admin

விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்த மைக்ரோசாப்ட்: 60,000 ஊழியர்களை வெளியேற்ற திட்டமா?

சென்னை, அக். 28-செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு மற்றும் தரவு மையங்களில் பெரும் முதலீடுகளை மேற்கொண்டு வரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் உள்ள சுமார் 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளது. இது அதன் மொத்த பணியாளர்களில் கால் பகுதிக்கும் அதிகமானோரை கவர்வதாக கூறப்படுகிறது. லெவல் 70 மற்றும் அதற்கு கீழுள்ள தகுதியான பணியாளர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும் எனவும், எக்ஸ்பாக்ஸ், விண்டோஸ், மனித…

Read More

திபெத்தில் சீனா கட்டும் பிரமாண்ட அணையால் இந்தியாவுக்கு வெள்ள ஆபத்து?

திபெத், அக். 28-சீனாவின் தன்னாட்சி பிரதேசமான திபெத்தில் யர்லுங் தசாங்போ நதி பாய்கிறது. அந்த நதி அருணாச்சல பிரதேசத்தில் நுழையும்போது பிரம்மபுத்திரா என அழைக்கப்படுகிறது. தற்போது அந்த நதியின் குறுக்கே உலகின் மிகப்பெரிய அணையை சீனா கட்டி வருகிறது. திபெத்தின் தென்கிழக்கில் இந்தியாவுடனான எல்லைக்கு அருகில் உள்ள மோடோக் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.சீன அறிவியல் அகாடமி மற்றும் யுனான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த அணை தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். 1325 முதல் 2020…

Read More

‘ஒரு பக்கம் குழந்தைகள் மாயம்-மறுபக்கம் கைதிகள் ஓட்டம்’; இதுதான் டம்மி முதல்வரின் சாதனை-உதயநிதி கண்டனம்

சென்னை, அக். 28-தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் இரவு நேரத்தில் தப்பி ஓடிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தற்பொழுது வரை நான்கு பேர் பிடிபட்டுள்ளனர். மீதமுள்ள சிறைவாசிகளை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தேனி மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கி உள்ளது. காரணம் தமிழகத்திலேயே முதல் முறையாக 17 கைதிகள் ஒரே நேரத்தில் சிறையில் இருந்து தப்பிய சம்பவம் இதுவாகும்.இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி பல்வேறு…

Read More

அன்பில் மகேஸ் கைது: “நிர்வாகச் சீர்கேடு,பழிவாங்கல், அடக்குமுறை” – திமுக தலைவர்களின் கருத்து

சென்னை, அக். 28-கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில், தனியார்ப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி பெறப்பட்டு மோசடி நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருந்தது.அந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். நேற்று காலை அவருடைய மனுத் தள்ளுபடி செய்ய்யப்பட்டது.அதைத் தொடர்ந்து மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் சென்னை அமைந்தகரையில் வைத்து முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை…

Read More

முதல்வர் நடத்தியது சிறைத்துறை ஆய்வா, ஜோதிடப் பரிகாரமா?கைதிகள் தப்பிய விவகாரத்தில் எடப்பாடி

தேனி, அக். 28-தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் மாவட்ட சிறைச்சாலை அமைந்துள்ளது, இதில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சிறை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தேக்கம்பட்டி சிறையில் உள்ள 17 கைதிகள் சிறையில் இருந்து தப்பியதாக காவல்துறை தெரிவித்திருந்தது. காவல்துறையின் விசாரணையில் கைதிகள் சிறை அதிகாரிகளை தாக்கிவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. 17 கைதிகள் தப்பியோடிய நிலையில், இதுவரை 4 பேர் பிடிக்கப்பட்டுள்ளனர். தப்பியோடிய கைதிகளைத் தேடிப் பிடிக்க காவல்துறையினர் தீவிர வாகனச்…

Read More

செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் சிபிசிஐடி திணறல்: கூடுதல் அதிகாரி நியமனம்

விழுப்புரம், அக். 28-செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் சிபிசிஐடி திணறுவதால் கூடுதல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த வழக்கு தொடர்பாக ரவுடி, பெண், வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டியை சேர்ந்த வடிவேலு, பவானி தம்பதியின் மகள் ஹேமாவதி(7). அரசுப்பள்ளியில் 2ம்வகுப்பு படித்து வந்த சிறுமி கடந்த 11ம் தேதி இரவு வீட்டில் பெற்றோருடன் பிறந்தநாள் கொண்டாடிவிட்டு தூங்கச் சென்றவர் காலையில் மாயமானார்.இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். 10 தனிப்படைகள்…

Read More

நாளை அமைச்சரவை கூட்டம்:இலாகா மாற்றுவது குறித்து தகவல்

சென்னை, அக். 28-தமிழ்நாடு அரசின் அமைச்சரவைக் கூட்டம் நாளை காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் அவ்வப்போது நடைபெறும் இந்த அமைச்சரவைக் கூட்டங்கள், மாநில நிர்வாகத்தின் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான முக்கிய மேடையாக அமைகின்றன.இந்தக் கூட்டத்தில் நிர்வாக ரீதியான பல்வேறு முடிவுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.மாநிலத்தின் அன்றாட நிர்வாகம்…

Read More

“அண்ணாமலை படத்தின் ரீமேக்கில்நடிக்க விரும்புகிறேன்” – சிவகார்த்திகேயன்

சென்னையில் நடந்த செய்தி வாசிப்பாளர் சங்க விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டிருக்கிறார்.நிகழ்ச்சியில் நெகட்டிவ் கமென்ட்ஸ் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதிலளித்த அவர், “சோஷியல் மீடியாவில் நெகட்டிவ் கமென்ட் பார்ப்பது, படிப்பது இல்லை. என் சோஷியல் மீடியா பணிகளை என் டீம் பார்க்கிறது.இப்போது ஒரே நேரத்தில் 2 படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். அடுத்து 2 பட ஸ்கிரிப்ட் வொர்க் நடந்துக்கொண்டு இருக்கிறது. தவிர, என் தயாரிப்பில் 3 படங்கள் உருவாகிறது. ஆக தற்போது 7…

Read More

சோழவந்தானில் குளம் போல் தேங்கிய மழைநீர்

சோழவந்தான், அக். 27-கனமழையால் ஜெனகை மாரியம்மன் கோவில் அருகே சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அவதியடைந்துள்ளனர். மழைநீருடன் கழிவுநீரும் கலப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தொடர் புகார்கள் எழுந்தும் நீடிக்கும் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண, முறையான மழைநீர் வடிகால் வசதி அமைத்து, கழிவுநீர் கலப்பதைத் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Read More

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை- ஆா்.பி.உதயகுமாா்

மதுரை, அக். 27-தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என அதிமுக முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-தமிழகத்தில் அத்தியாவசியப் பொருள்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுமட்டுமன்றி, குற்றச் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.குறிப்பாக, அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய 7 வயது சிறுமி காணாமல் போன சம்பவம் கவலையளிக்கிறது. காணாமல் போன சிறுமியைக் கண்டறியும் முயற்சிகள் எந்த முன்னேற்றத்தையும் தரவில்லை. காவல் துறையின் செயல்பாடுகள் பலனளிக்கவில்லை. இதனால், இந்த…

Read More