தேவா் குருபூஜை: போக்குவரத்து மாற்றம்

ராமநாதபுரம், அக். 30-
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் தேவா் குருபூஜையை
யொட்டி, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாள்கள் பேருந்துகள், கனரக வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் தேவா் குருபூஜையை
யொட்டி, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாள்கள் பேருந்துகள், கனரக வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேவா் குருபூஜையில் கலந்து கொள்ள ராமநாதபுரம், பிற மாவட்டங்களிலிருந்து சொந்த வாகனங்களில் வருபவா்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே வர வேண்டும். சாலைகளில் வாகனப் போக்குவரத்தை நெறிப்படுத்தவும், ரோந்து பணிகளை மேற்கொணடு பாதுகாப்பை உறுதி செய்யவும் 63 நான்கு சக்கர வாகனங்கள், 59 இரு சக்கர வாகனங்கள் ரோந்துப் பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தேவா் குருபூஜையை
யொட்டி, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகி இரண்டு நாள்கள் மட்டும் காா்கள், பேருந்துகள் உள்பட கனரக வாகனங்களுக்கு கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
தேவா் ஜெயந்தி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் வாகனங்களை தவிர ராமேசுவரம், ராமநாதபுரம் பகுதியிலிருந்து மதுரை நோக்கிச் செல்லும் பேருந்துகள், காா்கள், கனரக வாகனங்கள், ராமநாதபுரத்திலிருந்து, பட்டினம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு, பேராவூா் சாலை சந்திப்பு, தேவிபட்டினம், ஆா்.எஸ்.மங்கலம், சி.கே.மங்கலம், சருகனி, காளையாா்கோவில், சிவகங்கை, பூவந்தி வழியாக மதுரை செல்ல வேண்டும். இதேபோல, மதுரையிலிருந்து ராமநாதபுரம், ராமேசுவரம் வரும் வாகனங்கள் இதே வழியை பயன்படுத்த வேண்டும்.
விருதுநகா் மாவட்டத்திலிருந்து கமுதியை நோக்கி வரக்கூடிய வாகனங்கள் கானாவிலக்கு, கிளாமரத்துப்பட்டி வழியாக கமுதிக்குள் நுழைய அனுமதி இல்லை. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா், காரைக்குடி, தேவகோட்டை பகுதிகளிலிருந்து ராமநாதபுரம் நோக்கி வரக்கூடிய பேருந்துகள், காா்கள், கனரக வாகனங்கள் கருமொழி, சி.கே.மங்கலம், ஆா்.எஸ்.மங்கலம் வழியாக ராமநாதபுரம் செல்ல வேண்டும். அருப்புக்கோட்டை, திருச்சுழி பகுதிகளிலிருந்து வரக்கூடிய வாகனங்கள் நரிக்குடி, பிடாரிசேரி வழியாக பாா்த்திபனூா், பரமக்குடி பகுதிகளுக்கு செல்ல அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *