முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெகஎம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் நடந்தது

சென்னை, நவ. 12-
சென்னை தனியார் விடுதியில் நேற்று காலை 11 மணிக்கு தவெகவின் 109 எம்.எல்.ஏக்களையும் நேரில் அழைத்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். முதல்வர் விஜய்.
நவம்பர் 13 ஆம் தேதிக்குப் பிறகு ஆட்சியின் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர வாய்ப்பிருப்பதால் அதற்கு முன்னெச்சரிக்கை
யாகத்தான் இந்த கூட்டம் நடைபெற்றது.
கடந்த மே 13 ஆம் தேதி சட்டமன்றத்தில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபித்தது. மரபுப்படி பெரும்பான்மை நிரூபிக்கப்பட்ட 6 மாதங்களுக்கு பிறகே அடுத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் முன்னெடுப்பர். அந்தவகையில் தவெக அரசு பெரும்பான்மையை நிரூபித்து நவம்பர் 13 ஆம் தேதியோடு ஆறு மாத காலம் முடிவடைந்தது.
இந்நிலையில்தான், முன்னெச்சரிக்கையாக தவெகவின் அத்தனை எம்.எல்.ஏக்களையும் சென்னை வரவழைத்து முதல்வர் சந்தித்தார். ஈ.சி.ஆரில் உள்ள தனியார் விடுதியில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒவ்வொரு எம்.எல்.ஏவாக அலைபேசியில் தொடர்புகொண்ட அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், தீபாவளி வாழ்த்துகளோடு புதன் கிழமை ஒரு முக்கிய கூட்டம் இருக்கிறது சென்னை வந்துவிடுங்கள் எனவும் கூறியிருந்தார். கூட்டம் எங்கே நடக்கும் என்பதை பின்னர் தெரிவிக்கிறோம் என தலைமை சார்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இதிலேயே பல எம்.எல்.ஏக்களும் குழப்பமடைந்தனர்.
வழக்கமாக இதேமாதிரியான கூட்டங்கள் அனைத்தும் பனையூரில்தானே நடக்கும். இப்போது என்ன புதிதாக என தங்களுக்குள்ளேயே மாறி மாறி போன் அடித்து பேசியும் எதுவும் புலப்பட
வில்லை. பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் நேற்று முன்தினமே சென்னை வந்தடைந்து
விட்டனர். அவர்கள் வந்த தகவலை தலைமைக்கு ேபான் செய்த போதும் கூட்டம் நடக்கும் இடத்தினை மட்டும் தலைமை சொல்லவே இல்லை. நேற்று காலை வரைக்குமே எம்.எல்.ஏக்களுக்கு எங்கே எத்தனை மணிக்கு கூட்டமென தெரியப்படுத்தவே இல்லை. நேற்று காலை 9 மணிக்குதான் ஈ.சி.ஆரில் ஒரு ரெசார்ட்டில் 11 மணிக்கு கூட்டமென தகவல் கொடுத்தனர். நகருக்குள் தங்கியிருந்த எம்.எல்.ஏக்கள் ஈ.சி.ஆர் ரெசார்ட்டுக்கு சென்றனர்.
இதற்கிடையில் ரெசார்ட்டில் 3 நாட்களுக்கு அறைகள் புக் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வரவே, என்னதான் நடக்கப் போகிறது. ஏன் இவ்வளவு ரகசியம் என்கிற குழப்பத்துடனேயே எம்.எல்.ஏக்கள் ஈ.சி.ஆருக்கு பயணித்தனர்.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய முதல்வருக்கு நெருக்கமான சீனியர்கள் சிலர், ‘நவம்பர் 13 க்குப் பிறகு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படலாம். அதை மையமாக வைத்து எங்களின் எம்.எல்.ஏக்களுக்கு திமுகவினரும் அதிமுகவினரும் தூண்டில் போட முயல்கின்றனர். இதுசம்பந்தமாக எம்.எல்.ஏக்களை எச்சரித்து முக்கியமாக சில அறிவுரை
களையும் முதல்வர் வழங்கவிருக்கிறார். அந்தத் தகவல்கள் வெளியில் கசியக்கூடாது என்பதற்காக
த்தான் கட்சி அலுவலகத்தில் கூட்டத்தை நடத்தாமல் ரெசார்ட்டில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது’ என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *