விஜய் ஆதரவு vs விஜய் எதிர்ப்பு:காங்கிரசுக்குள் மீண்டும் கோஷ்டி மோதல்

சென்னை. நவ. 12-எல்லா காட்சியிலும் கோஷ்டி மோதல் இருக்கும்.. ஆனால் கோஷ்டி மோதலிலேயே ஒரு கட்சி இருக்கும் என்றால். அது கதர் கட்சியான காங்கிரஸ்தான். அப்படிப்பட்ட கதர் கட்சி இப்போது முதல் விஜய்யின் முடிவு ஒன்றால் கதறும் கட்சியாகிவிட்டதாம்.விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு எடுத்திருக்கும் ஒரு அதிரடி முடிவு, மாநில அரசியலில் மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான அதிகாரப் பகிர்வு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி குரியன்…

Read More

“முதலமைச்சர் விஜய் உடனடியாகப் பதவி விலக வேண்டும்” – நயினார் நாகேந்திரன்

சென்னை, நவ. 12-பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “பொதுமக்களுக்கும் பாதுகாப்பில்லை, ஆட்சியாளர்களுக்கும் பாதுகாப்பில்லை. சட்டம் – ஒழுங்கைச் சீரழித்த முதல்வர் ஜோசப் விஜய் உடனடியாகப் பதவி விலக வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.இது குறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில், “கள்ளக்குறிச்சி மாவட்டப் பெண் ஆட்சியருக்கு, ஆளும் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் முறையற்ற எண்ணத்துடன் வாட்ஸ்அப் செய்தி அனுப்பியதாகவும், பின்னர் மதுபோதையில் அவரது இல்லத்திற்கே சென்று ரகளையில் ஈடுபட்டதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஒரு…

Read More

முதன்முறையாக கருணாநிதியிடம் பேசும்போது பதட்டமும் பயமும் இருந்தது: சோனியா காந்தி

புதுடெல்லி, நவ. 12-காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதையான ‘Belonging: A Journey of Love’ புத்தகம் நாடு முழுவதும் வெளியிடப்பட்டுள்ளது.544 பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தை ஹார்ப்பர் காலின்ஸ் இந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய இத்தாலியில் தனது குழந்தைப் பருவம், கேம்பிரிட்ஜில் ராஜீவ் காந்தியைச் சந்தித்தது, இந்தியாவில் தனது வாழ்கை மற்றும் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி ஆகியோரின் குடும்ப இழப்புகள் தன்னை எவ்வாறு வடிவமைத்தன…

Read More

செஞ்சி சிறுமி மாயம்: 32 நாட்களுக்கு மேலாகியும் எந்த தகவலும் இல்லை

விழுப்புரம், நவ. 12-கடந்த அக்டோபர் 11 அன்று இரவு தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, தாய் மற்றும் பாட்டியின் அருகில் படுத்து உறங்கிய குழந்தை நள்ளிரவில் திடீரெனக் காணாமல் போனார்.ஒரு மாதத்திற்கும் மேலாகியும் குழந்தை எங்கே என்ற எந்தவொரு உறுதியான நல்ல தகவலும் கிடைக்காமல், உள்ளூர் போலீஸ் தோல்வி, சிபிசிஐடி திணறல் என ஒட்டுமொத்த வழக்கும் தேக்கமடைந்து நின்றது. இதனால் அதிருப்தி அடைந்த உறவினர்களும் கிராம மக்களும் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து…

Read More

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின்வங்கி கணக்குகளில் 22 கோடி மோசடி

சென்னை, நவ. 12-தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின் வங்கிக் கணக்குகளில் இருந்து டிஜிட்டல் முறையில் 22 கோடியே 10 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில், விசாரணை தொடங்கியது.ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் 14 கோடி ரூபாயும், நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்தில் 3 கோடியே 10 லட்சம் ரூபாயும், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 5 கோடி ரூபாயும் மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் ெளியாகியுள்ளது. வங்கிக் கணக்குகளில் இருந்து ஊராட்சிகளுக்குப் பணம் செலுத்துவதற்காக உருவாக்கப்பட்ட…

