விருதுநகர் அரசு மருத்துவமனையில் சோலார் பேனல்கள் எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
விருதுநகர், நவ. 3-விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரியில் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்காக சோலார் பேனல்கள் நிறுவப்பட்டது. ஆனால் 4 ஆண்டுகளை கடந்தும் பொதுப்பணித்துறை அலட்சியத்தால் இதுவரை முழு பயன்பாட்டுக்கு வராததால் அதிக மின் கட்டணம் செலுத்தும் நிலை உருவாகியுள்ளது.விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை 2022 ஜன.12ல் திறக்கப்பட்டது. கல்லுாரியின் முக்கிய தேவையான மின்சாரத்தை கல்லுாரி வளாகத்திலே உற்பத்தி செய்வதற்காகவும், கட்டணத்தை குறைப்பதற்காகவும் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.ஆனால் அரசு மருத்துவக்கல்லுாரி…
