Breaking News

உளவுத் துறை எச்சரிக்கையால்விஜய்யின் பசும்பொன் பயணம் ரத்து

சென்னை, அக். 27-உளவுத் துறை, போலீஸ் எச்சரிக்கையை அடுத்து முதல்வர் விஜய் பசும்பொன் பயணத்தை ரத்து செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 119ஆவது ஜெயந்தி விழா, 64 ஆவது குரு பூஜை வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.இதையொட்டி துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பசும்பொன்னுக்கு வருகை தரவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக ஹெலிபேட்டில் முன்னேற்பாடு பணி நடைபெற்று வருகிறது.அது போல் தமிழக முதல்வர் விஜய், அமைச்சர்கள், திமுக,…

Read More

பாழடைந்த அலுவலகம் உடனே அகற்றப்படுமா? பொதுமக்கள் கோரிக்கை

வாடிப்பட்டி, அக். 25-வடுகபட்டியில் பாழடைந்த பழைய ஊராட்சி அலுவலகத்தை அகற்ற வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இங்கு தேசிய நெடுஞ்சாலை அருகே புதிய ஊராட்சி அலுவலகம் அமைந்துள்ளது. இதனருகே பயன்படுத்தப்பட்ட பழைய அலுவலகம் காலாவதியாகி விட்டதால் கைவிடப்பட்டது.தற்போது பல இடங்களில் விரிசல் விழுந்தும், காரை பெயர்ந்தும், எந்நேரமும் விழும் நிலையிலும் உள்ளது. தெரு நாய்கள், விஷ ஜந்துகளின் வசிப்பிடமாக மாறி வருகிறது. ஊராட்சி அலுவலகத்திற்கு வருவோர் முகம் சுளிக்கின்றனர். எனவே, இதனை அகற்றி அரசின் வேறு திட்டங்களுக்கு…

Read More

அழகா்கோவில் தைலக்காப்பு உத்ஸவம்:நூபுர கங்கையில் நீராடினாா் சுந்தரராஜப் பெருமாள்

மதுரை, அக்.25-அழகா்கோவில் கள்ளழகா் கோயிலில் நடைபெறும் தைலக்காப்பு உத்ஸவத்தையொட்டி, சுந்தரராஜப் பெருமாள் (உத்ஸவா்) நூபுர கங்கையில் நீராடும் நிகழ்ச்சி நடைபெற்றது.உத்ஸவத்தின் மூன்றாவது நாளாளன்று சுந்தரராஜப் பெருமாள் நூபுர கங்கையில் நீராடும் வைபவம் நடைபெற்றது. இதையொட்டி, சுந்தரராஜப் பெருமாள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பாரம்பரிய பாதைகள் வழியாக புறப்பாடாகி மலை மீதுள்ள ராக்காயி அம்மன் கோயில் மண்டபத்தில் எழுந்தருளினாா்.இங்கு, சுந்தரராஜப் பெருமாளுக்கு பல்வேறு வகையான வாசனை தைலங்களைக் கொண்டு தைலக்காப்பிடப்பட்டது. பின்னா், பகல் சுமாா் 12 மணி அளவில் மலை…

Read More

தீபாவளி ஷாப்பிங் : களைக்கட்டத் தொடங்கிய மதுரை கடைவீதிகள்

மதுரை, அக்.25-மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வண்ணக் கோலப்பொடிகள் மற்றும் அகல் விளக்குகள் விற்பனை களைகட்டியுள்ளது. பொதுமக்கள் ஆர்வமுடன் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.வண்ணக் கோலப்பொடிகள் முதல் அலங்கார விளக்குகள் வரை… மதுரையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் விற்பனை களைகட்டியுள்ளது. பொதுமக்கள் ஆர்வமுடன் கடைகளுக்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வண்ணக் கோலப்பொடிகள், அகல் விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விற்பனை…

Read More

கருத்து சுதந்திரத்தை பறிக்கும் சர்வாதிகாரிமுதல்வர் விஜய்- செல்லூர் ராஜூ பேட்டி

மதுரை, அக். 25-மருது பாண்டியர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை ஸ்காட் ரோடு பகுதியில் உள்ள மருது பாண்டியர்களின் சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்லூர் ராஜூ, மருது சகோதரர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறோம் ; மருது சகோதரர்களின் நினைவு தினத்தில் உறுதியேற்று கழகத்தை வளர்ச்சியோடு கொண்டு செல்வோம்.சுகாதாரத் துறையில் சமூக வலைத்தளங்கள் பொதுக்கூட்டங்களில் அரசுக்கு எதிராக கருத்து பதிவிடுவதற்கு எதிரான…

Read More

இந்து மத கோயிலுக்கு செல்லும்போது பிற மதத்தினர்இந்து மத நம்பிக்கை உள்ளதென கையெழுத்திட வேண்டும்ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

மதுரை, அக். 25-இந்து மத கோயிலுக்கு செல்லும்போது, பிற மதத்தினர் இந்து மத நம்பிக்கை உள்ளதென கையெழுத்திட வேண்டுமென ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரையை சேர்ந்த தங்கம் வெங்கடேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பிற மத சின்னங்களைத் தாங்கியிருக்கும் நபர்கள் மற்றும் இந்து மத சம்பிரதாயங்களைப் பின்பற்றாதவர்கள், கோயில் கருவறைகள் மற்றும் மண்டபங்களுக்குள் நுழைதல் குறித்த விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், முருகன் ஆகியோர்…

Read More

மதுரை உள்பட 18 இணை கமிஷனர்கள் மாற்றம்

மதுரை, அக். 25-தமிழகத்தில் உள்ள முக்கியத் திருத்தலங்களின் நிர்வாகப் பணிகளை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற பிரதான கோயில்களின் இணை கமிஷனர்கள் (அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில், உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் மற்றும் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோவில் உள்ளிட்ட தமிழகத்தின் மிக முக்கியத் கோயில்களைச் சேர்த்து மொத்தம் 18 இணை…

Read More

பசும்பொன் செல்கிறார் முதல்வர் விஜய்:ஹெலிபேட் எதற்காக? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

மதுரை, அக். 25-மருதுபாண்டியர்களின் 225வது நினைவு தினத்தை முன்னிட்டு அரசு சார்பில் சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டது.சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வில் மருதுபாண்டியர்களின் சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். சுதந்திரப் போராட்டத்தில் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட மருது சகோதரர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது.மாவட்ட மக்கள் பெருமளவில் கலந்துகொண்டு வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில்…

Read More

“பாஜக மாடல் தவெக அரசு”-க்கு எதிரான உரிமைப் போராட்டங்கள் வெல்லட்டும்

சென்னை, அக்.25-நாதக வேட்பாளர் கார்த்திகாவின் விடுதலைக்கு குரல் கொடுத்த அனைத்து தலைவர்களுக்கும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்து கொண்டுள்ளார். இது தொடர்பாக “பாஜக மாடல் தவெக அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்” என்று தலைப்பிட்டு சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில் சீமான் கூறி உள்ளதாவது;டெல்லியின் பாஜக அரசுபோல் தமிழக அரசால் பொய் வழக்கு புனையப்பட்டு அநீதியாகக் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை…

Read More

ஒரே நேரத்தில் 2 புயல்கள் தமிழகத்துக்கு பிரச்சினை: பிரதீப் ஜான்

சென்னை, அக்.25- வங்கக்கடலில் உருவாகியிருக்கும் அர்னாப் புயல், அரபிக்கடலில் நிலைகொண்டிருக்கும் புயல் சின்னத்தை தன்னுள்ளே இழுக்க தொடங்கியிருப்பதாகவும், இதனால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை கொட்டி தீர்க்கப்போகிறது எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.இது குறித்து அவர் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது “வங்கக்கடலில் உருவாகி வரும் அர்னாப் புயல் மற்றும் அரபிக்கடலில் உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆகிய இரு வானிலை அமைப்புகளுக்கு இடையே நடக்கும் விசித்திரமான அறிவியல் தொடர்பு, பாக்ஸிங் சண்டை…

Read More