கால்நடைகள் சாலையில் திரிந்தால் மதுரை மாநகராட்சி எச்சரிக்கை
மதுரை, நவ.3-மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலைகள், பொது இடங்களில் சுற்றித் திரியும் கால்நடைகளைப் பிடிக்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், நேற்று வைகை ஆற்றின் வடகரை மற்றும் தென்கரைப் பகுதிகளில் சுற்றித் திரிந்த 4 மாடுகள் மற்றும் ஒரு கன்றுக்குட்டி பிடிக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஜூன் 2026 முதல் தற்போது வரை மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றித் திரிந்த 94 கால்நடைகள் பிடிக்கப்பட்டு, கால்நடைப்…
