அனைத்துத் துறைகளிலும் அமைச்சர் ஆதவ்வின் ஆதிக்கம்-கொதிக்கும் அதிகாரிகள்


சென்னை, அக். 27-
ஆட்சி நிர்வாகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் ஆதிக்கம் அனைத்துத் துறைகளிலும் தீவிரமாக தலையீட்டால் எங்கே போய் முறையிடுவது என்று தெரியாமல் மற்ற துறைகளுக்கான அமைச்சர்கள் தவியாய் தவித்துக் கொண்டு இருக்கிறார்களாம். மந்திரி சபை பட்டியல் தயாரிக்கும்போதே தனது தரப்பு ஆட்கள் சிலரை மந்திரிகளாக தந்திரமாக அமரவைத்துவிட்டார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா.
மந்திரிகளின் அசைவு
களை எல்லாம் தனது கன்ட்ரோலில் வைத்து
க்கொண்டார். இன்னும் சில ஜூனியர் மந்திரிகளின் இலாக்காக்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடிவு எடுத்தி
ருக்கிறாராம். இதற்காக சில அமைச்சர்களிடமும், தனக்கு விசுவாசமான ஒருவரை உதவியாளராக திணித்து வைத்துள்ளார். அவர்கள் மூலமாக முக்கிய கோப்புகளின் தரத்தை தெரிந்து கொண்டு டீல்களை முன்கூட்டியே முடித்து விடுகிறாராம்.
இதனால் பொங்கி எழுந்த சில அமைச்சர்கள் இந்த விஷயத்தை பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்திடம் முறையிட்டார்களாம். அவரரோ “நான் பாத்துக்கறேன்” என்று சொல்லிவிட்டு அவர் அவர் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறர்.
அண்மையில், தலைமைச்செயலகத்தில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது 6 அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள். ஆனால் அமைச்சர் ஆதவ் மட்டும் நிதித்துறையின் உயர் அதிகாரியை தன் பக்கத்தில் வைத்துக் கொண்டு, அனைத்து தரப்பு விவசாய சங்க பிரதிநிதிகளுடன் தானே அனைத்தையும் பேசினாராம்.
சம்பந்தப்பட்ட துறை அமைச்சரோ எதுவும் பேசாமல் மூச்சுவிடக்கூட விடவில்லையாம். எதற்கோ அமைச்சர் ஆனந்த் பதில்சொல்ல முயன்றபோதுகூட, “கொஞ்சம் அமைதியா இருங்கண்ணே. நான் பேசிக்கிறேன்” என்று சொல்லி அமைச்சர் ஆனந்த்தையும் ஓரம் கட்டிவிட்டார். இதில் அமைச்சர் ஆனந்த்திற்கு கடும் பேரதிர்ச்சியாக இருந்தது. கூடுதல் தகவல் என்னவென்றால், சக அமைச்சர்களின் துறைகளில் மட்டுமல்லாது முதல்வரின் முக்கியத் துறைகளிலும் ‘முடிந்தவரைக்கும்’ உள்ளே புகுந்து காரியங்களை சாதித்து வருகிறார் என கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன