Breaking News

தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு:பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்-முதல்வர் எச்சரிக்கை

சென்னை, நவ. 15-தமிழ்நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களான துவரம் பருப்பு, உளுந்து, நெல் மற்றும் அரிசி ஆகியவற்றின் விநியோகத்தைச் சீராகப் பராமரிக்கவும், செயற்கையான விலையேற்றம் மற்றும் பதுக்கலை முற்றிலும் தடுக்கவும் இருப்பு உச்சவரம்பை நிர்ணயித்துத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.மத்திய அரசின் அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955, பிரிவு 3-ன் கீழ், மத்திய அரசின் ஒப்புதலுடன் தமிழக ஆளுநர் இந்த உத்தரவைப்…

Read More

பிளாட்பார்ம் டிக்கெட் வாங்கும் மக்களுக்கு இலவச வசதிகள் வழங்காதது ஏன்?

மதுரை, நவ. 13-தஞ்சாவூரைச் சேர்ந்த விமலநாதன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ரயில் நிலையங்களில் பிளாட்பாரங்களில் போதிய வசதிகள் இல்லாமல் பயணிகள் தவிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்குக் கட்டணம் வசூலிக்கின்றனர். ரயில் நிலையங்களில் பயணிகளுக்குப் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம்வசூலிக்கின்றனர். ஆனால், பயணிகளுக்குத் தேவையான…

Read More

அனைத்து ரயில் நிலையங்களிலும் 6 மாதங்களில் பேட்டரி கார் வசதிஉயர் நீதிமன்றம் கிளை உத்தரவு

மதுரை, நவ.13-அனைத்து ரயில் நிலையங்களிலும் 6 மாதங்களில் பேட்டரி கார் வசதி ஏற்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.தஞ்சாவூரைச் சேர்ந்த விமலநாதன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: திருச்சி ரயில் நிலையத்தில் கடந்த 2017-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பேட்டரி கார் சேவை தொடக்கத்தில் இலவசமாக வழங்கப்பட்ட நிலையில், 2018-ம் ஆண்டு முதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சேவை மதுரை ரயில் நிலையத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது. மதுரை மற்றும்…

Read More

அனிருத்- காவ்யா திருமணத்தில் நடனமாடிய நடிகர் ரஜினிகாந்த்

அனிருத் ரவிச்சந்தர்- காவியா மாறன் திருமண கொண்டாட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இணை உரிமையாளர் காவ்யா மாறனுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. குடும்ப உறவினர்கள் சொந்த பந்தங்கள் கலந்து கொள்ள மிக பிரம்மாண்டமாக கிரீஸில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை, My once in a lifetime, for a lifetime 11.11 என தலைப்பிட்டு இன்ஸ்டாகிராமில்…

Read More

தவறு செய்த ஒருவரை கூட கண்டுபிடிக்க முடியவில்லையா?பெரியார் அறிவுலக முறைகேடு விவகாரத்தில் நீதிமன்ற கிளை கேள்வி

மதுரை, நவ. 13-பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் முறைகேட்டில் தவறு செய்த ஒருவரை கூட கண்டுபிடிக்க முடியவில்லையா என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.தமிழ்நாட்டில் நூலகங்களுக்கு புத்தகம் கொள்முதல் செய்வது தொடர்பான நீதிமன்ற அவதிப்பு வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர், அகல் விளக்கு பதிப்பகம் உள்ளிட்ட மூன்று பதிப்பகங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். முறைகேடு குறித்து விரிவான அறிக்கை தாக்கல்…

Read More

பெரியாறு, வைகையில் மோட்டார் மூலம் தண்ணீர் திருட்டு:மின் இணைப்புகளை ரத்து செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

