Breaking News

நாள்தோறும் அலைக்கழிக்கப்படும்டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள்

மதுரை, அக். 27-‘’மதுரையில் ‘டெட்’ தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் உண்மைத் தன்மை சான்று கேட்டு தினமும் சி.இ.ஓ., அலுவலகம் சென்றுவர வேண்டியுள்ளது’’ என புலம்புகின்றனர்.அரசு, உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு ‘டெட்’ தேர்ச்சி கட்டாயம். 2012 முதல் ‘டெட்’ தேர்வு நடத்தப்படுகிறது. தேர்ச்சி பெறாத, பணியில் உள்ள ஆசிரியரும் எழுதுகின்றனர். 2025 ல் நடந்த தேர்வில், பணியில் உள்ள ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் உட்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மதுரையில் தேர்ச்சி பெற்றனர்.தேர்ச்சி சான்றை…

Read More

மதுரை மாநக​ராட்​சி​யில் 15 அதிமுக கவுன்​சிலர்​கள் தவெக​விற்கு மாற திட்​டம்

மதுரை, அக். 27-கடந்த ஓராண்​டாக அதிமுக​வில் இருந்து முன்​னாள் அமைச்​சர்​கள், முன்​னாள் எம்​எல்ஏ-க்​கள், நிர்​வாகி​கள் என்று தவெகவுக்கு படையெடுப்​போர் பட்​டியல் நீண்டு கொண்டே செல்​கிறது. மதுரை மாவட்​டத்​தில் அதிமுக​வின் மும்​மூர்த்​தி​களான முன்​னாள் அமைச்​சர்​கள் செல்​லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், அமைப்​புச் செய​லா​ளர் விவி.ராஜன் செல்​லப்பா ஆகியோர் கட்​சியை ஓரளவு கட்​டுக்​கோப்​பாக வைத்​திருப்​ப​தால், முக்​கிய நிர்​வாகி​கள் யாரும் இது​வரை தவெகவுக்கு செல்​ல​வில்லை.மதுரை மாநக​ராட்சி அதிமுக கவுன்​சிலர்​கள் ரூபி​னி​யின் கணவரும், மாநகர் பொருளாள​ரு​மான குமார், மற்​றொரு கவுன்​சிலர் வசந்​தாவின் மக​னும்,…

Read More

மதுரை மேலூர் அருகே மாயமான சிறுவன்: பாழடைந்த வீட்டில் சடலமாக கண்டெடுப்பு

மதுரை, அக். 27-மதுரை மாவட்டம், மேலூர் அருகே நேற்று காணாமல் போன 7 வயது சிறுவன், வீட்டின் அருகே உள்ள ஒரு பாழடைந்த ஓட்டு வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலூர் அருகே உள்ள தனியமங்கலத்தை சேர்ந்த பெரியகருப்பன் – சத்தியா தம்பதியின் 7 வயது ஆண் குழந்தை முத்துச்செல்வம் நேற்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மாயமாகியுள்ளார். நீண்ட நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பாததால், பதற்றமடைந்த குடும்பத்தினர் மற்றும்…

Read More

வைகை – யானைக்கல் தரைப்பாலத்தைகண்காணிப்பு அலுவலர் பழனி ஆய்வு செய்தார்

மதுரை, அக். 27-மதுரை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பழனி, மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோருடன் இணைந்து மாநகராட்சியின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.வைகை – யானைக்கல் தரைப்பாலம் பகுதிகளில் ஆற்றில் வரும் மழைநீர் எவ்விதத் தடையுமின்றி சீராகக் கடந்து செல்வதை உறுதி செய்யும் பணிகளை ஆய்வு செய்தார்.பாலத்தின் கீழ்ப்பகுதியில் மரக்கட்டைகள், நெகிழி மற்றும் கழிவுகள் ஏதேனும் அடைப்பு ஏற்படுத்தாத வண்ணம் உடனுக்குடன் அகற்றிடவும், ஆற்றங்கரைப் பகுதிகளில் முன்னெச்சரிக்கைப் பணிகளைத்…

