Breaking News

கழிவுநீரில் தத்தளிக்கும் மேலுார் அரசு மருத்துவமனை

மேலுார், நவ. 12-மேலுார் அரசு மருத்துவமனையில் செப்டிக் டேங்க் நிரம்பி, கழிவுநீர் மருத்துவமனை வளாகம், பிணவறையில் தேங்குவதால் நோயாளிகளின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி உள்ளது.மேலுார் தாலுகா அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள், புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனையில் செப்டிக் டேங்க் நிரம்பி கழிவு நீர் வெளியேறி மருத்துவமனை வளாகத்தில் ஆறாக ஓடுகிறது. நோயாளிகள் கூறியதாவது : சிகிச்சை பெறும் வார்டு பகுதியில் செப்டி டேங்க் தண்ணீர் வெளியேறி துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடாக காணப்படுகிறது. இதனால் படுக்கையில்…

Read More

ஜிஎஸ்டி வரி விதிப்பை மாற்றியமைக்க வேண்டும்:உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்

மதுரை, நவ. 12-நாட்டின் வரி வருவாயை கவனத்தில் கொண்டு, ஜிஎஸ்டி வரி விதிப்பை மாற்றி அமைக்க வேண்டும் என தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தின் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.நாட்டின் வரி வருவாயை கவனத்தில் கொண்டு, ஜிஎஸ்டி வரி விதிப்பை மாற்றி அமைக்க வேண்டும் என தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தின் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.இதுகுறித்து அந்தச் சங்கத்தின் கௌரவ ஆலோசகா் எஸ். பி. ஜெயபிரகாசம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாட்டின் வரி வருவாய் உயரும் போது, ஜிஎஸ்டி…

Read More

விஜய் ஆட்சியில் 6 வருஷம் தமிழ்நாடு பின்னோக்கி சென்றுவிட்டது-ஆர்பி.உதயகுமார் தாக்கு

மதுரை, நவ.12-முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக அரசில் வெளிப்படைத்தன்மை இல்லை எனவும் ,வளர்ச்சித் திட்டங்களை கிடப்பில் போட்டுவிட்டு முன்னுக்குப் பின் அரசாணை வெளியிடுவதும், அதன்பின் அதனை ரத்து செய்வதும் என முரண்பாடான சூழல் நிலவுவதாகவும், 6 மாத தவெக ஆட்சியில் தமிழகம் ஆறாண்டு பின்னோக்கிச் சென்று விட்டது என விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்.மதுரையில் பேசிய அவர்,” தவெக அரசு பொறுப்பேற்று 6 மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில், தற்போது இந்த 6…

Read More

அனில் குட்டி உயிரை காத்த மதுரை தம்பதி: தீபாவளியன்று வீட்டு வாசலில் நடந்த அந்த சம்பவம்

மதுரை, நவ. 12-மதுரையில் தீபாவளி பண்டிகையின் போது வீட்டிற்குள் சுற்றித் திருந்த அணிலுக்கு காயம் ஏற்பட்டதால், அதனை கவலையுடன் அரசு கால் நடை மருத்துவமனைக்கு ஒரு தம்பதி கொண்டு வந்தது கவனம் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தீபாவளி அன்று வந்ததால், அந்த அணிலுக்கு தீபாவளி என்று பெயர் வைத்துள்ளனர்.மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த பஷீர் அஹமது – ஜீனத் தம்பதியினர் தீபாவளியன்று விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது காலை உணவுக்கு பின் வீட்டில் இருந்தபோது திடிரென வீட்டிவாசலில்…

Read More

புத்தகக் கொள்முதல் ஊழல்: அகல் விளக்கு பதிப்பக வங்கி கணக்குகளை முடக்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை, நவ. 12-தமிழகத்​தில் பொது நூல​கங்​களுக்​கான புத்​தகக் கொள்​முதல் ஊழல் தொடர்​பாக லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் வழக்​குப் பதி​ய​வும், அகல்​விளக்கு பதிப்​பகத்​தின் வங்கி கணக்​கு​களை முடக்​கவும் உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​விட்​டது.நெல்லை கிருஷ்ணாபுரத்​தைச் சேர்ந்த ராமசுப்பு, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: நூல​கங்​களுக்கு புத்​தகம் கொள்​முதல் தொடர்​பாக உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு 2024-ல் பல கட்​டுப்​பாடுகளை விதித்து உத்​தர​விட்​டது. இந்த உத்​தரவு அமல்​படுத்​தப்​பட​வில்லை.இந்​நிலை​யில் தமிழகத்​தில் நூல​கங்​களுக்கு புத்​தகம் கொள்​முதல் செய்​ததில்…

