டெல்லியில் முகாமிட்டுள்ள நடிகர்:புதிது புதிதாக வரும் சாத்தானின் பிள்ளைகள் என அமைச்சர் ஆதவ் சாடல்

சென்னை, அக். 25-இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி சார்பில் கண்ணியமிகு காயிதே மில்லத் வழியில் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் சென்னை எழும்பூரில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பங்கேற்றார். இந்நிகழ்வில் பேசிய அமைச்சர், 2029 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவின் வெற்றி தமிழகத்தில் இருந்து உருவாகும் எனவும், இதை தடுக்கும் நோக்கில்தான் சில நடிகர்கள் டெல்லிக்கு சென்று முகாமிட்டுள்ளதாகவும் யார் வந்தாலும் ஒன்றும்…

Read More

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 எப்பொழுது கிடைக்கும்? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில்

விருதுநகர், அக். 25-மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பணம் எப்பொழுது வழங்கப்படும் என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில் அளித்தார்.அவர் கூறியதாவது: ரூ.2,500 பணத்தை கண்டிப்பாக, உறுதியாக முதல்வர் விஜய் மக்களுக்கு கொடுப்பார். அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. நமது ஆட்சி 150 நாட்கள் கடந்து வந்துள்ளது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் விஜய் வெகு சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறார். மக்கள் அதை பார்த்து கொண்டு, சந்தோஷமாக வரவேற்று கொண்டு இருக்கிறார்கள். ரூ.2500…

Read More

கவுன்சிலர் சீட்டுக்கு வசூல்:தவெக மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகள்விஜய்க்கு போன ரிப்போர்ட்!

சென்னை, அக்.25-ஜனவரி மாதமே 28 மாவட்ட பிரதிநிதிகளின் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், உள்ளாட்சிகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.அவர்களின் பணிக் காலம் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 6 மாதங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்தப் போவதில்லை என்பதை மறைமுக தவெக கூறி இருக்கிறது.உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப் போக பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், தவெகவில் கட்சி கட்டமைப்பு இன்னும் வலிமையாக உருவாகவில்லை. நகரங்களிலேயே கட்சி கட்டமைப்பு இன்னும் வலிமையாகாத சூழலில், கிராமங்களில் சொல்லவே…

Read More

கொடைக்கானலில் கன மழை; காட்டு ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளம்: வெளியேற முடியாமல் தவிக்கும் கிராம மக்கள்

கொடைக்கானல், அக். 25-கொடைக்கானல் மலைப் பகுதியில் உள்ள காட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் சின்னூர், பெரியூர் உள்ளிட்ட மலைக்கிராம மக்கள் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் சின்னூர், பெரியூர் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் சாலை வசதி இல்லை. இக்கிராம மக்கள் அவசரம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக பல கி.மீ. தொலைவுக்கு வனப்பகுதி வழியாக…

Read More

நீலகிரி: மண் சரிவில் சிக்கி நொறுங்கி கிடக்கும் அரசுப் பேருந்துடிரைவர், பயணிகள் என 8 பேர் மீட்பு

நீலகிரி, அக். 25-குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையே பர்லியார் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட மண் சரிவில் இன்று அரசுப் பேருந்து சிக்கிய நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுகாவுக்கு உட்பட்ட பர்லியாரில் அதிகபட்சமாக 25 செ.மீ மழை பதிவாகியுள்ளது.மேட்டுப்பாளையம் – ஊட்டி மலைப் பாதையில் கனமழை…

Read More

கனமழை எச்சரிக்கை: கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடல் – மாவட்ட நிர்வாகம் உத்தரவு

கன்னியாகுமரி, அக். 25-தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நாளுக்கு நாள் மழையின் அளவு அதிகரித்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் தவிர்க்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் பல்வேறு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள மிக கனமழை…

Read More

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு: கண்காணிப்பு வளையத்தில் சிறுமியின் தாய்

