admin

தவெக கல்வி விருது விழா:ராகுல் கலந்து கொள்கிறார்

சென்னை, நவ. 19-தவெகவின் 2ஆம் கட்ட கல்வி விருது விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை அழைக்க முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.ராகுல் காந்தியின் நேர ஒதுக்கீட்டை பொறுத்து கல்வி விருது விழாவை நடத்த தவெக திட்டமிட்டிருக்கிறது. இதனால் தவெக – காங்கிரஸ் இடையிலான கூட்டணியில் கூடுதல் நெருக்கம் ஏற்படும் என்று கருதப்படுகிறது.சட்டசபைத் தேர்தலுக்கு பின் தவெக – காங்கிரஸ் இடையிலான கூட்டணி உருவாகியது. இதன்பின் டெல்லியில் சோனியா காந்தி மற்றும் ராகுல்…

Read More

பெண் காவலர்களின் கைபேசியை அமைச்சர் ஆய்வு செய்தது ஏன்? – பழனிசாமி கேள்வி

சென்னை, நவ. 19-‘நள்ளிரவில் காவல் நிலையத்துக்குள் சென்ற அமைச்சர் காந்திராஜ், அங்கு பணியில் இருந்த பெண் காவலர்களின் கைபேசியை எந்த நோக்கத்தில் ஆய்வு செய்தார்?’ என, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: தவெக தலைவர் விஜய் வழியில் தொண்டர்கள், நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் என்று அனைவருமே ‘ரீல்ஸ்’ மோகத்தில் ஆழ்ந்து, மக்களின் அடிப்படை பிரச்சினைகளை திசை திருப்பும் ஒரு மோசமான ஆட்சியை தவெக அரசு வழங்கிக்கொண்டிருக்கிறது. பொதுவாக காவல்நிலையம்…

Read More

“காங்கிரஸ் சவகாசமே வேண்டாம்”ராகுல்காந்தியின் அழைப்பை தவிர்த்த ஸ்டாலின்:புத்தக வெளியீட்டில் பங்கேற்காதது ஏன்?

சென்னை, நவ. 19-சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்குமாறு ராகுல் காந்தி விடுத்த அழைப்பை தவிர்த்திருக்கிறார் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.அண்மையில் டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உள்ளிட்ட 7 முதல்வர்கள் மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்பதாக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை ராகுல்காந்தி தொடர்புகொள்ள முயன்ற போது அந்த அழைப்பை ஸ்டாலின் தவிர்த்துவிட்டதாக…

Read More

திருச்சியில் நாளை ரூ.134 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்

சென்னை, நவ. 19-தமிழக முதல்வர் ஜோசப் விஜய், நாளை திருச்சிக்கு வருகைதர இருக்கிறார்.அன்று காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானத்தில் காலை 10 மணிக்கு திருச்சி வரும் முதல்வர் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஒரே நேரத்தில் 500 நோயாளிகள் சிறப்புச் சிகிச்சை பெறும் வகையில் ரூ.134 கோடி செலவில் நவீன வசதியுடன் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தைத் திறந்து வைக்கிறார்.பிறகு அங்கிருந்து அண்ணா விளையாட்டரங்கம் அருகே செல்லும் அவர் அங்கு பல…

Read More

லஞ்ச, ஊழல் வழக்குகளை விரைவாக முடிக்கபுதிய கூடுதல் நீதிமன்றங்களை அமைக்க வேண்டும்ஐகோர்ட் கிளை உத்தரவு

நிலுவையில் உள்ள லஞ்ச, ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க கூடுதல் மாவட்ட நீதிமன்றங்களை, சிறப்பு நீதிமன்றங்களாக அறிவிப்பது குறித்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

Read More

திருப்பரங்குன்றத்தில் 18ம் தேதிஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

மதுரை, நவ. 15-ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை, பல ஆண்டுகளாக அரசு தடுத்து வருகிறது.இதற்காக ஹிந்து முன்னணி தொடர்ந்து போராடி வருகிறது. கடந்தாண்டு, வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு, நீதிமன்றத்தில் வெளியானபோதும், அரசு தீபம் ஏற்றவில்லை. தீபமேற்ற வலியுறுத்தி, இன்று தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில், ‘ஒன்று கூடுவோம்; சஷ்டி பாடுவோம்’ என்ற தலைப்பில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் நடைபெறுகிறது.வரும் 18ம் தேதி மாலை…

Read More

செக்கானூரணி காவல் நிலைய மரணம் : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம்

சென்னை, நவ. 15-காவல் நிலையங்களில் டம்மி முதல்வர் ஆய்வு செய்த பிறகும் காவல் மரணங்கள் தொடருவதை கண்டிக்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; டம்மி முதல்வர் காவல் நிலையங்களில் ஆய்வு செய்த பிறகும் காவல் மரணங்கள் தொடருவதை வன்மையாக கண்டிக்கிறேன். மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி எரிந்தது தொடர்பாக புகார் அளிக்க சென்ற பாலகிருஷ்ணன் என்பவர் காவல் நிலையத்திலேயே மரணம் அடைந்திருக்கிறார்.புகாரளித்த பாலகிருஷ்ணனை சட்டத்துக்குப் புறம்பாக இரவில்…

Read More

கள்ளக்குறிச்சியில்17ஆம் தேதி அதிமுக போராட்டம்எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

சென்னை, நவ. 15-கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், அந்த மாவட்ட ஆட்சியருக்கு சர்ச்சையான குறுஞ்செய்தி அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி சென்னை அடுத்த மாமல்லப்புரத்தில் நடந்த தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், முதலமைச்சர் விஜய், எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை கடுமையாக எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக…

Read More

மேகதாது அணை விவகாரம்: ஒற்றுமையாக நிற்போம்- முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கடிதம்

சென்னை, நவ. 15-மேகதாது அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது எனப் பிரதமர் மோடி முன்னிலையில் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பேசியிருந்தார். இந்நிலையில் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினையான காவிரி விவகாரத்தில், இனியும் அமைதி காக்காமல் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியவற்றை வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், 13-11-2026 அன்று மைசூரில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி…

Read More

எனது செல்போனை பிரதமர் மோடி ஒட்டுக் கேட்கிறார்: மோடி மீது ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு

புதுடெல்லி, நவ. 15-பிரதமர் மோடிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் தனது செல்போனில் இருப்பதாகவும் மோடி அதனை ஒட்டுக் கேட்பதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.இன்ஸ்டாகிராமில் நடைபெற்ற என்னிடம் கேளுங்கள் (ஆஸ்க் மி) நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுலிடம் ஏராளமானவர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு ராகுல் காந்தி உடனுக்குடன் பதிலளித்தார். அப்போது, ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜ தலைவர்கள் நாடாளுமன்றத்தில் விவாதிக்குமாறு அழைப்புவிடுக்கும் பட்சத்தில், பிரதமர் மோடியை ஏன் நேரடி விவாதத்துக்கு…

Read More