தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில்கள் ஆந்திராவுக்கு சென்றது ஏன்?கீர்த்தனா உளவாளியா? எடப்பாடி கண்டனம்

சென்னை, நவ. 22-
அதிமுக பொதுச்செய
லாளர் எடப்பாடி பழனிசாமி சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவன ஊழியர்கள் மீது ஊடகங்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் ஏற்கதக்கது அல்ல.
அவர்களின் பெரும்பாலானோர் அதிமுக ஆட்சியில் நியமிக்க
ப்பட்டவர்கள். தமிழகத்தின் தொழில்வளம் பெருக பணியாற்றிய அவர்களின் உழைப்பையோ, அர்ப்பணிப்பையோ கொச்சைப்படுத்த கூடிய எந்த ஒரு விஷயத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த ஆட்சியின் அலட்சியமான அணுகுமுறைகளை பார்த்து ஜூன் மாதமே கைடன்ஸ் தமிழ்நாடு ஊழியர்களில் பெரும்பாலானோர் பணியில் இருந்து விலகினர். அவர்களுக்கு 29.6.2026 அன்று ரிலீவ் கடிதம் கொடுத்து அனுப்பிவிட்டு, தற்போது அவர்கள் அனுப
வத்தின் அடிப்படையில் வேறு மாநிலத்தில் பணிபுரிந்து வருவதை தவறாக சித்தரித்து பேசுவது என்பது தரம்தாழ்ந்த செயல்.
தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் எல்லாம் ஆந்திர மாநிலத்திற்கு செல்வதற்கு இந்த அரசின், தொழில்துறை அமைச்சரின் கையாலாகத்தனம் தான் காரணம். அதை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ள வக்கில்லாமல், இப்படி பழிபோடும் படலத்தை சில ஊடக செய்திகள் வாயிலாக இந்த ஆச்சரியக்குறி அரசே செய்கிறதோ என்று தான் கேட்கத் தோன்றுகிறது.
ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு என தொழில் அமைக்க பாதகமான சூழலில் தமிழகத்தை தள்ளிவிட்ட இந்த (ஏ)மாற்று அரசு, தற்போது கைடன்ஸ் தமிழ்நாடு மீது ஏற்பட்டுள்ள இந்த களங்கத்திற்கும் பொறுப்பாகி உள்ளது. இதற்கான உரிய விளக்கத்தை முறையான செய்தியாளர் சந்திப்பு நடத்தி தமிழக மக்களுக்கு இந்த அரசின் முதல்வரும், தொழில்துறை அமைச்சரும் விளக்க வேண்டும்.
நடிகரை திரையில் கண்டு ரசிகர் ஈர்த்து போவது போல் அல்ல தொழில் ஈர்ப்பு. நமக்கான வாய்ப்புகளை கண்டறிந்து, தொழில் நிறுவனங்களிடம் முறையாக பேசி, அவர்களு
க்கான வசதிககளை செய்து, Ease Of Doing Business தமிழகத்தில் இருப்பதற்கான நம்பிக்கையை விதைத்து, வரும் புதிய தொழில் நிறுவனங்களில் உள்ளூர் தொழிலாளர்கள் அதிகம் வருவதை உறுதி செய்ய வேண்டும். இந்த பொறுப்பை கொஞ்சமா
வது வளர்த்து கொள்ள வேண்டுமென நம் மாநிலத்தின் மீதுள்ள உள்ளார்ந்த அக்கறையோடு இந்த அரசை வலியுறுத்து
கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த ஆப்ரேஷன்மோல் உருட்டைதான் இந்த ‘வெற்றி’ மாடல் அரசு உருட்டப்போகிறது என்றால், ஆந்திராவின் இன்றைய ஆளுங்கட்சிக்கு தேர்தல் வேலை பார்த்துவிட்டு வந்து தற்போது அமைச்சராக இருக்கும் கீர்த்தனா அவர்கள்தான் உங்கள் அமைச்சரவையின் துரந்தர்-ஆ? என்ற கேள்விக்கு பதில் சொல்ல தயாராகிவிட்டு வாருங்கள்… என்றும் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *