சென்னை, நவ. 15-
கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், அந்த மாவட்ட ஆட்சியருக்கு சர்ச்சையான குறுஞ்செய்தி அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி சென்னை அடுத்த மாமல்லப்புரத்தில் நடந்த தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், முதலமைச்சர் விஜய், எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை கடுமையாக எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாள
ர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, வரும் 17ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில்17ஆம் தேதி அதிமுக போராட்டம்எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
