தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு:பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்-முதல்வர் எச்சரிக்கை
சென்னை, நவ. 15-தமிழ்நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களான துவரம் பருப்பு, உளுந்து, நெல் மற்றும் அரிசி ஆகியவற்றின் விநியோகத்தைச் சீராகப் பராமரிக்கவும், செயற்கையான விலையேற்றம் மற்றும் பதுக்கலை முற்றிலும் தடுக்கவும் இருப்பு உச்சவரம்பை நிர்ணயித்துத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.மத்திய அரசின் அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955, பிரிவு 3-ன் கீழ், மத்திய அரசின் ஒப்புதலுடன் தமிழக ஆளுநர் இந்த உத்தரவைப்…
