கழிவுநீரில் தத்தளிக்கும் மேலுார் அரசு மருத்துவமனை
மேலுார், நவ. 12-மேலுார் அரசு மருத்துவமனையில் செப்டிக் டேங்க் நிரம்பி, கழிவுநீர் மருத்துவமனை வளாகம், பிணவறையில் தேங்குவதால் நோயாளிகளின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி உள்ளது.மேலுார் தாலுகா அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள், புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனையில் செப்டிக் டேங்க் நிரம்பி கழிவு நீர் வெளியேறி மருத்துவமனை வளாகத்தில் ஆறாக ஓடுகிறது. நோயாளிகள் கூறியதாவது : சிகிச்சை பெறும் வார்டு பகுதியில் செப்டி டேங்க் தண்ணீர் வெளியேறி துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடாக காணப்படுகிறது. இதனால் படுக்கையில்…
