மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடுநவ.5-ல் குற்றப்பத்திரிகை தாக்கல்

மதுரை, அக். 28-
மதுரை மதுரை மாநகரா
ட்சி சொத்து வரி முறைகேடு வழக்கில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குற்றப்பத்திரிகை 100 பக்க அளவில் நவ.5-ம் தேதிக்குள் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் தற்போது பணியாற்றும் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் 8 பேர் பெயர்கள் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை மாநகராட்சி 100 வார்டுகளில் ரூ.1.50 கோடி சொத்துவரி முறைகேடு வழக்கில் முன்னாள் மேயர் இந்திராணி கணவர் பொன் வசந்த், வரிவிதிப்புக் குழு முன்னாள் தலைவரின் கணவர் கண்ணன், உதவி ஆணையர்கள் உட்பட இதுவரை 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆணையராக இருந்த சித்ரா, அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட 18 பேரை சஸ்பெண்ட் செய்தார். மேயர் இந்திராணி, 5 மண்டலத் தலைவர்கள் தங்கள் பதவிகளை இழந்தனர்.
சமீபத்தில் இந்த வழக்கில் ராஜினாமா செய்த மாநகராட்சி 3-வது மண்டல முன்னாள் தலைவர் புவனேஸ்வரியின் கணவர் சரவணன் கோ. புதூரில் மருத்துவர் ஒருவரின் கட்டிடத்துக்கு வரியை குறைக்க ரூ.10 லட்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
விசாரணையில் கிடைத்த சில தகவல்களின் அடிப்படையில் முன்னாள் மண்டல தலைவர் முகேஷ் சர்மா, முன்னாள் பெண் மண்டலத் தலைவர் பாண்டிஸ்வரி கணவர் மிசா பாண்டியன் உள்ளிட்டவர்களை விசாரிக்க போலீஸ் சம்மன் வழங்கி அழைத்தனர். முகேஷ் சர்மா தலைமறைவானார். மிசா பாண்டியன், ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை அணுகினார். சம்மன் பெற்றும் விசாரணைக்கு ஆஜராகாத முன்னாள் மண்டலத் தலைவர்கள், அவர்களின் கணவர்களை பிடிக்க, தனிப்படையினர் தேடி வருகின்றனர். இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறியதாவது: உயர் நீதிமன்றம் விதித்த கெடுவின்படி, நவம்பர் 5-ம் தேதிக்குள் வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது. இவ் வழக்கில் இதுவரை கைதான 25 நபர்களில் 8 பேர் தற்போது பணியாற்றும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் இடம்பெறு
கின்றனர். இவர்களில் 7 பேரை குற்றப்பத்திரிகையில் சேர்க்க அரசு முதன்மைச் செயலாளரிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மேலும், ஒருவருக்கான ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என நம்புகிறோம்.
100 பக்க அளவில் குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்ய
ப்பட உள்ளது. குற்றப்பத்திரி
கையில் கடந்த ஓராண்டில் திரட்டிய ஆதாரம், ஆவண
ங்களின் அடிப்படையில் முதல்நிலை குற்றப்பத்தி
ரிகை தாக்கல் செய்ய இருக்கும் நிலையில், நவ. 5-ம் தேதிக்குள் கிடைக்கும் தகவல், கைது விவரமும் சேர்க்கப்படும் என்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *