சென்னை, அக். 28-
வங்கக்கடலில் அர்னாப் புயல் உருவாகியுள்ளது. இந்த புயலால் தமிழ்நாட்டிற்கு நேரடியாக பாதிப்பு இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து
ள்ளது. இந்த நிலையில் வங்கக் கடலிலும், அரபிக் கடலிலும் காற்றழுத்தம் ஏற்பட்டு அதில் வங்கக் கடலில் புயல் உருவாகியுள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் மழை பரவலாக பெய்து வருகிறது.
இந்நிலையில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இது வலுப்பெற்று, நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதிகளில் நிலவியது. இது மேற்கு திசையில் நகர்ந்து நேற்று மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக (அர்னாப்) வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாகவும், மிக தீவிர புயலாக அதே பகுதிகளில் வலுப்பெற்றது.
இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரபிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளில், பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே ஏனாமுக்கு அருகே மிக தீவிர புயலாக 140 கி.மீ வேக சூறைகாற்றுடன் கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலால் தமிழகத்தில் நேரடி பாதிப்பு எதுவும் இருக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், புயல் உருவானதை குறிக்கும் வகையில் தமிழகம், புதுவை உள்பட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. அதாவது, சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்ப
தாவது: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கடலோர தமிழக பகுதிகளுக்கு நகர்ந்து, அதே பகுதிகளில் நிலவுகிறது. அது மட்டுமல்லாமல் சுமார் 3.1 கிமீ உயரம் வரை லட்சத்தீவு பகுதியிலிருந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கடலோர தமிழக பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி
கள் வரை தெற்கு கேரளா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக நேற்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வறண்ட வானிலை நிலவியது.
இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
29ம் தேதி மற்றும் 30ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும். 31ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். 1ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று வட தமிழக கடலோரப்பகுதி
களில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் அதன் பிறகு படிப்படியாக குறையக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக காரத்தோலுவு (திருப்பூர்), ஒத்த கல்மண்டபம் (கோயம்புத்தூர்) தலா 16 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது, கொத்தவாச்சேரி (கடலூர்) 15, மதுக்கரை தாலுகா அலுவலகம் (கோயம்பு
த்தூர்), பிடபிள்யூடி வார
ப்பட்டி (கோயம்புத்தூர்), சனவேலி (ராமநாதபுரம்) தலா 13, தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), போதானூர் ரயில் நிலையம் (கோயம்புத்தூர்) , மடத்துபாளையம் (திருப்பூர்), சேக்கந்திடல் (ராமநாதபுரம்) தலா 12, மஞ்சளாறு (தேனி), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), பாம்பன் (ராமநாதபுரம்), கின்னக்கோரை (நீலகிரி), இளையாங்குடி (சிவகங்கை), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), கொடைக்கானல் (திண்டுக்கல்), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), கோயம்புத்தூர்-தெற்கு (கோயம்புத்தூர்), நல்லம்பாளையம் (திருப்பூர்), அப்பியம்பட்டி (திண்டுக்கல்), பாம்பன் ஏஆர்ஜி(ராமநாதபுரம்) தலா 11, குறிஞ்சிப்பாடி (கடலூர்), பத்துக்கண்ணு (புதுச்சேரி), நல்லதங்கால் நீர்த்தேக்கம் (திருப்பூர்), தொண்டி (ராமநாதபுரம்), நிலக்கோட்டை (திண்டுக்கல்), மண்டபம் (ராமநாதபுரம்), கொளத்துப்பாளையம் (திருப்பூர்), பருத்தியூர் (திண்டுக்கல்), புஷ்பதூர் (திண்டுக்கல்) தலா 10 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளி
யிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ‘’தமிழகம் முழுவதும் பெரும்பாலும் மழையின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது. சென்னைக்கு எதிர்பார்த்த மழை இல்லை. காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை-புதுச்சேரி கடலோரப் பகுதிக்கு அருகில் கரையை கடக்கும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அது தெற்கு திசையை நோக்கி நகர்ந்து, காவிரி டெல்டா மற்றும் இலங்கை கடலோரப் பகுதியை நோக்கி சென்றுவிட்டது. இதன் காரணமாக, அப்பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.
அதேநேரத்தில், எதிர்பார்த்த மழை சென்னைக்கு கிடைக்காமல் முற்றிலும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது. மேலும் இன்று நண்பகல் முதல், ‘அர்னாப்’ புயல் கிழக்கு காற்றை தன்வசப்படுத்தி இழுத்துச் செல்வதால், தமிழ்நாடு முழுவதும் மழையின் தாக்கம் முற்றிலும் குறைந்து வறண்ட வானிலையே நிலவக்கூடும்’’ என்று தெரிவித்துள்ளார்.
அர்னாப் புயல் இன்று ஆந்திராவை தாக்கும்:140 கி.மீ வேகத்தில் சூறைகாற்று வீசும்- தமிழ்நாடு தப்பியது
