மதுரை, நவ.3-
அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமாரின் நேற்றைய வீடியோ பதிவு: தமிழ்நாட்டில் தொடர்ந்து நிலவும் சட்டம், ஒழுங்கு பிரச்னை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாதுகாப்புக் குறைபாடு, வரலாறு காணாத வகையில் விலைவாசி உயர்வு போன்றவை அனைத்து தரப்பு மக்களையும் பாதித்துள்ளது.
முதல்வராகும் முன்பு குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு குறித்து விஜய் பேசினார். இப்போது அவரது அவதாரம் பூஜ்ஜியமாக இருக்கிறது. பூஜ்ஜியத்திலேதான் ராஜ்ஜியம் செய்கிறார். போஸ் கொடுப்பதில்தான் அவர் பாஸாக இருக்கிறார்.
போஸ் கொடுத்தால் விலைவாசி குறையுமா? சட்டம் ஒழுங்கை காப்பாற்றி விடலாமா? மின் கட்டணம் குறைந்துவிடுமா? தடையில்லா மின்சாரம் வந்துவிடுமா? கைதிகள் தப்பிக்காமல் இருப்பார்களா? பெண்கள் பாதுகாப்பு வந்துவிடுமா? பெண்களுக்கு பாதுகாப்பில்லை என குய்யோ, முய்யோன்னு தமிழ்நாடு முழுவதும் ஒரே மரண ஓலமாக இருக்கிறது. செஞ்சியில் காணாமல் போன சிறுமியை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
சிறைச்சாலையில் இருந்து கைதிகள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். தவெக அரசில் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? உங்களுக்கு எதற்கு ஆட்சி? உங்களுக்கு எதற்கு அதிகாரம்? நீங்கள் எதற்கு சிஎம்? இதெல்லாம் நான் கேட்கவில்லை. முதல்வராக இன்று இருக்கும் நீங்கள்தான், நடிகராக இருக்கும்போது கேட்டீர்கள். முதல்வர் ஆயிட்டீங்க. ஆக்டிங்கை விடுங்க, முதல்வராக ஆக்ட் பண்ணுங்க. அதை விட்டுட்டு இன்னும் ஆக்டிங்கிலேயே இருக்கிறீங்களே?
தமிழ்நாட்டுக்கு எப்போது விடிவுகாலம் கிடைக்கும்னு மக்கள் கண்ணீர் வடிக்கிறாங்க ப்ரோ… அவங்க கண்ணீ
ரைத் துடைக்கிறதுக்கு ஏதாவது வழி செய்யுங்க. போஸ் கொடுக்கிறதுல நீங்க பாஸ். உஷ் என்று ஒரு போஸ், அப்படின்னு ஒரு போஸ், இப்படின்னு ஒரு போஸ். இதைத் தவிர நீங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன பாஸ் செஞ்சிருக்கிறீங்க? சொல்லுங்க பாஸ். வாய் திறங்க பாஸ். வாய் திறந்து பேசுங்க பாஸ். இவ்வாறு பேசியுள்ளார்.
தமிழ்நாட்டு மக்கள் கண்ணீர் விடுகிறார்கள்:உங்களுக்கு எதற்கு ஆட்சி அதிகாரம்-முதல்வர் பதவி?விஜய்யை விளாசிய உதயகுமார்
