தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில்கள் ஆந்திராவுக்கு சென்றது ஏன்?கீர்த்தனா உளவாளியா? எடப்பாடி கண்டனம்

சென்னை, நவ. 22-அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவன ஊழியர்கள் மீது ஊடகங்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் ஏற்கதக்கது அல்ல.அவர்களின் பெரும்பாலானோர் அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள். தமிழகத்தின் தொழில்வளம் பெருக பணியாற்றிய அவர்களின் உழைப்பையோ, அர்ப்பணிப்பையோ கொச்சைப்படுத்த கூடிய எந்த ஒரு விஷயத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.இந்த ஆட்சியின் அலட்சியமான அணுகுமுறைகளை பார்த்து ஜூன் மாதமே கைடன்ஸ் தமிழ்நாடு ஊழியர்களில் பெரும்பாலானோர் பணியில் இருந்து விலகினர். அவர்களுக்கு 29.6.2026 அன்று ரிலீவ் கடிதம்…

Read More

பட்டணபாக்கம் மீனவர்களின் வாழ்விடத்தை அழிக்கத்துடிக்கும் தவெக அரசு – மு.க.ஸ்டாலின்

சென்னை, நவ. 22-உலகம் முழுவதும் இன்று மீனவர் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக மீனவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஜோதிடரின் பேச்சைக் கேட்டு மீனவர்களின் வாழ்விடத்தை அழிக்கத் துடிக்கிறது தவெக அரசு என்று விமர்சித்திருக்கிறார்.இது குறித்து அவர் தனது x பக்கத்தில், “மீனவச் சொந்தங்கள் அனைவருக்கும் கடலளவு அன்போடு உலக மீனவர்கள் தின வாழ்த்துகள். தமிழர் வரலாற்றிலும் பண்பாட்டிலும் நெய்தல் நில நாயகர்களான மீனவ மக்களுக்குத் தனிச்சிறப்பான இடம் உண்டு.அத்தகைய மீனவ மக்களுக்காக…

Read More

தவெகவில் வெடிக்கும் அதிகார யுத்தம்:ஜானுக்கு எதிராக களமிறங்கிய அமைச்சர்கள்

சென்னை, நவ. 22-ஆளும் கட்சிகளில் கோஷ்டிப் பூசல் வழக்கமான ஒன்றாக இருந்தாலும், தவெகவில் நிலவும் அதிகாரப் போட்டி தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. கீழ்மட்ட நிர்வாகம் முதல் மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகம் வரை பல்வேறு பிரச்சினைகள் நீடித்து வரும் நிலையில், ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் அடிதடி மோதல் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.முதலமைச்சர் விஜயைச் சுற்றி ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி, ஜெகதீஷ் ஆகிய மூவர் முக்கிய அதிகார மையங்களாகச்…

Read More

வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும்ஏர் ஹாரன்களை பயன்படுத்த தடை

மதுரை, நவ. 20-சாலைகளில் செல்லும் போது அதிக ஒலி எழுப்பி பொதுமக்களின் காதுகளை பதம் பார்க்கும் ஏர் ஹாரன்களை வாகனங்களில் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. ஆனால் தடை உத்தரவை மீறி மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இயக்கப்படும் சில தனியார் வாகனங்களில் ஏர் ஹாரன்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.இதனால் சாலைகளில் செல்லும் மற்ற வாகனஓட்டிகள், பாதசாரிகள் ஏர் ஹாரன் எழுப்பும் அதிக ஒலியால் அதிர்ச்சி அடைகின்றனர். மேலும், டூவீலரில் செல்வோரில் சிலர் அதிர்ச்சியில் கீழே விழுந்து…

Read More

சோழவந்தானில் மின் கசிவு காரணமாகசர்வேயர் வீட்டில் திடீர் தீ விபத்து

மதுரை, நவ. 20-மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 3வது வார்டு பசும்பொன் நகர் பகுதியில் குடியிருப்பவர் கண்ணாயிரம் பிள்ளை இவர் ஓய்வு பெற்ற சர்வேயர் இவரது மனைவி மகேஸ்வரி ஓய்வு பெற்ற ஆசிரியை இவரது மகன் ராம்குமார் தவெக வின் நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று மதியம் மூன்று மணி அளவில் பசும்பொன் நகரில் உள்ள இவரது வீட்டின் மாடியில் மின் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இவரது தந்தை படுத்து…

Read More

மதுரை நகரில் கானா பாட்டுப் போட்டு பைக் ரேஸ்: எல்லை மீறும் இளம்பெண்கள்

மதுரை, நவ. 20-மதுரை நகரில் ரேஸ் கோர்ஸ் சாலையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும். அப்பகுதியில் தல்லாகுளம் காவல் நிலையம் , மாவட்ட நீதிமன்றம், மாநகராட்சி மண்டல அலுவலகம், விளையாட்டுதிடல் உள்ளது. இங்கு தினமும் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இந்த சாலையில் இளைஞர்கள் அவ்வப்போது பைக் ரேசில் ஈடுபடுவதால் அப்பகுதிக்கு செல்லும் போது பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் செல்கின்றனர். இந்நிலையில் மாவட்ட நீதிமன்றம் அருகேயுள்ள ரேஸ்கோர்ஸ் சாலையில் 2 இளம் பெண்கள் ஹெல்மெட் அணியாமல் பைக்…

Read More

வீட்டின் பூட்டை உடைத்து18 பவுன் நகைகள் திருட்டு

மதுரை, நவ. 20-சிலைமான் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.மதுரை மாவட்டம், சிலைமான் அருகேயுள்ள ஜே.ஜே. நகரைச் சோ்ந்தவா் அழகராஜன் (52). இவா் நிலம் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறாா். இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம், கட்டிக்குளம் அருகேயுள்ள புதுக்குளம் கிராமத்தில் உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக செவ்வாய்க்கிழமை அழகராஜனும், இவரது மனைவியும் வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றனா்.பிறகு, அவா்கள் வீட்டுக்குத் திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது….

Read More

தமிழகத்தை இருண்ட காலத்துக்கு தள்ளிய தவெக: அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றச்சாட்டு

மதுரை, நவ. 20-இந்த 6 மாத தவெக ஆட்சியில் 800 படுகொலைகள் நடைபெற்றுள்ளது எனவும், தமிழகத்தை விட்டு பல்வேறு மாநிலங்களுக்கு தொழில் முதலீடுகள் சென்றதால் 30,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் இளைஞர்களுக்கு பறிபோய் இருக்கிறது என விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார். மேலும், தமிழ்நாட்டை இருண்ட காலத்திற்கு தள்ளியதுதான் தவெக அரசின் ஆறு மாத ஆட்சியின் சாதனையாக உள்ளது எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக மதுரையில் பேசியுள்ள அவர்,” 6 மாத தவெக ஆட்சியில் சாதித்தது என்ன? சறுக்கியது…

Read More

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில்24ந்தேதி திருக்கார்த்திகை தீபத் திருவிழா

மதுரை, நவ. 20-மீனாட்சி அம்மன் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நேற்று தொடங்கி நவ.27-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாளான இன்று காலை கொடியேற்றத்தை முன்னிட்டு கம்பத்தடி மண்டபத்திலுள்ள தங்க கொடிமரம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. உற்சவர் சன்னதியிலிருந்து மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேசுவரர் கொடிமரம் முன்பு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.பின்பு வேதமந்திரங்கள்…

Read More

புத்தகத்தின் ஒரு வரிகூட வாழ்க்கையை மாற்றும்: வெ. இறையன்பு

மதுரை, நவ. 20-மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக நடைபெற்ற நிகழ்வில், இறையன்பு பங்கேற்று, ‘கொடிது கொடிது முதுமையில் வறுமை’ என்ற தலைப்பில் பேசியதாவது:ஒரு புத்தகத்தில் இடம்பெற்ற ஒரே ஒரு வரிகூட ஒருவரின் வாழ்க்கையையே மாற்றிவிடும் ஆற்றல் கொண்டது. அத்தகைய வரியைக் கண்டறிவதற்கு பல புத்தகங்களைத் தேடிப் படிக்க வேண்டும். வைரத்தைத் தோண்டி எடுப்பதைப் போல, புத்தகங்களை ஆழ்ந்து வாசிக்கும்போது தான் வாழ்க்கையை மாற்றக்கூடிய கருத்துகள் கிடைக்கும். படிப்பதோடு நின்றுவிடாமல்,…

Read More