மதுரை, நவ. 13-முல்லை பெரியாறு அணையிலிருந்து வைகை அணை வரை மின் மோட்டார்கள் மூலம் 250 கனஅடி தண்ணீர், வைகை அணையிலிருந்து பேரணை வரை 100 கனஅடி தண்ணீர் திருடுவோரின் மின் இணைப்புகளை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.மதுரை தல்லாகுளம் நீர்வளத் துறை மண்டல தலைமை அலுவலகத்தில் பெரியாறு வைகை வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் சாம் இர்வின் தலைமையில், கோட்ட செயற்பொறியாளர் சிவபிரபாகர் முன்னிலையில் 2010 அரசாணையில் திருத்தம் செய்வது தொடர்பாகவும், இருபோக…

Read More

மதுரை தனிஷ்க் நகைக்கடையில்500 பவுன் நகைகள் கொள்ளை

மதுரை, நவ. 13-அதிகாலை 3 மணியளவில் துணிகரம்மதுரை பைபாஸ் பகுதியில் செயல்பட்டு வரும் டாடா குழுமத்தின் தனிஷ்க் நகைக்கடையில் நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது.கடையில் இருந்த சுமார் 500 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூ.50 கோடி எனக் கூறப்படுகிறது.அண்மையில் திறக்கப்பட்ட இந்த நகைக்கடையின் பின்புறம் வழியாக கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாலை…

Read More

மதுரை கூட்டுறவு சங்கத்தில் நகை மாயம்? கடனை கட்டியும் நகை கிடைக்கவில்லை: 500 சவரன் எங்கே?

மதுரை, நவ. 13-மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைகளை அடமானம் வைத்து கடன் வாங்கிய பொதுமக்கள், கடனை முழுமையாகச் செலுத்தியும் தங்களது நகைகள் திரும்பக் கிடைக்கவில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.சுமார் 500 சவரன் நகைகள் மாயமானதாக கூறப்படும் நிலையில், சங்க அலுவலகம் முன்பு பெண்கள் உட்பட ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது திருமங்கலத்தில்?திருமங்கலம் அருகே வீரபெருமாள்புரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்…

Read More

ஓராண்டாக பூட்டிக்கிடந்த மதுரை மாநகராட்சி மேயர் அலுவலகம் மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது

மதுரை, நவ.13-மதுரை மாநகராட்சியில் திமுக மேயர் ராஜினாமா வால் ஓர் ஆண்டாக பூட்டிக் கிடந்த அவரது மேயர் அலுவலகம் முழுவீச்சில் சுத்தப்படுத்தப்பட்டு துணை மேயர் நாகராஜனுக்காக தயாராகி வருகிறது.மதுரை மாநகராட்சியில் சொத்துவரி முறைகேடு புகார் காரணமாக திமுக மேயராக இருந்த இந்திராணியின் கணவர் பொன்வசந்த், உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உதவி ஆணையர் உட்பட 18 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 5 மண்டலத் தலைவர்களும் ராஜினாமா செய்தனர். கணவர் கைது செய்யப்பட்ட பிறகு மேயர் இந்திராணியும்…

Read More

வாடிப்பட்டி தாலுகாவில் அரசு நிலங்கள் அபகரிப்பு :தாசில்தார் சுந்தர் உடந்தைகலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?

மதுரை, நவ.13-மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகாவைச் சேர்ந்த கல்வேலிப்பட்டி கிராமத்தில் சமயசெல்வன் என்பவரது இடத்தின் அருகில் கருப்பசாமி என்பவர் வாடிப்பட்டி தாசில்தார் சுந்தரை கையில் வைத்துக்கொண்டு வாடிப்பட்டி மற்றும் அலங்காநல்லூர் பகுதியில் உள்ள மலைக்கிராமங்களில் உள்ள பல லட்சக்கணக்கில் மதிப்பிலான அரசு நிலத்தை வாடிப்பட்டி தாசில்தார் சுந்தர் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு உண்மையான தனியார் நிலத்தின் அருகில் உள்ள அரசு நிலத்தை சேர்த்து பல மோசடிகள் நிறைவேறி வருகிறது.இந்த விவரம் குறித்து மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் கல்வேலிப்பட்டி…

Read More