மதுரை தனிஷ்க் நகைக்கடையில்500 பவுன் நகைகள் கொள்ளை

மதுரை, நவ. 13-
அதிகாலை 3 மணிய
ளவில் துணிகரம்மதுரை பைபாஸ் பகுதியில் செயல்பட்டு வரும் டாடா குழுமத்தின் தனிஷ்க் நகைக்கடையில் நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது.
கடையில் இருந்த சுமார் 500 சவரன் தங்க நகைகள் கொள்ளையடி
க்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூ.50 கோடி எனக் கூறப்படு
கிறது.
அண்மையில் திறக்க
ப்பட்ட இந்த நகைக்கடை
யின் பின்புறம் வழியாக கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற
தாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாலை நேரத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
500 சவரன் நகைகள் கொள்ளையடிக்க
ப்பட்டதாக வெளியாகி
யுள்ள தகவலைத் தொடர்ந்து, கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணை மற்றும் நகைகளின் மதிப்பு குறித்த கூடுதல் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
கொள்ளையர்கள் எத்தனை பேர், எவ்வாறு கடைக்குள் நுழைந்தனர், பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறி நகைகளைக் கொள்ளையடித்தது எப்படி என்பது உள்ளிட்ட விவரங்கள் விசாரணையில் தெரியவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *