சிறுமியை கண்டுபிடிக்காத சிங்கப்பெண்கள் பாதுகாப்புப்படை- வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
விழுப்புரம், அக். 23-விழுப்புரம் அருகே 7 வயது சிறுமி காணாமல் போன வழக்கு தற்போது சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.சிறுமிகள், பெண்கள் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட சிங்கப்பெண்கள் பாதுகாப்பு படை இருந்தும் சிறுமியை கண்டுபிடிக்க முடியாதது விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. கடந்த 12ம் தேதி அதிகாலை, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி திடீரென காணாமல் போயிருக்கிறார்.சிறுமியை கண்டுபிடிக்க 3 காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 8 தனிப்படை அமைக்கப்பட்டு…
