Breaking News

கால்நடைகள் சாலையில் திரிந்தால் மதுரை மாநகராட்சி எச்சரிக்கை

மதுரை, நவ.3-மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலைகள், பொது இடங்களில் சுற்றித் திரியும் கால்நடைகளைப் பிடிக்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், நேற்று வைகை ஆற்றின் வடகரை மற்றும் தென்கரைப் பகுதிகளில் சுற்றித் திரிந்த 4 மாடுகள் மற்றும் ஒரு கன்றுக்குட்டி பிடிக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஜூன் 2026 முதல் தற்போது வரை மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றித் திரிந்த 94 கால்நடைகள் பிடிக்கப்பட்டு, கால்நடைப்…

Read More

தமிழ்நாட்டு மக்கள் கண்ணீர் விடுகிறார்கள்:உங்களுக்கு எதற்கு ஆட்சி அதிகாரம்-முதல்வர் பதவி?விஜய்யை விளாசிய உதயகுமார்

மதுரை, நவ.3-அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமாரின் நேற்றைய வீடியோ பதிவு: தமிழ்நாட்டில் தொடர்ந்து நிலவும் சட்டம், ஒழுங்கு பிரச்னை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாதுகாப்புக் குறைபாடு, வரலாறு காணாத வகையில் விலைவாசி உயர்வு போன்றவை அனைத்து தரப்பு மக்களையும் பாதித்துள்ளது.முதல்வராகும் முன்பு குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு குறித்து விஜய் பேசினார். இப்போது அவரது அவதாரம் பூஜ்ஜியமாக இருக்கிறது. பூஜ்ஜியத்திலேதான் ராஜ்ஜியம் செய்கிறார். போஸ் கொடுப்பதில்தான் அவர் பாஸாக இருக்கிறார்.போஸ் கொடுத்தால் விலைவாசி குறையுமா? சட்டம் ஒழுங்கை…

Read More

மதுரை ரவுடி ‘குட்டி சாக்கு’ என்ற சூர்யா படுகொலை: இரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

மதுரை, நவ.3-மதுரை சமயநல்லூரில் பிரபல ரவுடி ‘குட்டி சாக்கு’ என்ற சூர்யா வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.பழைய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த சூர்யாவை மர்ம நபர்கள் வெட்டிக் கொன்றனர். முன் விரோதம் காரணமா என போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.குட்டி சாக்கு என்கிற ரவுடி சூர்யா மீது கொலை, அடிதடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், நேற்று இரவு, பழைய ஊராட்சி அலுவலக கட்டிடத்தில் அவர் மது அருந்திக்…

Read More

பசும்பொன்னில் ஸ்டாலினுக்கு பாதுகாப்பு குறைபாடா? தங்கம் தென்னரசு குற்றச்சாட்டுக்கு நிர்மல் குமார் பதில்

மதுரை, நவ.3-முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் எந்தக் குறைபாடும் இல்லை என சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார்.பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மல் குமார், கோரிப்பாளையம் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, அனைவருக்கும் என்ன பாதுகாப்பு வழங்கப்பட்டதோ அதே பாதுகாப்புதான் முன்னாள் முதலமைச்சருக்கும் வழங்கப்பட்டது.இதில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும்…

Read More

கே.என் நேரு மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி

சென்னை, நவ.3-தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் வேலை வாய்ப்பு முறைகேடு தொடர்பான ஊழல் குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த உத்தரவின் மூலம், அவர் மீது வழக்குப்பதிவு செய்வதற்கான தடைகள் நீங்கியுள்ளன.நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் ஷீல் நாகு ஆகியோர் அடங்கிய…

Read More

ஊழலை ஒழிக்க வந்த உத்தமர்களின் ஆட்சியில்ரூ. 5 கோடி பேரமா? டிடிவி தினகரன் கேள்வி

சென்னை, நவ. 3-ஊழலை ஒழிக்க வந்த உத்தமர்களின் ஆட்சியில் 5 கோடி பேரமா? அரசு பொறுப்பில் இருப்பது இடைத்தரகர் பணிக்கா? அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி அவர்களின் மூலம் 5 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகப் பள்ளிக்கல்வி மற்றும் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சரே நேரடி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.உண்மையைப் பேசுவதில் அரிச்சந்திரனுக்கே Tough…

Read More

பட்டினபாக்கம்புதிய தலைமை செயலகத்திற்காக பழைய குடியிருப்புகளைஇடிக்க முடிவு: தமிழக அரசு திடீர் அறிவிப்பு-பதற்றம்

சென்னை, நவ.3-சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைப்பதற்கு மீனவ மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாகக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அங்குள்ள பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளை இடிப்பதற்கான டெண்டரை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் மக்கள் மத்தியில் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.தற்போது சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வரும் தலைமைச் செயலகத்தில் இடநெருக்கடி நிலவுவதால், நவீன…

Read More

உதயநிதி கையில் இருக்கும் புதிய லிஸ்ட்:திமுக மாவட்ட செயலாளர்கள் கலக்கம்

சென்னை, நவ.3-திமுகவின் அடிமட்டக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கிலும் நிர்வாகச் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தும் வகையிலும், கட்சியின் அமைப்பு ரீதியான மாவட்டங்களின் எண்ணிக்கை 77-லிருந்து 110-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு, அதற்கான அதிகாரப்பூர்வ தொகுதிகள் வரையறைப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.புதிதாகப் பிரிக்கப்பட்ட 110 மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளை நியமிக்கும் பணியை விரைந்து முடிக்க திமுக தலைமை தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மாவட்டச் செயலாளர்களுடன் தலைமைச் செயற்குழுப்…

Read More

பிரியங்காவை ஓரம் காட்டிய ராகுல் காந்தி

டெல்லி, நவ,3-பிரியங்கா காந்தியை தலைவராக முன்னிறுத்தினால், நம்மை ஓரம் கட்டிவிடுவார்கள் என்று ராகுல் காந்தி அஞ்சுகிறாரா?. இதன் காரணமாக பிரியங்கா காந்தியின் வாக்கும் காந்தி குடும்பத்தில் திருடப்பட்டுள்ளதா? என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தின் மேடையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசவில்லை. இதனை சுட்டிக்காட்டி பாஜக இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளது.லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது தங்கையும், காங்கிரஸ் கட்சி நிர்வாகியுமான பிரியங்கா காந்தி வத்ராவை ஓரங்கட்டுவதாக…

Read More

“முரசு புயல் பாதிப்பு”; முதல்வர் விஜயிடம் உதவி கோரிய ஆந்திர அரசு

சென்னை, நவ.3-‘அர்னாப்’ புயலைத் தொடர்ந்து தற்போது ‘முரசு’ புயல் ஆந்திராவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே, அர்னாப் புயலால் 4,000 கோடிக்கும் மேலாக இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், தற்போது உருவாகியுள்ள முரசு புயலால், ஆந்திராவில் மிக மோசமான சேதம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, இந்த புயலால் ஏற்படும் பாதிப்புகளை முடிந்தளவு குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு மேற்கொண்டு வருகிறார்.இதன் ஒரு பகுதியாக, தமிழக முதல்வர் விஜயிடம் உதவி கோரியுள்ளார். நேற்று (01-11-26) தமிழக முதல்வர்…

Read More