Read More

நாளை உருவாகிறது அர்னாப் புயல்;மதுரை, திண்டுக்கல், தேனிக்கு ரெட் அலெர்ட்

மதுரை, அக். 27-சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. நேற்று காலை, 8.30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் பர்லியாரில், 25 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி எஸ்டேட் பகுதியில், 20 செ.மீ., குன்னுாரில் 17 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய, காற்றழுத்த தாழ்வு பகுதி,…

Read More

மீனவ மக்களின் வாழ்வியல் கோரிக்கை மீதுதமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்வீரபாண்டியன் வலியுறுத்தல்

சென்னை, அக். 27-சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அறிவிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நேற்று முன்தினம் தொடங்கியது. நவம்பர் 1-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கையெழுத்து இயக்கத்தை பட்டினப்பாக்கம் முள்ளி மாநகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் முதல் கையெழுத்திட்டு, தொடங்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் மு.ீரபாண்டியன் கூறியதாவது:“பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் என்ற திட்டத்தை அரசு கைவிட வேண்டும்,…

Read More

ஆவின் பால் உற்பத்தி நிறுத்தமா? நிர்வாகம் விளக்கம்

சென்னை, அக். 27-தமிழக கூட்டுறவுத்துறை பால் உற்பத்தியாளர்கள் மூலம் தமிழகம் முழுவதும் பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் பால் உள்ளிட்ட அனைத்து வகையான பொருள்களும் விற்பனை செய்யப்படுகிறது. மக்களுக்கு குறைந்த விலையில் ஆவின் பால் உள்ளிட்ட பால் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆவின் நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதற்கிடையில், ஆவின் பால் மற்றும் பனீர், வெண்ணெய் போன்ற 100 பொருள்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக தகவல்கள்…

Read More

தமிழகத்தில் அதிக வருவாய் ஈட்டும் 10 கோவில்கள்:முதலிடத்தில் பழனி முருகன் கோவில்

சென்னை, அக். 27-தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற கோவில்கள் ஏராளமாக உள்ளன. முருகப்பெருமானின் அறுபடை வீடுகள், மதுரை மீனாட்சி அம்மன், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் என பிரபலமான கோவில்கள் பல உள்ளன.தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை இந்த கோவில்களின் நிர்வாகங்களை கவனித்து வருகிறது.இந்த கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணத்தை குறிப்பிட்ட இடைவெளியில் அறநிலையத்துறை சார்பில் எண்ணப்படுகிறது. இதன் விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், அதிக வருமானம் ஈட்டும்…

Read More

நடிகர்கள் தனுஷ், எஸ்.கே. என யார் வந்தாலும், மக்கள் ஏற்கெனவே பட்ட அனுபவத்தை வைத்துத்தான் முடிவெடுப்பார்கள்

சென்னை, அக்.27-சினிமா நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவது தமிழக அரசியலில் எப்போதுமே கவனம் பெறும் விஷயமாக இருக்கிறது.அந்த வகையில், நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன் அரசியலுக்கு வந்தால் எந்தக் கட்சியுடன் இணைவார்கள், யாருக்கு நெருக்கடி ஏற்படும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. விஜய்க்கு கிடைத்த ஆதரவு இனி வரும் நடிகர்களுக்கும் கிடைக்குமா என்பது குறித்தும் மூத்த பத்திரிகையாளரும், வழக்கறிஞருமான கோடீஸ்வரன் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்துள்ள கோடீஸ்வரன், “தனுஷ் புதிதாக அரசியலுக்கு வந்தால், விஜய்க்கு இவ்வளவு ஆதரவு…

Read More

முதல்வர் விஜய் பங்கேற்கும் அரசு விழா – அமைச்சர் ஆனந்த் நேரில் ஆய்வு

ஈரோடு, அக்.27-தமிழக முதல்வர் விஜய் பங்கேற்கும் அரசு விழாவிற்கான ஆயத்தப் பணிகளைப் பார்வையிடவும், இடத்தை தேர்வு செய்யவும் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஆனந்த் ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு வருகை தந்தார்.அப்போது விஜயமங்கலம் டோல்கேட் பகுதியில் பெருந்துறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான எஸ். ஜெயகுமார் தலைமையில் நிர்வாகிகள் திரளாகக் கூடி உற்சாகமாக வரவேற்றனர்.இந்த வரவேற்பு நிகழ்வில், ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஆனந்த் மோகன், தாராபுரம்…

Read More