Breaking News

என்னை எப்படியெல்லாம் பேசினீர்கள்?ஷாம்பு, சோப்பால் ஆற்றில் நுரை வருதுன்னு சொல்லும் அமைச்சருக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் -செல்லூர் ராஜூ

மதுரை, அக். 30-அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நேற்று அளித்த பேட்டி: மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை விஜய் கொடுத்துள்ளார். விலை உயர்வை தீபாவளி பரிசாக தவெக அரசு கொடுத்துள்ளது. கைதட்ட, சிரிக்க, பாவனை செய்ய, பேசக்கூட பொம்மைகள் வந்துவிட்டன.முதல்வர் எதற்கும் வாய்திறக்க மாட்டேன் என்கிறார். தவெக அரசு வந்த பிறகு மின் கொள்முதலை அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள். வழிப்பறி, சிறுபிள்ளைகள் கடத்தல் நாள்தோறும் நடக்கிறது. பாட்டி முதல் பாப்பா வரை…

Read More

தேவர் ஜெயந்தி: இன்று மதுரை வருகிறார் மு.க.ஸ்டாலின்

மதுரை, அக். 30-இன்று நடைபெறவுள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னிற்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தவுள்ளார்.இன்று காலை மதுரை செல்லும் மு.க.ஸ்டாலின், கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதனைத் தொடர்ந்து மதுரை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்டத் தியாகிகளான மாவீரர் மருதுபாண்டியர்களின் உருவச்சிலைகளுக்கும் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.மதுரையில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு…

Read More

ரூ.200-க்கு 10 மளிகைப் பொருட்கள்:தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு புதிய திட்டம்

சென்னை, அக். 30-தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மளிகைப் பொருட்களை வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.இதன்படி, தமிழ்நாடு கூட்டுறவு அங்காடிகளில் வெறும் ரூ.200-க்கு 10 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு விற்பனை செய்யப்பட உள்ளது. இத்திட்டம் சென்னையில் நாளை தொடங்கி வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மளிகைப் பொருட்கள் தொகுப்பில் அன்றாட சமையலுக்குத் தேவையான கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, மிளகாய், கடுகு, சீரகம் உள்ளிட்ட 10 வகையான பொருட்கள் இடம்பெற உள்ளன….

Read More

தேவா் குருபூஜை: போக்குவரத்து மாற்றம்

ராமநாதபுரம், அக். 30-ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் தேவா் குருபூஜையையொட்டி, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாள்கள் பேருந்துகள், கனரக வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் தேவா் குருபூஜையையொட்டி, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாள்கள் பேருந்துகள், கனரக வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:தேவா் குருபூஜையில் கலந்து கொள்ள ராமநாதபுரம், பிற மாவட்டங்களிலிருந்து சொந்த வாகனங்களில் வருபவா்கள் அனுமதிக்கப்பட்ட…

Read More

“எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை” ரெய்டுக்குப் பிறகு கே.என்.நேரு பேட்டி

திருச்சி, அக். 30-கடந்த திமுக ஆட்சியின் போது நகராட்சி நிர்வாகத்துறையில் உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் நியமனத்திற்கு ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறி, அத்துறையின் அமைச்சராக இருந்த கே.என்.நேரு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றது.இந்த சூழலில், திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என்.நேரு இல்லம் மற்றும் அவருடைய அலுவலகம், அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று (29-10-26) காலை முதல் சோதனை நடத்தினர்….

Read More

“ரெய்டுகளை கண்டு திமுக தொண்டரின் கால் நகம் கூட அஞ்சாது” – மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை, அக். 30-கடந்த திமுக ஆட்சியின் போது நகராட்சி நிர்வாகத்துறையில் உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் நியமனத்திற்கு ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறி, அத்துறையின் அமைச்சராக இருந்த கே.என்.நேரு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றது.இந்த சூழலில், திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என்.நேரு இல்லம் மற்றும் அவருடைய அலுவலகம், அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று (29-10-26) காலை முதல் சோதனை நடத்தி…

Read More

எம்.எல்.சி தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி; கிண்டல் செய்த பிரதமர் மோடி

புதுடெல்லி, அக். 30-உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், பீகார் மற்றும் கர்நாடகத்தில் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 28 இடங்களுக்கான சட்ட மேலவைத் தேர்தல் அக்டோபர் 23-ஆம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், இந்தத் தேர்தல் வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்டது.இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 12 இடங்களில் ஒன்றில் கூட வெற்றி பெற முடியாமல் பின்னடைவைச் சந்தித்தது. குறிப்பாக காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் கர்நாடகாவில் அக்கட்சி ஒரு இடத்தில்…

Read More

திமுக கூட்டணியில் மீண்டும் இணையும் கம்யூனிஸ்ட் கட்சிகள்?

சென்னை, அக். 30-உள்ளாட்சித் தேர்தலின் போதே திமுக கூட்டணியில் மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.தவெக ஆட்சி மீது இரு கட்சியினருக்கும் அதிருப்தி அதிகரித்து வரும் சூழலில், உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் திமுக கூட்டணியில் இணையலாம் என்று கருதப்படுகிறது.சட்டசபைத் தேர்தலுக்கு பின் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, ஐயூஎம்எல் உள்ளிட்டவை தவெகவுடன் இணைந்தன. இதில்…

Read More

முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம்:அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி

சென்னை, அக். 30-முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று (29-10-26) காலை 10 மணியளவில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தவெக, காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தமிழக அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், அரசின் நிலத் திட்டங்கள், நிர்வாக ரீதியிலான முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.இந்த கூட்டம் முடிந்த பிறகு தலைமைச் செயலக வளாகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ‘இந்த அமைச்சரவை கூட்டத்தில்…

Read More

தேவர் ஜெயந்தி : நந்தனத்தில் மரியாதை செலுத்தும் முதல்வர் விஜய்

சென்னை, அக். 29-அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி நாளன்று முதல்வர் விஜய் நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் உருவ சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளதாக தெரிய வந்துள்ளது.முன்னதாக முதல்வர் விஜய் பசும்பொன் வர வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியான சூழலில், அதிகாரிகளின் எச்சரிக்கையை தொடர்ந்து அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி அந்த சமூக மக்களால் விமர்சையாக கொண்டாடப்படும். தென் மாவட்டங்களில் இருந்து சாரை சாரையாக வேன் மற்றும் கார்களில்…

Read More