விருதுநகர் அரசு மருத்துவமனையில் சோலார் பேனல்கள் எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

விருதுநகர், நவ. 3-விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரியில் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்காக சோலார் பேனல்கள் நிறுவப்பட்டது. ஆனால் 4 ஆண்டுகளை கடந்தும் பொதுப்பணித்துறை அலட்சியத்தால் இதுவரை முழு பயன்பாட்டுக்கு வராததால் அதிக மின் கட்டணம் செலுத்தும் நிலை உருவாகியுள்ளது.விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை 2022 ஜன.12ல் திறக்கப்பட்டது. கல்லுாரியின் முக்கிய தேவையான மின்சாரத்தை கல்லுாரி வளாகத்திலே உற்பத்தி செய்வதற்காகவும், கட்டணத்தை குறைப்பதற்காகவும் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.ஆனால் அரசு மருத்துவக்கல்லுாரி…

Read More

ராமநாதபுரம்: மனநலம் பாதித்த பெண்களுக்கு பாலியல் சீண்டல்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

ராமநாதபுரம், நவ.3-ராமநாதபுரம் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்,ஆதரவின்றி சுற்றித்திரியும் பெண்கள், முதியோர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. பாலியல் சீண்டல் உள்ளிட்ட அச்சுறுத்தல் ஏற்படுவதால் பாதுகாப்பாக மீட்டு மறுவாழ்வு அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்றோர் சாலையோரங்கள், பஸ் ஸ்டாண்ட், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பொது இடங்களில் ஆதரவின்றி வாழ்கின்றனர். இவர்கள் உணவு, குடிநீர், உடை உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு பிறரைச் சார்ந்திருக்கும் நிலை உள்ளது.குடும்பத்தின் ஆதரவு இல்லாததால் தங்களது…

Read More

புதுக்கோட்டை: திமுகவினர் லட்டு கொடுக்கமுயன்றதை தடுத்த போலீசார்- பரபரப்பு

தஞ்சாவூர், நவ.3-புதுக்கோட்டையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் திறந்து வைத்தார். அதற்கு முன்னதாக பொதுமக்களுக்கு லட்டு வழங்க முயன்ற திமுகவினரை போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து போலீசாருக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. புதிய பேருந்து நிலையம் மற்றும் உள்விளையாட்டு அரங்கம் ஆகியவை திமுக ஆட்சிக்காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டி முடிக்கப்பட்ட திட்டங்கள் என்பதால் அவற்றின் திறப்பு விழாவை வரவேற்று இனிப்பு வழங்க விரும்புவதாக திமுகவினர் தெரிவித்தனர்.புதுக்கோட்டை நகரின் பழைய…

Read More

அதிமுகவில் எந்த பிரச்சினை இல்லை:இடைத் தேர்தலில் தவெக ஜெயிக்காதுதிண்டுக்கல் சீனிவாசன் திட்டவட்டம்

திண்டுக்கல், நவ. 3-அதிமுகவிற்குள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. அதிமுகவில் எங்களைத் தவிர அனைவரும் இளைஞர்கள் தான். அதிமுகவிலிருந்து மூன்று நபர்கள் தான் விலகி இருக்கிறார்கள்.அவர்கள் சென்றதனால் எந்த ஒரு ஆபத்தும் எங்களுக்கு கிடையாது எனக் கூறியுள்ளார் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன். 100 கிலோமீட்டர் ரோட் ஷோ தமிழக முதல்வர் சென்றாலும் அவருக்கு வரக்கூடிய தேர்தலில் வெற்றி கிடைக்காது என்றும் சாடியுள்ளார்.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் 2014 ஆம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு வழங்கப்பட்ட…

Read More

அம்பையில் வெள்ளத்துரை தான்அதிமுக வேட்பாளர்? சீமானுக்கு ஏமாற்றம்

நெல்லை, நவ.3-அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவது உறுதி என்றும், தற்போது அதிமுகவில் இணைந்துள்ள என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை தான் வேட்பாளராக களமிறக்கப்படுவார் எனவும் தகவல்கள் பரவி வருகின்றன.ஏற்கனவே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்கு போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீமான் பொதுவேட்பாளராக நிறுத்தப்படுவார் என பேசப்பட்ட நிலையில் வெள்ளத்துரை களம் காண இருப்பதாக கூறப்படுகிறது.அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வென்றவர் இசக்கி சுப்பையா. தேர்தல் முடிவுக்கு பின் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து…

