Breaking News

ஸ்டாலின் கொடுத்த தைரியம்: மனம் திறந்த அமைச்சர் கீர்த்தனா

விருதுநகர், அக். 24-கட்சி ஆரம்பித்த 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து தவெக ஆச்சர்யப்படுத்தியது. தவெகவில் வெற்றி பெற்ற பலர் பலவிதமான பின்னணியில் இருந்து வந்துள்ளனர்.விஜய் ரசிகர் மன்றம், அதிமுக, அரசியல் வியூக வகுப்பாளராக இருந்தவர்கள் அமைச்சர் ஆகியுள்ளனர். இந்நிலையில் தான் 3 முதலமைச்சர்களிடம் பணியாற்றியதாகவும், முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினிடம் பணியாற்றியபோது அரசியலில் வர தைரியம் வந்ததாகவும் அமைச்சர் கீர்த்தனா கூறியுள்ளார்.விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கீர்த்தனா, “நான் படித்து முடித்தவுடன் 2 வேலை கிடைத்தது. டேடா…

Read More

இலவச வேட்டி எப்படி சபரிமலைக்கு சென்றது? ரூ.300க்கு இருமுடி பை – பம்பையில் அதிர்ந்த பக்தர்கள்

கடலூர், அக். 24-சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதமிருந்து செல்லும் பக்தர்கள், இருமுடி கட்டி மலையேறுவது வழக்கம்.இந்த இருமுடி கட்டுவதற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் பக்தர்கள் கவனம் செலுத்துவார்கள். ஆனால், தமிழக அரசு இலவசமாக வழங்கும் வேட்டியை வைத்து தயாரிக்கப்பட்ட இருமுடி பை, சபரிமலையில் ரூ.300-க்கு விற்கப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் கவனம் பெற்றுள்ளது. என்ன நடந்தது?தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்…

Read More

மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு;கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தேனி, அக். 24-தேனி மாவட்டம், வருசநாடு வனப்பகுதியில் விடிய விடிய பெய்த கனமழையால் மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, விவசாய நிலங்களுக்குச் செல்வதற்காக ஆற்றைக் கடக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள வருசநாடு பகுதியில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, வெள்ளிமலை, மேகமலை, அரசரடி, முத்தாளம்பாறை, கலாமலை உள்ளிட்ட வனப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து…

Read More

நவம்பர் 5 வரை பழனி ரோப் கார் ஆன்லைன் முன்பதிவு நிறுத்தம்

திண்டுக்கல், அக். 24-திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவைக்கான ஆன்லைன் முன்பதிவு நவம்பர் 5-ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.கடந்த 20-ம் தேதி ரோப் காரின் கியர் பாக்ஸ் ஷாப்ட்டில் பழுது ஏற்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பழுதடைந்த உதிரிபாகத்தைச் சீரமைப்பதற்காக கோவையில் உள்ள நிறுவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர். பழுதுநீக்கும் பணிகள் முடிந்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட பின்னரே ரோப் கார் சேவை மீண்டும் தொடங்கப்படும். அதுவரை மலைக்கோவிலுக்குச்…

Read More

தாயைக் கொன்று 2 மகள்களைக் கடத்திச் சென்ற கும்பல்:வீடு புகுந்து நிகழ்த்திய கொடூரச் சம்பவம்

தூத்துக்குடி, அக். 24-தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே முதலூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் அப்பகுதியில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மேரி ரெஜிலா என்பவருடன் திருமணமாகி, பிளஸ்ஸி (15), பிரின்ஸா (14) என்ற 2 மகள்களும், பிளஸெட் ராஜா என்ற மகனும் உள்ளனர்.இந்த சூழலில் இன்று (23-10-26) அதிகாலை பொழுது முத்துகிருஷ்ணனின் வீட்டுக்குள் மர்ம நபர்கள் அத்துமீறு நுழைந்துள்ளனர். அதன் பிறகு அந்த கும்பல், முத்துகிருஷ்ணன், மேரி ரெஜிலா, பிளஸெட் ராஜா ஆகிய 3…

