Breaking News

பினராயி விஜயனுக்குஅமலாக்கத்துறை சம்மன்: கைது ஆவாரா?

திருவனந்தபுரம், அக். 22-கொச்சி சி.எம்.ஆர்.எல் தாதுமணல் நிறுவனத்திடமிருந்து முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவின் எக்ஸாலாஜிக் நிறுவனம் மூலம் ரூ.3.28 கோடி லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் கேரள லஞ்ச ஒழிப்புத் துறை பினராயி விஜயன், மகள் வீணா மற்றும் மருமகன் முகமது ரியாஸ் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.எஃப்.ஐ.ஆர்-க்கு எதிரான மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, அக்டோபர் 23 அன்று விசாரணைக்கு ஆஜராக பினராயி விஜயனுக்கு…

Read More

அதிமுகவில் கோவை சத்யனுக்கு முக்கிய பதவி

சென்னை, அக். 22-அதிமுகவில் மிகவும் பிரபலமானவர் கோவை சத்யன். அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் முக்கியப் பொறுப்புகளை வகித்து, கட்சியின் இணையதளப் பிரச்சாரங்களிலும் சமூக ஊடகச் செயல்பாடுகளிலும் தீவிரமாகப் பங்காற்றியவர்.இந்நிலையில் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் பொறுப்பில் இருந்து அவர் இன்று முதல் விடுவிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து அதிமுகவில் கோவை சத்யனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக…

Read More

கீழடி அகழாய்வு குழிகள் மூடல்

கீழடி, அக். 22-கீழடி 11ம் கட்ட அகழாய்வில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது.ஆய்வு பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் மாலை நேரங்களில் மழை பெய்வதால் அகழாய்வு குழிகள் தார்ப்பாய் போட்டு மூடி வைக்கப்பட்டுள்ளன.கீழடியில் கஜேந்திரன் என்பவரது ஒன்றரை ஏக்கர் நிலத்தில் கடந்த மார்ச் 15 முதல் அகழாய்வு பணிகள் கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ் தலைமையில் நடந்து வருகிறது.இதுவரை மொத்தம் 13 குழிகள் தோண்டப்பட்டு கைப்பிடியுடன் கூடிய சுடுமண் பானை, சாய…

Read More

177 ஆண்டுகள் பழமையாக இயேசுநாதர் சிலை சேதம்

துாத்துக்குடி, அக். 22-இடி தாக்கியதில், நுாற்றாண்டை கடந்த சர்ச் கோபுரத்தில் இருந்த இயேசு சொரூபத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது.துாத்துக்குடி மாவட்டத்தில், நேற்று பல இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இடி தாக்கியதில், நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள நுாற்றாண்டுகளை கடந்த சின்னக்கோவில் என அழைக்கப்படும் சர்ச் கோபுரத்தில் இருந்த இயேசு சொரூபத்தின் இடதுகை பகுதி சேதமடைந்தது.இச்சம்பவம், கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சொரூபத்தை சீரமைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல இடி…

Read More

நான் என்ன தவறு செய்தேன்? நாதக கார்த்திகா ஆவேசம்

திருப்பூர், அக். 22-“எந்த தவறும் செய்யாத என்னை இரவு உடையில் கைது செய்தனர்” என நாம் தமிழர் தாராபுரம் இடைத்தேர்தல் வேட்பாளர் கார்த்திகா ஆவேசமாக தெரிவித்துள்ளார்.முதல்வரை அவதூறாக பேசியதாக கார்த்திகா கைது செய்யப்பட்டுள்ளார். கார்த்திகா கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வரப்பட்ட போது அவர் செய்தியாளர்களை பார்த்து இந்த விஷயங்களை தெரிவித்தார். ஆனால் அவரை பேச விடாமல் போலீஸார் தலையை உள்ளே அழுத்தி வேனில் ஏற்றிச் சென்றனர்.தாராபுரம் இடைத்தேர்தலில் தமிழ்நாடு முதலமைச்சரை அவதூறாக பேசியது, சாலை…

Read More

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உள்ளாட்சி தேர்தல் ஏப்ரலில் நடைபெறும்தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு

