பிறந்த மற்றும் அரியணையில் ஏறிய ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தை ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் மாமன்னன் இராஜராஜ சோழனின் 1,041வது சதய விழா அரசு…

Read More