மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தனியார் நிறுவன ஒப்பந்தப் பணியாளர்கள் வேலைநிறுத்தம்
மதுரை, நவ.4-மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தப் பணியாளர்கள் 750-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.இவர்கள் ஊதிய உயர்வு, வார விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த அக்டோபரில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், மன் அருள் சுந்தரேசkumar தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அவர்களுக்கு ஊதிய உயர்வு, வார விடுமுறை வழங்குவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைவருக்கும் ஊதிய விவரச் சீட்டு வழங்கப்படும், பிடித்தம் செய்யப்படும் பணம் குறித்த விவரம் தெரிவிக்கப்படும், நாள்தோறும்…
