Breaking News

கனமழை எச்சரிக்கை: கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடல் – மாவட்ட நிர்வாகம் உத்தரவு

கன்னியாகுமரி, அக். 25-தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நாளுக்கு நாள் மழையின் அளவு அதிகரித்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் தவிர்க்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் பல்வேறு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள மிக கனமழை…

Read More

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு: கண்காணிப்பு வளையத்தில் சிறுமியின் தாய்

விழுப்புரம், அக். 25-செஞ்சி அருகே சிறுமி மாய​மான விவகாரத்​தில் 2-வது நாளாக விசா​ரணை​யைத் தொடர்ந்​துள்ள சிபி​சிஐடி போலீ​ஸார், சிறுமி​யின் தாயையும் தங்​கள் கண்​காணிப்பு வளை​யத்​துக்​குள் கொண்டு வந்​துள்​ளனர்.விழுப்​புரம் மாவட்​டம் செஞ்​சியை அடுத்த ஆலம்​பூண்டி ஊராட்சி நடுப்​பட்டு கிராமத்​தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த 11-ம் தேதி நள்​ளிரவு மாய​மானார். இது​குறித்து சிறுமி​யின் தாய் கொடுத்த புகாரின் பேரில் சத்​தி​யமங்​கலம் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​தனர். எஸ்பி மதிவாணன் மேற்​பார்​வை​யில் 8 தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டன.10 நாட்​களாகி​யும் சிறுமியை கண்​டு​பி​டிக்​காததால்…

Read More

விமான எரிபொருள் வாட் வரியை குறைத்த தமிழக அரசு:விமான நிறுவனங்கள் வரவேற்பு

சென்னை, அக்.25-தமிழக அரசு மாநிலத்திற்குள் விமானச் சேவைகளுக்காக திட்டமிடப்பட்ட விமான நிறுவனங்களுக்கு வழங்கப்படும் விமான டர்பைன் எரிபொருள் மீதான மதிப்புக்கூட்டு வரியை குறைத்துள்ளது.சென்னை விமான நிலையத்தில் விமான எரிபொருளுக்கான மதிப்புக்கூட்டு வரி 29 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாகவும், சென்னை தவிர மற்ற விமான நிலையங்களில் 29 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாகவும் குறைத்துள்ளது.அதன்படி 40,000 கிலோவுக்கும் குறைவான அதிகபட்ச புறப்படும் விமானங்களை இயக்கி, சென்னையை தவிர்த்து மாநிலத்தில் உள்ள விமான நிலையங்களில் எரிபொருள் நிரப்பும் திட்டமிடப்பட்ட…

Read More

கே.என்.நேரு, அன்பில் மகேஸ், செந்தில் பாலாஜியுடன் ஸ்டாலின் தீவிர ஆலோசனைதிருச்சி கிழக்கில் அதிரப் போகும் தேர்தல் களம்

திருச்சி, அக்.25-திருச்சி கிழக்கு உள்ளிட்ட ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீவிர ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.இந்த முக்கியக் கூட்டத்தில் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் செந்தில் பாலாஜி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். குறிப்பாக, திருச்சி கிழக்குத் தொகுதியில் மு.க.ஸ்டாலின் அவர்களே நேரடியாகக் களமிறங்கக்கூடும் என்ற தகவல் பரவி வரும் நிலையில், இந்த ஆலோசனைக்கூட்டம் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பையும் முக்கியத்துவத்தையும் ஏற்படுத்தியுள்ளது.அதேவேளையில், கடந்த சில நாட்களாகக் கட்சிப் பணிகளிலிருந்து…

Read More

“பெண்களே, சிறுமிகளே: உதவி செய்வதாக தவெகவினர் வந்தால் காவல்துறையை அணுகுங்கள்”எடப்பாடி பழனிசாமி

சென்னை, அக். 25-கன்னியாகுமரியில் கல்லூரி மாணவி ஒருவருக்கு தவெக நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.“கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே பேருந்துக்காகக் காத்திருந்த கல்லூரி மாணவிக்கு உதவுவது போல நடித்து ஆளுங்கட்சி தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.‘பெண்களைக் காப்பதில் நம்பர் 1 ஆட்சியாக இருக்கும்’ என்று சொல்லியபோது தனது கட்சிக்காரர்கள் இருப்பதை…