Read More

பசும்பொன்னுக்கு முதல்வர் விஜய் வருகை:பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

கமுதி, அக். 24-பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் குருபூஜை விழாவில் தமிழக முதல்வா் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அங்குள்ள ஹெலிபேடு தளம் வரை இரும்புக் கம்பிளால் தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் குருபூஜை விழாவில் தமிழக முதல்வா் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அங்குள்ள ஹெலிபேடு தளம் வரை இரும்புக் கம்பிளால் தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள பசும்பொன்னில் வருகிற 30-ஆம்…

Read More

தீபாவளிக்கு முன்பே நவம்பர் மாத மகளிர் உரிமைத்தொகை கிடைக்குமா? அரசு தரப்பில் விளக்கம்

சென்னை, அக்.24-தீபாவளியை முன்னிட்டு, 2026 நவம்பர் மாதத்துக்கான மகளிர் உரிமைத்தொகை (Magalir Urimai Thogai) முன்கூட்டியே, மாதத்தின் முதல் வாரத்திலேயே வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும் என கடந்த சில நாட்களாக தகவல் பரவி வந்தது.ஆனால் இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.தீபாவளிக்கு முன்பே நவம்பர் மாத மகளிர் உரிமைத்தொகை?இந்த 2026 ஆண்டு தீபாவளிப் பண்டிகை நவம்பர் 8 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை வழக்கமாக…

Read More

வெறிநாய் கடித்த பசுவின் பாலில் கோயில் பிரசாதம்:450 பேருக்கு ரேபிஸ் தடுப்பூசி

உத்தரபிரதேசம், அக். 24-உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் துர்கா பூஜை திருவிழாவின் போது, வெறிநாய் கடித்த பசுவின் பாலைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட பிரசாதத்தைச் சாப்பிட்ட 450 பேருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.கோரக்பூர் பகுதியில் நடைபெற்ற துர்கா பூஜையின் போது பொதுமக்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. அதன் பின்னரே, அந்தப் பிரசாதத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பால், வெறிநாய் கடித்த பசுவிடம் இருந்து கறக்கப்பட்டது என்ற தகவல் தெரியவந்தது.இத்தகவல் பரவியதைத் தொடர்ந்து அப்பகுதி மக்களிடையே கடும் அச்சமும் பரபரப்பும் ஏற்பட்டது….

Read More

பிரபல தமிழ் சேனல் செய்தி வாசிப்பாளர் பிரிய வதனா திடீர் மரணம்: சென்னை பிரஸ் கிளப் இரங்கல்

சென்னை, அக். 24-பிரபல தமிழ் செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் 24 வயதான பிரிய வதனா. இவர், சோஷியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அவ்வப்போது போட்டோஷூட் படங்கள், தனது பணி தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வந்தார். மேலும் பிரிய வதனா திரைத்துறையிலும் தனது பயணத்தை சமீபத்தில் தான் தொடங்கினார். சூர்யாவின் கருப்பு திரைப்படத்தில் இவர் ஒரு சிறிய காட்சியில் நடித்திருந்தார்.இந்தநிலையில் பிரிய வதனா மரணம் அடைந்துள்ளார். அவரது மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர்…

Read More

ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத வன்முறை- பல இடங்களில் வேட்புமனுக்கள் கிழிப்பு

ஹைதராபாத், அக். 24-ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத அளவிற்கு உச்ச கட்ட தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது.பல இடங்களில் வேட்பாளர்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் இடத்திலேயே வாங்கி கிழித்து போடுகிறார்கள். 16 இடங்களில் இதுபோன்று வேட்புமனுக்கள் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையே கிழித்தெறிந்து மிரட்டி உள்ளார்கள். 31 இடங்களில் மோசமான சம்பவங்கள் நடந்துள்ளது. பல இடங்களில் வேட்பார்கள் வேட்புமனு தாக்கல் செய்யவே அஞ்சும் நிலை இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி…

Read More