Read More

வைகோ போன்ற மூத்த தலைவருக்கு இது அழகல்ல- சண்முகம்

சென்னை, நவ. 12-சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, ‘ஆளும் கட்சியுடன் கூட்டணியில் உள்ள இரண்டு கட்சிகளின் தலைவர்கள் தினமும், முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியைக் குறை சொல்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்.அதுவும், அமைச்சரவையில் இருந்துகொண்டே ஆளும் கட்சியைக் குறை சொல்கிறார்கள். பொழுது விடிந்தால் போதும், ஆளும் கட்சியைக் குறை சொல்லாமல் அவர்கள் சாப்பிடுவதில்லை’ என்று கூறியிருந்தார்.இந்நிலையில், ‘சுட்டிக்காட்டும் குறைகளில் எது சரி, தவறு என சொல்லலாம். ஆனால் ஏன் கேள்வி கேட்கிறீர்கள்? என…

Read More

கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயம் :சீமானுடன் பேச்சு நடத்திய தம்பிகள்

சென்னை, நவ. 12-அம்பை தொகுதியில் சீமான் களமிறங்கும் முடிவை அவர் மட்டும் தனிச்சையாக எடுத்தது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை புலம்ப வைத்திருக்கிறது. நாதகவின் வாக்கு சதவிகிதம் தொடர்ந்து குறைந்து வரும் சூழலில், மீண்டும் ஒரு தோல்வியை எதிர்கொள்ளக் கூடிய வலிமை கட்சியினருக்கு இல்லை என்றும் பேசத் தொடங்கியுள்ளனர்.சட்டசபைத் தேர்தலில் நாதக போட்டியிட்ட 234 தொகுதிகளில் டெபாசிட் இழந்து படுதோல்வியை சந்தித்தது. 8.2% வாக்குகளை வைத்திருந்த நாதகவின் வாக்குகள், 4%ஆக குறைந்தது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி…

Read More

பாவம் பெண் கலெக்டர்: யாருக்கும் பாதுகாப்பு இல்லை- கனிமொழி

சென்னை, நவ. 12-தவெகவினர் அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். துணை சபாநாயகர் மீது அடிதடி புகார், பெண் மாவட்ட ஆட்சியருக்கே ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய எம்எல்ஏ என சர்ச்சைகள் நீண்டு வருகிறது. தவெகவினர் தமிழகத்திற்கு எதிராக படையெடுத்துள்ளனர். அதிகாரிகள் மக்கள் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என கனிமொழி வேதனை தெரிவித்துள்ளார்.சென்னையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இந்த ஆட்சியில் யாராக இருந்தாலும் பாதுகாப்பு இல்லை. எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு…

Read More

முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெகஎம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் நடந்தது

சென்னை, நவ. 12-சென்னை தனியார் விடுதியில் நேற்று காலை 11 மணிக்கு தவெகவின் 109 எம்.எல்.ஏக்களையும் நேரில் அழைத்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். முதல்வர் விஜய்.நவம்பர் 13 ஆம் தேதிக்குப் பிறகு ஆட்சியின் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர வாய்ப்பிருப்பதால் அதற்கு முன்னெச்சரிக்கையாகத்தான் இந்த கூட்டம் நடைபெற்றது.கடந்த மே 13 ஆம் தேதி சட்டமன்றத்தில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபித்தது. மரபுப்படி பெரும்பான்மை நிரூபிக்கப்பட்ட 6 மாதங்களுக்கு பிறகே அடுத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை…

Read More

தமிழ்நாட்டில் என்ன தான் நடக்குது?ஆளுநரிடம் அறிக்கை கேட்ட மத்திய அரசு

புதுடெல்லி, நவ. 12-தீபாவளி பண்டிகையின் போது அரங்கேறிய அடுத்தடுத்த கொலை சம்பவங்களை தொடர்ந்து, மத்திய அரசு சட்ட-ஒழுங்கு தொடர்பான அறிக்கையை கோரியுள்ளதாம்.தமிழ்நாட்டில் நிலவும் சட்ட-ஒழுங்கு நிலை தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும் படி, மாநில ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை மத்திய உள்துறை அமைச்சகம் கோரியுள்ளதாம். அடுத்தடுத்து நிகழும் கொலை சம்பவங்கள் மற்றும் தவெக தலைமையிலான அரசின் மீதான எதிர்க்கட்சிகளின் தீவிரமான விமர்சனங்களுக்கு மத்தியில், இந்த தகவல் வெளியாகியுள்ளது. சமீப காலமாக நடந்த குற்றச்சம்பவங்கள் மற்றும் பொது…

Read More