Read More

‘அருணாச்சல் எல்லையில் சீன ராணுவத்துடன் மோதலா?’ – மோடி விளக்கம் அளிக்க கார்கே வலியுறுத்தல்

புதுடெல்லி, அக். 25-அருணாச்சலப் பிரதேசத்தில் சீன ராணுவத்துடன் மோதல்கள் தொடர்வதாக இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்புப் படையின் டைரக்டர் ஜெனரல் கூறி இருப்பது கவலை அளிப்பதாக தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உண்மையில் என்ன நடக்கிறது என்பதை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்புப் படையின் டைரக்டர் ஜெனரல் பேசிய வீடியோவின் ஒரு பகுதியை வெளியிட்டுள்ள கார்கே, சீனா உடனான…

Read More

தமிழ்நாட்டில் உளவுப்பிரிவு என ஒன்று உள்ளதுஅது தூங்குகிறதா? செயலிழந்து விட்டதா?

சென்னை, அக்.25-ஒரு மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்றால், அங்குள்ள காவல்துறைக்கு “கண்களாகவும் காதுகளாகவும்” செயல்பட வேண்டியது உளவுத்துறைதான்.ஒரு குற்றம் நடப்பதற்கு முன்பே அதுபற்றிய தகவல்களை ரகசியமாகச் சேகரித்து, உயர் அதிகாரிகளுக்கும் அரசுக்கும் முன்னெச்சரிக்கை வழங்கி, அசம்பாவிதத்தைத் தடுப்பதே உளவுத்துறையின் தலையாய பணி.ஆனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக அரங்கேறி வரும் தொடர் குற்றங்கள், மாநில உளவுத்துறை தன் அடிப்படைப் பணியில் இருந்து முற்றிலும் விலகிவிட்டதோ என்ற வலுவான சந்தேகத்தை எழுப்பியுள்ளன. வாலாஜாபேட்டை…

Read More

முதல்வர் விஜய்க்கு ரெடியாகும் புதிய அரசு பங்களா

சென்னை, அக். 24-தமிழக முதலமைச்சர் விஜய் விரைவில் வீடு மாற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீலாங்கரை வீட்டில் இருந்து தலைமைச் செயலகத்துக்கு வருவது போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதால், அவர் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அரசு இல்லத்திற்கு மாறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஜோசப் விஜய் தினசரி தலைமைச் செயலகத்திற்கு காலை 10 மணிக்குச் செல்கிறார். மாலை வரை அலுவலகத்தில் இருந்து பல்வேறு துறையின் செயலாளர்களுடனும், அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தி…

Read More

ஞானேஷ் குமார் விவகாரம்: எதிர்க்கட்சிகள் பதவி நீக்க நோட்டீஸ்கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம்” – ஓம் பிர்லா

புதுடெல்லி, அக். 24-தேர்தல் குளறுபடி, எஸ்.ஐ.ஆர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளால் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகளும், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தன. ஆனால், இதுவரை அரசு தரப்பிலிருந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.அதனால் எதிர்க்கட்சிகள் மீண்டும் புதிய போராட்ட நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, எதிர்க்கட்சிகளிடமிருந்து தேர்தல் ஆணையர் பதவி…

Read More

காங்கிரஸை கழட்டிவிடும் முதல்வர் விஜய் பாஜகவுடன் மட்டும் கூட்டணி

சென்னை, அக். 24-காங்கிரஸை கழட்டிவிடும் முதல்வர் விஜய்.. நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் மட்டும் கூட்டணியா? தவெக 35, பாஜக 5 என பேச்சுவார்த்தையா?கரப்பான்பூச்சி போராட்டத்திற்கு பின் மோடிக்கு அதிகரிக்கும் வாக்குசதவீதத்தால் விஜய் இந்த முடிவா? அதிமுக, திமுக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், தேமுதிக என மற்றொரு கூட்டணியா? பாமக நிலைமை என்ன ஆகும்? தமிழக அரசியல் களமே மாறுகிறதா?தமிழக அரசியல் களம் தற்போது யாரும் எதிர்பாராத அளவிற்கு அதிவேகமான திருப்பங்களைச் சந்தித்து வரும் நிலையில், தவெக தலைவர்…

Read More