‘வரியை குறைத்தோம்: விமான சேவையை விரிவுபடுத்த வேண்டும்விமான நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்

சென்னை, அக். 28-சென்னை விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளை அதிகரிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக, விமான எரிபொருளான ஏவியேஷன் டர்பைன் ஃபியூல் மீதான மதிப்பு கூட்டு வரியை 29 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக தமிழக அரசு குறைத்துள்ளது. இதையடுத்து, சென்னையில் இருந்து கூடுதல் விமானங்களை இயக்கவும், புதிய இடங்களுக்கு விமான சேவைகளை விரிவுபடுத்தவும் விமான நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், கூடுதல்…

Read More

ஜெம் வீரமணி வழக்கு: லஞ்ச பணத்தில் ரூ.24 கோடிக்கு தங்கம் வாங்கி குவித்தாரா அருண் ஐபிஎஸ்?

சென்னை, அக். 28-வீரமணி மீதான வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாம்பரம் பகுதி வாராகி என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.வாராகி தாக்கல் செய்த வழக்கில், நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த அக்டோபர் 1, 6 ஆகிய தேதிகளில் சிறப்பு புலனாய்வு விசாரணை அதிகாரி முன் நேரில் ஆஜராகி ஆதாரங்களையும் தகவல்களையும் நான் கொடுத்துள்ளேன் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.காவல் துறை ஜெம் வீரமணி…

Read More

அர்னாப் புயல் இன்று ஆந்திராவை தாக்கும்:140 கி.மீ வேகத்தில் சூறைகாற்று வீசும்- தமிழ்நாடு தப்பியது

சென்னை, அக். 28-வங்கக்கடலில் அர்னாப் புயல் உருவாகியுள்ளது. இந்த புயலால் தமிழ்நாட்டிற்கு நேரடியாக பாதிப்பு இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் வங்கக் கடலிலும், அரபிக் கடலிலும் காற்றழுத்தம் ஏற்பட்டு அதில் வங்கக் கடலில் புயல் உருவாகியுள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் மழை பரவலாக பெய்து வருகிறது.இந்நிலையில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இது…

Read More

ஸ்ரீரங்கம் கோயில் பாதுகாப்பை பலப்படுத்த கோரிக்கை குறைதீர் கூட்டத்தில் மனு

திருச்சி, அக். 28-திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ஸ்ரீரங்கம் கோயில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும், வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மனுக்கள் அளிக்கப்பட்டன. கூட்டத்துக்கு கலெக்டர் பிரதீப் தயாள் தலைமை வகித்தார்.விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்டச் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் அளித்த மனுவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பாதுகாப்பை பலப்படுத்தி, மத்திய பாதுகாப்பு படையினரை நியமிக்க வேண்டும். பிற சமயத்தவர்கள் இந்து…

Read More

கோவை பள்ளி மாணவர் அகிலன் குடும்பத்துக்கு ரூ.6 லட்​சம் நிதி, அரசு வேலை

கோவை, அக். 28-பள்ளி மாணவர் அகிலன் தற்​கொலை தொடர்​பான வழக்கு விசா​ரணையை சிபி​சிஐடி போலீ​ஸாருக்கு மாற்​றம் செய்து டிஜிபி மகேஷ்குமார் அகர்​வால் உத்​தர​விட்​டுள்​ளார்.கோவை பீளமேட்​டைச் சேர்ந்த அசோக்​குமார் – கவுசல்யா தேவி தம்​ப​தி​யின் மகன் அகிலன் (16), அரசு உதவி​பெறும் பள்​ளி​யில் 11-ம் வகுப்பு படித்து வந்​தார். கடந்த 21-ம் தேதி அகிலன் வீட்​டில் தூக்​கிட்டு தற்​கொலை செய்து​கொண்​டார். பள்​ளி​யில் தலைமை ஆசி​ரியர் அருண்​குமார், ஆசி​ரியர் விஜயகுமார், சக மாணவர்​கள் இரு​வர் உள்​ளிட்​டோர் சாதிய கண்​ணோட்​டத்​தில் அணுகிய​தால்,…

Read More

உதகையில் தரமற்ற உணவு வழங்குவதாக குற்றச்சாட்டு:உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு செய்யுமா?

நீலகிரி, அக். 28-நீலகிரி மாவட்டத்தில், இரண்டாம் சீசன் நிலவி வரும் நிலையில், உணவு பாதுகாப்பு துறையினர், போதிய ஆய்வு செய்யாத காரணத்தால், பல ஓட்டங்களில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.நீலகிரியில் இரண்டாம் சீசன் நிலவி வரும் நிலையில், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி உட்பட பல்வேறு பகுதிகளிலும் வார நாட்களில், 5 முதல் 7 ஆயிரம் வரையிலும், வார இறுதி நாட்களில், 10 முதல், 15 ஆயிரம் வரையிலும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இவர்கள், இங்குள்ள…

Read More

பழனி முருகன் கோவில் நில மோசடி: தவெக அரசுக்கு நெருக்கடி- 5 பேர் மீது சிபிசிஐடி குற்றப்பத்திரிகை

பழனி, அக். 28-திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான நிலம் மோசடியாக விற்கப்பட்டு பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழ்நாடு சிபிசிஐடி காவல்துறையினர் நீதிமன்றத்தில் விரிவான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர்.சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட 90 நாட்களுக்குள், அக்டோபர் 24 அன்று அதிகார வரம்புடைய குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மின்னணு முறையில் இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசு வழிகாட்டி மதிப்பின்படி சுமார் ரூ.16 கோடி மதிப்புள்ள இந்த நிலம், வெறும் ரூ.2 கோடிக்குக் கைமாறியிருப்பது…

Read More

திருச்சி கிழக்கு தொகுதியை கைப்பற்ற திமுகவை முடக்க தவெக முடிவு

திருச்சி, அக். 28-திருச்சி கிழக்கில் தவெக போட்டியிடுவதற்காக பல வியூகங்கள் செய்து வருகிறது. இந்த தொகுதிக்கு எந்த நேரத்திலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்பதால் இடைத்தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் 5 தொகுதிகளிலும் தவெக பூர்வாங்க வேலையை தொடங்கிவிட்டது. இந்த தொகுதிகளில் களமிறங்கி இருக்கும் வியூக தவெகவின் அமைப்பாளர்கள் எங்கிருந்தெல்லாம் பிரச்சினை வெடிக்கும். யாரையெல்லாம் எந்த வழியில் சரிகட்ட முடியும் என சாட் போட்டுக்கொண்டு பணிகளை செய்து வருகின்றனர். திருச்சி கிழக்கு தொகுதியை ெபாறுத்தவரை முதல்வர் போட்டியிட்ட தொகுதி என்பதால்…

Read More

சிறை காவலர்களை தாக்கிவிட்டு தேனி சிறையில் இருந்து நள்ளிரவில் 17 கைதிகள் தப்பி ஓட்டம்

தேனி, அக். 28-தேனி மாவட்ட சிறையில் இருந்து 15-க்கும் மேற்பட்ட விசாரணைக் கைதிகள் தப்பி ஓடியதாக தகவல் வெளியாகி உள்ளது.காவலர்களை தாக்கிவிட்டு விசாரணைக் கைதிகள் தப்பி ஓடியதாகவும், தப்பி ஓடிய விசாரணை கைதிகள் பலரும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.தேனி மாவட்ட சிறையில் சிறைக் காவலர்களை தாக்கிவிட்டு 15 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடுமையான பாதுகாப்பு கொண்ட சிறைச்சாலையில்…

Read More

விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்த மைக்ரோசாப்ட்: 60,000 ஊழியர்களை வெளியேற்ற திட்டமா?

சென்னை, அக். 28-செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு மற்றும் தரவு மையங்களில் பெரும் முதலீடுகளை மேற்கொண்டு வரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் உள்ள சுமார் 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளது. இது அதன் மொத்த பணியாளர்களில் கால் பகுதிக்கும் அதிகமானோரை கவர்வதாக கூறப்படுகிறது. லெவல் 70 மற்றும் அதற்கு கீழுள்ள தகுதியான பணியாளர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும் எனவும், எக்ஸ்பாக்ஸ், விண்டோஸ், மனித…

Read More