Read More

திருவையாறு திமுக எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு

சென்னை, நவ. 12-தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மற்றும் அமைச்சர் கீர்த்தனா குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் அவதூறாகவும், ஒருமையிலும் பேசியதாக திருவையாறு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் மீது காவல் துறையினர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.அரசியல் வட்டாரத்தில் பெரும் கண்டனத்தையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்திய இச்சேச்சைக்குரிய பேச்சு தொடர்பாக, நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் அலுவலகத்தில் இருந்து அவருக்கு தற்போது சம்மன்…

Read More

“பிச்சைக்காரன் பட பாடல்களை வாங்க முன்வரவில்லை” – மனம் திறந்த விஜய் ஆண்டனி

“’பிச்சைக்காரன்’ படத்தின் பாடல்களைப் பல நிறுவனங்கள் வாங்க முன்வராததால் அந்த ஆல்பத்தை நானே வைத்துக்கொண்டேன்.” என இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.விஜய் ஆண்டனி நடிப்பில், மு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு திரைப்படம் குறித்த தங்களது அனுபவங்களையும், படத்தின் உருவாக்கம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்துகொண்டனர்.இதில் பங்கேற்று பேசிய நடிகர் விஜய் ஆண்டனி, “’அப்பா குட்டி’ படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான…

Read More

அனிருத் – காவ்யா மாறன் திருமணம்:இரண்டு கோடீஸ்வரர்களின் சங்கமம்

சென்னை, நவ. 12-அனிருத்தும், காவ்யா மாறனும் தங்கள் திருமணத்துக்காக நேற்று க்ரீஸில் இருக்கிறார்கள். இரண்டு குடும்பத்தினரின் நெருங்கிய உறவினர்களான ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி உள்ளிட்டோர் அதில் பங்கேற்றனர். தென்னிந்தியாவிலேயே அனைவரது கவனத்தை ஈர்த்த பெரிய திருமணமாக இது மாறியிருக்கிறது.அம்பானி மகன் ஆனந்த் அம்பானி திருமணத்துக்கு பிறகு இந்தியாவில் பலரது கவனத்தை பெற்ற திருமணமாக மாறியிருக்கிறது அனிருத் – காவ்யா மாறன் திருமணம். இரண்டு பேரும் ரகசியமாக செய்து வந்த காதல்…

Read More

“த.வெ.க ஆட்சியின் 6 மாதங்களில் எந்த மாற்றமும் இல்லை-திமுக. சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன் கேள்வி

சென்னை, நவ. 12-தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு தீபஒளி நாளன்று ஒரே நாளில் 17-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளதை சுட்டிக்காட்டி, த.வெ.க ஆட்சியின் 6 மாதகால தோல்வி நிர்வாகத்தை எடுத்துரைத்துள்ளார் தி.மு.க சட்டத்துறை இணைச்செயலாளர் இ.பரந்தாமன்.இது குறித்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்ததாவது,“பண்டிகை காலம் என்றால்… அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும்” என்கிறார் ஸ்டாண்ட்-அப் காமெடியன் அமைச்சர் ராஜ்மோகன். தீபஒளி அன்றைக்கு ஏதாவது பேசுவதற்கு இது பட்டிமன்றம் இல்லை. “நீங்கள் அமைச்சர்! ஆட்சியில்…

Read More

தமிழக துணை சபாநாயகர் ஆகிறார் சோழவந்தான் கருப்பையா எம்எல்ஏ?

சென்னை, நவ. 12-தமிழக சட்டசபை துணை சபாநாயகராக இருக்கும் ரவிசங்கர் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார். அடிப்படை வசதி கோரி சென்ற நபரை அவர் தாக்கிய வீடியோ வெளியானது.இது தவெக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி உள்ள நிலையில் அவரை அந்த பொறுப்பில் இருந்து நீக்கவும், அவருக்கு பதில் தவெக எம்எல்ஏ கருப்பையாவை அந்த பொறுப்பில் நியமிக்க முதல்வர் விஜய் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.தமிழக சட்டசபையின் துணை சபாநாயகராக இருப்பவர் ரவிசங்கர். இவர் திருச்சி மாவட்டம் துறையூர்…

Read More