Read More

“இந்திய கூட்டணி பேரணியில் ஏன் பங்கேற்கவில்லை” – சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கே விளக்கம்

புதுடெல்லி, நவ.3-தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்திய கூட்டாணி தலைவர்கள் சார்பில் நேற்று பேரணி நடைபெற்றது.இந்தப் பேரணிக்கு ஆதரவு தெரிவித்த சிஜேபி அதில் கலந்துக்கொள்ளப்போவதில்லை எனவும் அறிவித்தது. சனிக்கிழமை மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அபிஜித் தீப்கே, இந்தியா கூட்டணியின் போராட்டத்திற்கு நாங்கள் முழு ஆதரவையும், தோழமையையும் தெரிவிக்கிறோம். ஆனால், காக்ரோச் ஜனதா கட்சி என்பது ஒரு சுயசார்புடைய அமைப்பு. இது…

Read More

சீமானுக்கு திமுக ஆதரவா? அறிவாலயத்தில் ரகசிய ஆலோசனை

சென்னை, நவ. 3-தமிழ்நாடு அரசியல் களம் இப்போது அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலை மையமாகக் கொண்டு புதிய திருப்பத்தை எட்டியுள்ளது.சமீபத்தில் நடந்து முடிந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் போராடி வெற்றி பெற்றது. எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தனித்தனியாக நின்றதால் வாக்குகள் சிதறி, தவெக வெற்றியைத் தன்வசமாக்கியது.இந்த நிலையில், அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையாவின் ராஜினாமாவால் காலியான அம்பாசமுத்திரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின்…

Read More

அதிமுகவின் நெருக்கடியை தவிர்க்கடிசம்பர் 31-பொதுக்குழு கூட்டம்

சென்னை, நவ.3-தமிழக அரசியல் களத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) மீண்டும் ஒரு கடுமையான உட்கட்சிப் புயலின் மையப்புள்ளியாக மாறியிருக்கிறது.கடந்த காலங்களில் ‘இபிஎஸ் Vs சசிகலா’ என்று இருந்தது. பின்னர் ‘ஓபிஎஸ், இபிஎஸ் Vs சசிகலா’ என்றும், ‘இபிஎஸ் Vs சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் Vs இபிஎஸ் ‘ எனத் தொடர்ச்சியான அதிகார மோதல்களைச் சந்தித்த அதிமுக, தற்போது கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கிடையேயான புதிய உள்முரண்பாடுகளால் மேலும் தத்தளித்து வருகிறது.சமீபத்தில் நடந்து…

Read More

‘வாக்குத் திருட்டு’ பூகம்பம்:மோடி – அமித்ஷா ஆட்சி முடிவுக்கு வருகிறதுஎதிர்க்கட்சிகள் இம்பீச்மெண்ட் அதிரடி

புதுடெல்லி, நவ.3-தேசிய அரசியலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மத்திய ஆளும் பாஜக அரசுக்கு எதிரான எதிர்ப்பலைகள் அனல் பறக்கத் தொடங்கியுள்ளன.வாக்குத் திருட்டு விவகாரங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடுத்துள்ள அதிரடித் தாக்குதல், டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.“2029 வரை காத்திருக்கத் தேவையில்லை!” – கே.சி.வேணுகோபால் அதிரடி முழக்கம்!”“2029 பாராளுமன்றத் தேர்தல் வரை அமித்ஷாவும் மோடியும் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை; வெகுவிரைவிலேயே அவர்கள் இருவரும் பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவார்கள்!”…

Read More

புதுக்கோட்டை: புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் திறந்து வைத்து14000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

புதுக்கோட்டை, நவ.3-முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் முதல்முறையாக நேற்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்தார். இதையொட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு புறப்பட்டு அங்கிருந்து புதுக்கோட்டைஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் அவர் இறங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.புதுக்கோட்டை நகரில் சுமார் 4 கி.மீ. தூரம் காரில் பயணம் மேற்கொள்ளும் விஜய், வழியில் பொதுமக்களை சந்தித்தார். இதைத்தொடர்ந்து அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில்…

Read More