சீன ஆடை இறக்குமதி அதிகரித்து வருவதால் ஜவுளிச்சந்தை பாதிக்கும்பின்னலாடை உற்பத்தியாளர்கள் கவலை
திருப்பூர், அக். 27-சீனாவில் இருந்து ஆடை இறக்குமதி தொடர்ந்து அதிகரித்து வருவதால், உள்நாட்டு ஜவுளிச்சந்தை பாதிக்கும்’ என, பின்னலாடை உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.வட மாநிலங்களில் உள்ள பிரபல சந்தைகளுக்கு, குறைந்த விலையிலான வெளிநாட்டு ஆடை இறக்குமதி அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வடமாநில சந்தைகளுக்கு, சீனாவில் இருந்து ‘பேப்ரிக்’ மற்றும் மலிவு விலை ஆடைகள் அதிகம் விற்பனைக்கு வந்துள்ளன. வெளிநாட்டு ஆடை இறக்குமதி அதிகரித்து வருவதால், உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர் மட்டுமல்லாமல், வேலை வாய்ப்பு, ‘ஜாப் ஒர்க்’ நிறுவனங்களும்…