சென்னை, அக். 22-தமிழ்நாட்டின் ஊரக அரசியல் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், ஊராட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுத் தனி அலுவலர்களின் ஆட்சி நீட்டிக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி அண்மையில் வெளியாகியுள்ளது. மாநிலத்தின் 37 மாவட்டங்களிலும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அடுத்த ஆறு மாதங்களுக்குப் புதிய தேர்தல்கள் நடத்தப்படாது என்றும், அதிகாரிகளே உள்ளாட்சிகளைத் தலைமை தாங்குவார்கள் என்றும் அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் முதன்மைச் செயலாளர்…

Read More

மலைக்கோட்டை மாநகர்2வது தலைநகரமாக மாறுகிறது

சென்னை, அக். 22-தமிழகத்தின் தலைநகராக சென்னை தொடர்ந்து வரும் நிலையில் இரண்டாவது தலைநகராக திருச்சியை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே எழுந்து வருகிறது.குறிப்பாக திருச்சியை தலைநகராக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலுத்து வரும் நிலையில் அதனைப் பற்றிய ஆய்வில் தமிழக அரசு ஈடுபட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக விரைவில் இது தொடர்பான அறிவிப்பும் வெளியாகும் என்றும் சொல்கின்றன தலைமைச் செயலக வட்டாரத்தினர்.தமிழகத்தின் தலைநகராக சென்னை தான் விளங்கி வருகிறது. வெள்ளையர் ஆட்சி காலத்திலேயே…

Read More

பாஜக, காங்கிரஸ் இல்லாத 3வது அணி-ஸ்டாலின், மம்தா, தேஜஸ்வி யாதவ் கூட்டணி

சென்னை, அக். 22-காங்கிரஸ் இல்லாத 3வது அணி? முக ஸ்டாலின் பிரதமர் வேட்பாளர் மம்தா பானர்ஜி, தேஜஸ்வி யாதவ் சம்மதம், அகிலேஷ் யாதவ் சம்மதமில்லை இன்னொரு பக்கம் பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் விஜய். ஏற்கனவே மோடி தலைமையில் பாஜக கூட்டணி. காங்கிரஸ் நட்டாற்றில் விடப்படுகிறதா? பிரதமர் பதவி என்பது ராகுல் காந்திக்கு கானல் நீர் தானா? மோடி, விஜய், முக ஸ்டாலின், ராகுல் காந்தி என 4 பிரதமர் வேட்பாளர்கள்.. 2029ல் யாருக்கு வெற்றி கிடைக்கும்?இந்திய அரசியலில்…

Read More

‘ஜான்’ ஏறுது ‘ஆனந்தம்’ சறுக்குது: பனையூர் பார்ட்டியில் பஞ்சாயத்து

சென்னை, அக். 22-‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ என்பது போல கட்சிகளுக்குள் உட்கட்சி மோதல் என்பது சகஜம் தான்.ஆனால் தமிழகத்தில் இரண்டு கட்சிகளில் உச்சத்தில் இருக்கிறது உட்கட்சி மோதல் என்கின்றனர். முன்னாள் ஆளுங்கட்சி ஒன்றில் அடிதடி அரங்கேறிக் கொண்டிருக்கும் நிலையில், புதிதாக பிரசிவித்த கட்சி பாலிடிக்ஸ் பஞ்சாயத்தால் சிக்கித் தவிக்கிறது என்கின்றனர்.அண்ணனின் உண்மையான விழுது நான் தான் என்பதில், ‘ஐடியா’ கொடுப்பவர்க்கும், ஆட்சியில் இருப்பவருக்கும் இடையே பிரச்சனை வெடித்துள்ளதாம். இதனால் கட்சியில் “ஜான் ஏறினால்.. முழம் சறுக்குது.. ‘ஆனந்தமே’…

Read More

சாமானிய மக்களுக்கு ஒரு சட்டம்… அமைச்சருக்கு ஒரு சட்டமா? ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் மழை வெள்ளப் பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர் ராஜ்மோகன்? போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுக்குமா?

சென்னை, அக். 20- ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தால் சாமானிய மக்களுக்கு அபராதம் விதிக்கும் போக்குவரத்துக் காவல்துறை, மக்கள் பிரதிநிதிகள் விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதையடுத்து, மழைநீர் தேங்கிய பகுதிகளைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் நேரில் பார்வையிட்டு, மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்தார். இதுதொடர்பாக அக்டோபர் 18ஆம்…

Read More