விழுப்புரம், அக். 25-செஞ்சி அருகே சிறுமி மாய​மான விவகாரத்​தில் 2-வது நாளாக விசா​ரணை​யைத் தொடர்ந்​துள்ள சிபி​சிஐடி போலீ​ஸார், சிறுமி​யின் தாயையும் தங்​கள் கண்​காணிப்பு வளை​யத்​துக்​குள் கொண்டு வந்​துள்​ளனர்.விழுப்​புரம் மாவட்​டம் செஞ்​சியை அடுத்த ஆலம்​பூண்டி ஊராட்சி நடுப்​பட்டு கிராமத்​தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த 11-ம் தேதி நள்​ளிரவு மாய​மானார். இது​குறித்து சிறுமி​யின் தாய் கொடுத்த புகாரின் பேரில் சத்​தி​யமங்​கலம் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​தனர். எஸ்பி மதிவாணன் மேற்​பார்​வை​யில் 8 தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டன.10 நாட்​களாகி​யும் சிறுமியை கண்​டு​பி​டிக்​காததால்…

Read More

விமான எரிபொருள் வாட் வரியை குறைத்த தமிழக அரசு:விமான நிறுவனங்கள் வரவேற்பு

சென்னை, அக்.25-தமிழக அரசு மாநிலத்திற்குள் விமானச் சேவைகளுக்காக திட்டமிடப்பட்ட விமான நிறுவனங்களுக்கு வழங்கப்படும் விமான டர்பைன் எரிபொருள் மீதான மதிப்புக்கூட்டு வரியை குறைத்துள்ளது.சென்னை விமான நிலையத்தில் விமான எரிபொருளுக்கான மதிப்புக்கூட்டு வரி 29 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாகவும், சென்னை தவிர மற்ற விமான நிலையங்களில் 29 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாகவும் குறைத்துள்ளது.அதன்படி 40,000 கிலோவுக்கும் குறைவான அதிகபட்ச புறப்படும் விமானங்களை இயக்கி, சென்னையை தவிர்த்து மாநிலத்தில் உள்ள விமான நிலையங்களில் எரிபொருள் நிரப்பும் திட்டமிடப்பட்ட…

Read More

கே.என்.நேரு, அன்பில் மகேஸ், செந்தில் பாலாஜியுடன் ஸ்டாலின் தீவிர ஆலோசனைதிருச்சி கிழக்கில் அதிரப் போகும் தேர்தல் களம்

திருச்சி, அக்.25-திருச்சி கிழக்கு உள்ளிட்ட ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீவிர ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.இந்த முக்கியக் கூட்டத்தில் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் செந்தில் பாலாஜி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். குறிப்பாக, திருச்சி கிழக்குத் தொகுதியில் மு.க.ஸ்டாலின் அவர்களே நேரடியாகக் களமிறங்கக்கூடும் என்ற தகவல் பரவி வரும் நிலையில், இந்த ஆலோசனைக்கூட்டம் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பையும் முக்கியத்துவத்தையும் ஏற்படுத்தியுள்ளது.அதேவேளையில், கடந்த சில நாட்களாகக் கட்சிப் பணிகளிலிருந்து…

Read More

“பெண்களே, சிறுமிகளே: உதவி செய்வதாக தவெகவினர் வந்தால் காவல்துறையை அணுகுங்கள்”எடப்பாடி பழனிசாமி

சென்னை, அக். 25-கன்னியாகுமரியில் கல்லூரி மாணவி ஒருவருக்கு தவெக நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.“கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே பேருந்துக்காகக் காத்திருந்த கல்லூரி மாணவிக்கு உதவுவது போல நடித்து ஆளுங்கட்சி தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.‘பெண்களைக் காப்பதில் நம்பர் 1 ஆட்சியாக இருக்கும்’ என்று சொல்லியபோது தனது கட்சிக்காரர்கள் இருப்பதை…

Read More