முதல்வர் மருந்தகங்கள் மூடப்படும் அபாயம்
மதுரை, அக். 28-குறைந்த விலையில் ஜெனரிக், இதர மருந்துகள் கிடைக்கும் வகையில் தமிழக அரசால் தொடங்கப்பட்ட முதல்வர் மருந்தங்களுக்கு மாத்திரைகள் வழங்காததால் மூடுவிழாவை நோக்கிச் செல்கின்றன. மருந்தக உரிமையாளர்கள் கூறியதாவது:-மருந்தகம் துவங்கிய நேரத்தில் கூட்டுறவுத்துறை மூலம் அனைத்து மருந்துகள், மருத்துவ கருவிகள் முழுமையாக வழங்கப்பட்டன.ஒரு அட்டை (ஸ்ட்ரிப்) மாத்திரை விற்றால் 80 காசுகள் தான் கிடைக்கிறது. கடந்த சில மாதங்களாக இதயநோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தத்திற்கான மருந்துகளை வழங்கவே இல்லை. காலாவதி ஆவதற்கு சில மாதங்கள்…
