அழகா்கோவில் தைலக்காப்பு உத்ஸவம்:நூபுர கங்கையில் நீராடினாா் சுந்தரராஜப் பெருமாள்
மதுரை, அக்.25-அழகா்கோவில் கள்ளழகா் கோயிலில் நடைபெறும் தைலக்காப்பு உத்ஸவத்தையொட்டி, சுந்தரராஜப் பெருமாள் (உத்ஸவா்) நூபுர கங்கையில் நீராடும் நிகழ்ச்சி நடைபெற்றது.உத்ஸவத்தின் மூன்றாவது நாளாளன்று சுந்தரராஜப் பெருமாள் நூபுர கங்கையில் நீராடும் வைபவம் நடைபெற்றது. இதையொட்டி, சுந்தரராஜப் பெருமாள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பாரம்பரிய பாதைகள் வழியாக புறப்பாடாகி மலை மீதுள்ள ராக்காயி அம்மன் கோயில் மண்டபத்தில் எழுந்தருளினாா்.இங்கு, சுந்தரராஜப் பெருமாளுக்கு பல்வேறு வகையான வாசனை தைலங்களைக் கொண்டு தைலக்காப்பிடப்பட்டது. பின்னா், பகல் சுமாா் 12 மணி அளவில் மலை…
