தேவர் ஜெயந்தி: இன்று மதுரை வருகிறார் மு.க.ஸ்டாலின்

மதுரை, அக். 30-
இன்று நடைபெறவுள்ள பசும்பொன் முத்துராம
லிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை
யொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ராமநாத
புரம் மாவட்டம் பசும்பொ
ன்னிற்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தவுள்ளார்.
இன்று காலை மதுரை செல்லும் மு.க.ஸ்டாலின், கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் உருவச்சிலை
க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதனைத் தொடர்ந்து மதுரை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்டத் தியாகிகளான மாவீரர் மருதுபாண்டியர்க
ளின் உருவச்சிலைகளுக்கும் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.
மதுரையில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நேராக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திற்குச் செல்லும் அவர், அங்குள்ள முத்துராமலிங்க தேவர் அவர்களின் நினைவி
டத்தில் மலர் வளையம் வைத்து பொன்னடை போர்த்தி மரியாதை செலுத்துகிறார்.
பசும்பொன் முத்துராம
லிங்க தேவர் அவர்களின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு தென் மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலை
வர்களும் பசும்பொன்னிற்கு வருகை தரவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *