ரூ.10 லட்சம் வாங்கிட்டு போஸ்டிங் போடுறது கேவலமா இல்லை?தவெக எம்எல்ஏ கட்டுக்கட்டாக பணம்100 வீடியோ, ஆடியோ இருக்குகட்சி நிர்வாகிகளின் ஆடியோக்கள் அடுத்தடுத்து ரிலீசாவதால் பரபரப்பு

மதுரை, அக். 24-
ரூ.10 லட்சம் வாங்கி போஸ்டிங் போடுவதாக மதுரை தவெக எம்எல்ஏ மதார் பதூருதீன் மீது நேரடியாக குற்றம் சாட்டி, அக்கட்சி பிரமுகர் ஆடியோ வெளியிட்டுள்ளார்.
அடுத்தடுத்து ஆடியோக்கள் வெளியாகி வருவது அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ முஸ்தபா (எ) மதார் பதூருதீன். இவரது உதவியாளர் கனி என்பவர், கட்சி, கவுன்சிலர் பதவிக்கு ரூ.15 லட்சம் வரை பணம் கேட்டு பேரம் பேசும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆடியோவிற்கு பதிலளித்த மதார் பதூருதீனும், எத்தனை ஆயிரம் ஆடியோக்கள் வந்தாலும் அதை சந்திக்க தயார் என கூறியிருந்தார்.
இந்நிலையில், தவெகவை சேர்ந்த ஜோயல் ஆசிர், எம்எல்ஏ மதார் பதூருதீன் மீது கடுமையாக குற்றம் சாட்டி வெளியிட்டுள்ள ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை-ராமநாதபுரம் மண்டல முன்னாள் பேராயரான கிறிஸ்டோபர் ஆசிரின் மகனான ஜோயல் ஆசிர் வெளியிட்டுள்ள ஆடியோவில் கூறியிருப்பதாவது: நான் மதுரையில் இருந்து ஜோயல் பேசுறேன். என்னுடைய கேரக்டர் என்னன்னு உங்களுக்கு தெரியும், என் பணத்தை எவ்வளவோ செலவழிக்க நான் தயார்… அடுத்தவன் பணம் எனக்கு வேணாம். ஆனா இங்க பணம் வாங்கி, பண ஆசை புடிச்சு பண்ணுற அரசியல்தான், இப்ப மதுரையில் நடந்து வருது…
எனக்கு நிறைய போன் வந்து இதற்கு காரணம் நீங்க தான்னு சொல்றாங்க. திருடனுகளுக்கு தான் பயம் இருக்கணும். எவன் பாக்கெட்டில் பணம் போய் சேர்ந்துச்சோ…? நீ பயந்துக்கோ. நாங்க பயப்பட மாட்டோம். பதவிக்கு எவன் கை நீட்டி காசு வாங்குனானோ அவன் அனுபவிக்கட்டும். ஆனால், நல்லவங்க எங்கள போன் பண்ணி தொந்தரவு செய்கிறார்கள். நான் பேசும் இந்த பதிவு உண்மை தான். இன்னும் வேண்டும் என்றால் 100 ஆடியோ பதிவு இருக்கு. வாங்கி தின்ன நாய்களுக்கு அறிவு வேணும். தளபதி விஜய் ஊழலை ஒழிக்கத் தான் வந்திருக்கோம்னு சொல்லியிருக்காரு. அப்படிப்பட்ட இடத்துல நின்னுகிட்டு இது தேவையா?
என்கிட்ட, 10 லட்சம் தரணும்.. வாங்கிட்டு தான் போஸ்டிங் போட்டாருன்னு சொல்றாங்க. இது கேவலமா இல்லையா? இதனால ஒரு பிரச்னை வந்துச்சுன்னா அதுக்கு காரணம் மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா தான். பாய் அன்னைக்கே டேய் நிப்பாட்டுங்கடா, பணத்தை பத்தி பேசாதீங்கடான்னு சொல்லியிருக்கலாம். ஆனா சொல்லல. அப்ப காரணம் யாரு? எம்எல்ஏ முஸ்தபா தான். இன்னும் என்னை சீண்டி பார்க்காதீங்க. கை நீட்டி காசு வாங்குனா நல்லதையும், கெட்டதையும் அனுபவிங்கடா நாய்களா… எனக்கு போன் வந்ததால் இந்த பதிவு, லட்சம் பேர் கேட்கட்டும் இந்த பதிவை…
பணத்தாசையினால இது எங்க போய் முடிய போகுதுனு பாருங்க… என்கிட்ட பணம் எங்க போயிட்டு வந்துச்சு… கட்டுக்கட்டா வீடியோ அப்படியே பத்திரமா வச்சிருக்கேன். வீடியோ ஆதாரத்தோட இருக்கு… தேவைப்பட்டா தலைவர் விஜய் கிட்டயும், பொதுச்செயலாளர் கிட்டயும் கொடுப்பேன், இல்ல மதுரை கமிஷனர் ஆபீஸ்ல கொடுப்பேன். இவ்வாறு பேசியுள்ளார். தற்போது வெளியாகியுள்ள இந்த 2வது ஆடியோ மதுரை தவெக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே பதவிக்கு பணம் பேரம் பேசிய விவகாரம் தொடர்பாக கட்சி தலைமை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தற்போது மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ மீதே நேரடியாக குற்றம் சாட்டி, ஆதாரங்கள் இருப்பதாக அதே கட்சியைச் சேர்ந்த நிர்வாகி பேசியிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி
யுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *